அதிரடி படையினரின் முற்றுகைக்குள் சிறீதரனின் வீடு!

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வீட்டு வளவில் முதலாவதாக படையினர் தேடுதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அறிவித்துள்ளார். அதன் பின்னர் தவறுதலாக தேடுதல் நடத்திவிட்டோம் என அடுத்த வளவிற்குள் பாதுகாப்பு தரப்பினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அப்பகுதியில் பெருமளவான ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து இவ்வாறு தேடுதல் நடவடிக்கை...

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டா களமிறங்குவதற்கு கூட்டமைப்பே காரணம் – கஜேந்திரன்

போர்க்குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளே பிரதானக் காரணமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். மேலும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழர்கள் நன்றாக சிந்திக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
Ad Widget

நல்லூர் ஆலய வீதியில் மின்சாரம் தாக்கியதில் முதியவர் படுகாயம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வீதியில் மின்சாரம் தாக்கிய முதியவர் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம், அவர் சுகநலத்துடன் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. நல்லூர் ஆலய வீதியில் மின்சாரம் தாக்கியதாக அம்புலன்ஸ் வண்டியில் அழைத்துவரப்பட்ட செல்லத்துரை ஜெகநாதன் (வயது – 64) என்ற முதியவர் இன்று காலை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு உரிய...

நவாலியில் இளைஞன் மீது தாக்குதல் – வீட்டு உபகரணங்களுக்கு தீவைப்பு

நவாலி வடக்கிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த அடாவடிக் கும்பல் அங்கிருந்த இளைஞனை வாளால் வெட்டிக் காயப்படுத்தியதுடன் வீட்டின் உபகரணங்களை பெற்றோல் ஊற்றிக் கொழுத்திவிட்டுத் தப்பித்தது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மானிப்பாய் நவாலி வடக்கில் நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் கையில் படுகாயமடைந்த சத்தியசீலன் சயந்தன் (வயது 20) என்ற இளைஞன் யாழ்ப்பாணம்...

புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிள் சில மணி நேரத்தில் கொள்ளையடிப்பு!!!

கடையில் இருந்து புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிள் சில மணி நேரத்திலேயே மர்மக் கும்பலினால் பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் இணுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் யாழ்ப்பணத்தில் உள்ள ஓர் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் 2 இலட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பெறுமதியான...

அமெரிக்க பிரஜையிடம் இருந்து 300 அமெரிக்க டொலர்களை சூறையாடிய இளைஞர்கள்!

கோண்டாவில் பகுதியில் வைத்து அமெரிக்க பிரஜை ஒருவரிடம் இருந்து 300 அமெரிக்க டொலர் பணத்தினை 2 இளைஞர்கள் பறித்துக்கொண்டு சென்ற சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்துக்கு சுற்றுப்பயணம் வந்த அமெரிக்க பிரஜை கோண்டாவில் பகுதியில் பயணித்துள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 2 இளைஞர்கள் அவரிடம்...

நல்லூரில் முகாமிட்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் – ஸ்ரீதரன்

நல்லூர் ஆலய வளாகத்தில் முகாமிட்டுள்ள இராணுவத்தினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இராணுவம் அங்கு தொடர்ந்தும் இருப்பதால், பக்தர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு...

ஐ.நாவை ஏமாற்றவே யாழில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் – உறவுகள் விசனம்

ஐக்கிய நாடுகள் சபையை ஏமாற்றும் நோக்கிலேயே, வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது. யாழில், நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அந்த அமைப்பின் இணைப்பாளர், மரிய சுரேஷ் ஈஸ்வரி இவ்வாறு கூறினார். மேலும், இதனை தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பு, தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு...

காணாமல் போன மகனைத் தேடி போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை உயிரிழப்பு!

வவுனியாவில் 913ஆவது நாட்களாக தனது 26 வயதுடைய மகனைத் தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை ஒருவர் சுகயீனமாக உயிரிழந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் காணாமல் போயுள்ள தங்களது உறவுகளைத் தேடி சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நேற்றுடன்(செவ்வாய்கிழமை) 913 ஆவது நாட்களை எட்டியுள்ளது. இந்நிலையில் 26 வயதான அச்சுதன் என்ற...

முல்லைத்தீவு பூவரசங்குளத்தில் சிசுவின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பூவரசங்குளப் பகுதியில், சிசு ஒன்றின் சடலம் குளம் ஒன்றின் அருகில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சிசுவை தாய், குளத்தில் அருகில் பிரசவித்திருக்கலாம் எaன்றும், அதன் பின்னர் குளத்தில் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. இதேவேளை, சிசுவின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன், சிசுவின் தாயையும்...

