Ad Widget

12 மணித்தியாலத்துக்குள் ஃபானிப் புயல்!

இந்திய வானிலை அவதான நிலையம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் ஃபானி புயலாக வலுப்பெறுகிறது என்று இந்திய வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள தகவலில் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இது சென்னைக்கு தென் கிழக்கே 1210 கிலோ மீற்றர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 20 கிலோ மீற்றர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஃபானி புயலாக வலுப்பெறுகிறது.

புயல் 30 ஆம் திகதி மாலை வட தமிழகம் – தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நெருங்கும். 30 ஆம் திகதி புயலின் போது 120 முதல் 145 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது,

Related Posts