இராணுவத்தினர் குறித்து தமிழர்கள் அறிவர் – சவேந்திர சில்வா

இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் உண்மை நிலையை தமிழர்கள் அறிவார்கள் என இராணுவத்தளபதி லெப்.மேஜர் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மகாநாயக்க தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “சர்வதேசத்தினர் போர்க்குற்றங்கள் தொடர்பாக தற்போது கதைத்துக்கொண்டிருக்கிறார்கள். எமது நாட்டுக்கென,...

ஜனாதிபதியை சந்திக்கவுள்ளது கூட்டமைப்பு!

தமிழர்களின் பல்வேறுப்பட்ட தேவைகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளது. அதற்கமைய நாளை மறுதினம் (புதன்கிழமை) முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. காணி விடுவிப்பு, அத்துமீறிய குடியேற்றங்கள், மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து அன்றைய தினம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு...
Ad Widget

அவசரகால சட்டம் நீக்கம் – சோதனை, கைது, தடுத்து வைத்தலுக்கு பாதிப்பு இல்லை!! – பொலிஸ்

அவசரகால சட்டம் நீக்கப்பட்டமையானது தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சோதனை, கைது, தடுத்து வைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர் நாட்டில் அவசரகால சட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் அமுல்படுத்தப்பட்டது. இதேவேளை, நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவத்தின்...

சர்ச்சைகளுக்கு மத்தியில் காணாமலாக்கப்பட்டோரின் அலுவலகம் யாழில் திறப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிராந்திய அலுவலகமொன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) அதிகாலை இல.124, ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணத்தில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழில் திறக்கக்கூடாதென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. மாறாக திறக்கப்படுமாயின் அதற்காக போராட்டம் நடத்துவோமெனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோன்று...

யாழில் வெடிபொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணம்- அலியாவலாய் கடல் பகுதியில், மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் அடங்கிய பொதியொன்றை கடற்படையினர் மீட்டுள்ளனர் கடற்படை மற்றும் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவு இணைந்து, அலியாவலாய் கடல் பகுதியில் மேற்கொண்ட நீர்முழ்கி நடவடிக்கையின்போது நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான பொதியொன்றை அவர்கள் மீட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து குறித்த பொதியினை சோதனைக்கு உட்படுத்தியப்போது,15 கிலோ கிராம்...

தமிழர்களின் முக்கிய விடயங்கள் குறித்து ஜனாதிபதியிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு!

தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றால் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதிபதியிடம் எடுத்துரைத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த விடயம் தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதனுடன் காணிகள் விடுவிக்கப்படாமை மற்றும் பௌத்த தேரர்களால் கன்னியா, நீராவியடி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் அத்துமீறல்கள் தொடர்பாகவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது....

அவசரகால சட்டத்திற்கு பதிலாக முப்படையினருக்கும் தேசிய பாதுகாப்பு அதிகாரம்!!!

அவசரகால சட்டம் காலாவதியான நிலையில், முப்படையினருக்குமான தேசிய பாதுகாப்பு அதிகாரத்தை வழங்கும் விதமாக புதிய வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார். நேற்று (23) நள்ளிரவில் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானியின் படி, இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும், நீர்ப்பரப்புக்களிலும் பொதுஅமைதியை பேணுவதற்கு ஜனாதிபதியினால் முப்படையினருக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

கஜேந்திரகுமார் மீண்டும் பேரவையோடு இணைந்துகொள்வார் – விக்கி நம்பிக்கை

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்காலத்தில் எம்முடன் வந்து இணைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்தல் காலத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டால் மாத்திரமே இனப் பிரச்சினைக்கு தீர்வைப்பெற முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார். யாழில் எழுக தமிழ் எழுச்சி நிகழ்வுக்காக ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் சி.வி.விக்னேஸ்வரன்...

கட்சிகளுக்கு அப்பாற்பட்டதாக நடைபெறவுள்ளது எழுக தமிழ் – சுரேஸ்

யாழில் நடைபெறவிருக்கும் எழுக தமிழ் பேரணியானது கட்சிகளுக்கு அப்பாற்பட்டதாக நடைபெறவிருப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதில் அனைவரும் கலந்து கொண்டு தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவையினால் யாழில் நடத்தப்படவுள்ள எழுக தமிழ் பேரணிக்கான பரப்புரை நிகழ்வை நல்லூரில்...

சுகபோகங்கள் இல்லாது மக்களுக்காக சேவையாற்ற நானே களமிறங்குவேன் – சஜித்

மக்களுக்காக மக்கள் ஆட்சியை அமைக்க ஜனாதிபதி வேட்பாளராக தானே களமிறங்கவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எனவே நாட்டு மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம் எனவும் அதிகாரம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் மக்களோடு மக்களாகவே வாழ்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாத்தறை நகரில்நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர்...