வைத்தியர் எஸ். சிவரூபன் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!!

பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். சிவரூபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றசாட்டில் வைத்தியர் எஸ். சிவரூபன் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கைதான பளை வைத்தியசாலை வைத்தியரின் விடுதலையை வலியுறுத்தியும், பதில்...

சங்கானையில் உணவங்கள் மற்றும் மருந்தகங்கள் மீது திடீர் சோதனை!!

வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சங்கானை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் ஆளுநர் செயலணி இணைந்து நேற்று(19) உணவங்கள் மற்றும் மருந்தகங்கள் மீது திடீர் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர். உணவகங்களின் தரம் மற்றும் சட்டத்திற்கமைவாக இயங்குகின்றனவா என்று மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின் போது 15...

இராணுவத்தளபதி நியமனத்திற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கடும் அதிருப்தி!

இராணுவத்தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளார். “லெப்டினன்ட் ஜெனரல் ஜெனரல் சில்வாவின் பதவி உயர்வு, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை கடுமையாக கேள்விக்குள்ளாக்குகிறது” என பச்லெட் தெரிவித்துள்ளார். “இந்த நியமனத்தால் நான் மிகவும் கவலையடைகிறேன். போரின்போது அவரும் அவரது துருப்புக்களும் எதிரான...

கோட்டாபய ராஜபக்சவுடன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சந்திப்பு!!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுடன் நேற்று நடந்த சந்திப்பு முழுமையான திருப்தியளித்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டுள்ளன. முக்கியமான பிரச்சினைகள் மற்றும் உடனடியாக தீர்வு காணப்படவேண்டிய விடயங்கள் என கருதப்படுபவற்றை பட்டியலிட்டு...

ஷவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தமை தமிழ் மக்களை எட்டி உதைத்தது போல் உள்ளது! – சுமந்திரன்

இராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வா நியமித்தமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் எம்.ஏ சுமந்திரன் இந்த பதிவை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், கடுமையான யுத்த குற்றங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை இராணுவத் தளபதியாக நியமித்தமை...

எச்சரிக்கையை மீறிய விடுதி மீதும் உரிமையாளர் மீதும் ஆவா குழு தாக்குதல்!!

கொக்குவில் – ஆடியபாதம் வீதியில் உள்ள விடுதியினை மூடுமாறு ஆவா குழுவால் அச்சுறுத்தல் விடுவக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஞாயிறு இரவு அந்த விடுதிக்குள் புகுந்த கும்பல் ஒன்று உரிமையாளர் மீது வாளால் வெட்டியதுடன், விடுதி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. சம்பவத்தில் விடுதியின் உரிமையாளர் கையில் காயமடைந்துள்ளார். கொக்குவில் ஆடியபாதம் வீதியில்...

மதுபோதையில் சிக்கிய சாரதிக்கு 77,500 ரூபா தண்டம்!!

உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் செலுத்தியமை மற்றும் மதுபோதையில் சாரத்தியம் செய்தமை உள்ளிட்ட குற்றங்களை புரிந்த ஒருவருக்கு 77 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபோதையில் சாரத்தியம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான்...

போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதியாக நியமனம்

புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். 23ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (திங்கட்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இந்த பதவியை வகித்திருந்தார். இந்நிலையில் அவரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்திருந்தது. இதனையடுத்து இராணுவத்தின் புதிய தளபதியை நியமிப்பது தொடர்பாக...

நான் அரசியல் செய்த காலத்தில் சுமந்திரன் பிறக்கவேயில்லை – ஆனந்தசங்கரி

தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்போம் என எழுத்துமூலமான உறுதிமொழியை தருபவர்களுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்ற வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என நினைப்பது முட்டாள்த் தனம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் அவர்...

கொக்குவிலில் உள்ள உணவகம் மீது தாக்குதல்!! – தாக்குதல் நடாத்தியவர்களில் ஒருவர் கைது

கொக்குவில் – பூநாறி மரத்தடிப் பகுதியில் உள்ள உணகவத்திற்குள் புகுந்த வன்முறைக் கும்பல், அங்கு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு சுமார் 9 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் காயமடைந்ததுடன், அங்கிருந்த பெறுமதியான பொருள்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. உணவகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர்...
Loading posts...

All posts loaded

No more posts