எழுக தமிழ் பரப்புரைகளை நல்லூரில் ஆரம்பித்து வைத்தார் விக்னேஸ்வரன்!!

எழுக தமிழ் 2019, பரப்புரை பணிகள் இன்று வெள்ளிக்கிழமை முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் நல்லூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது எழுக தமிழ் எழுச்சிப் பேரணி அடுத்தமாதம் 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்த எழுச்சிப் பேரணிக்கு தாயக மக்களை அணிதிரட்டும் பரப்புரைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்றது. நல்லூர் கந்தன் ஆலய...

பளை வைத்தியசாலை அதிகாரியுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவர் கைது!!

பளை வைத்திய சாலை வைத்திய அதிகாரி, வைத்தியர் எஸ். சிவரூபனுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டில் மூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டி பளை வைத்திய சாலை வைத்திய அதிகாரி வைத்தியர் சி.சிவரூபனை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட...

யாழில் கைது செய்யப்பட்ட வைத்திய அதிகாரியை விடுவிக்குமாறு போராட்டம்!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சிவரூபனை விடுவிக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்தனர். பளைப் பிரதேச மக்களால் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. பளை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் நடை பவனியாக பளைப் பிரதேச செயலகம் வரை சென்றதுடன்...

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் திறக்கப்படுகின்றமை ஏமாற்று வேலை: சி.வி.விக்னேஸ்வரன்

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழில் திறக்க எடுக்கும் முயற்சி ஏமாற்று வேலையென வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சி.வி மேலும் கூறியுள்ளதாவது, “ஓ.எம்.பி அலுவலகத்தால் இதுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு எந்தவிதமான...

ஜனாதிபதியின் யாழ் விஜயத்தினை முன்னிட்டு காவற்துறை பதிவுகள் ஆரம்பம்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் 30ஆம் யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ளதால் அவரது பாதுகாப்புக் காரணங்களுக்காக கொழும்பிலிருந்து கிடைத்த உத்தரவுக்கு அமைவாக யாழ்ப்பாணம், கோப்பாய் உள்ளிட்ட காவற்துறைப் பிரிவுகளில் காவற்துறை பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதி கொலைச் சதி மற்றும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் சம்பவங்களை அடுத்து அவரது பாதுகாப்புக் காரணங்களுக்காக யாழ்ப்பாணத்தில் அவர் செல்லும் இடங்களை...

வைத்தியர்கள் 24 மணிநேர பணிபகிஷ்கரிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் 24 மணிநேர பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. உரிய வகையில் வைத்தியர்களுக்கான இடமாற்றங்கள் வழங்கப்படாமை உள்ளிட்ட 8 காரணிகளை முன்வைத்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய இன்று காலை 8 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டாலும், அவசர சிகிச்சைப் பிரிவுகளின்...

அவசர பொலிஸ் சேவை பாரபட்சமாக செயற்படுகிறதா என முன்னாள் போராளிகள் சந்தேகம்!

தமிழர்கள் விடயத்தில் அவசர பொலிஸ் சேவை பாரபட்சமாக செயற்படுகிறதா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளதாக அம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகளின் ஒருங்கிணைப்பாளர் வடிவேல் சசிதரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். காரைதீவில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “கடந்த 9ம் திகதி இனந்தெரியாத...

தமிழர்கள் ஒருபோதும் கோட்டாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் – சுரேஸ்

தமிழ் மக்கள் ஒருபோதும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க மாட்டார்களென ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தற்போது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விடயம் பேசுபொருளாக உள்ளது. சில...

முன்னாள் போராளியின் வீடு புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டவர் கைது!

மானிப்பாயில் முன்னாள் போராளி ஒருவரின் வீடு உள்பட இரண்டு வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டதுடன், ஒருவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையினரால்; கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாயிலுள்ள சந்தேகநபரின் வீட்டுக்கு நேற்றிரவு சென்ற காவல்துறையினர், அவரைக் கைது செய்து மானிப்பாய் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பண்டத்தரிப்பிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்குள் அண்மையில் வாள்களுடன் புகுந்து...

ஸ்ரீதரனின் சகோதரரின் காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் முடிவுக்கு வந்தது!

கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் சகோதரருக்கு சொந்தமான காணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. குறித்த காணியில் இன்று காலை முதல் இரண்டு இடங்களில் நிலம் அகழப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து தேடுதல் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன.
Loading posts...

All posts loaded

No more posts