யாழில் கொலை செய்த குற்றத்துக்காக இருவருக்கு தூக்குத் தண்டனை!!

யாழ்ப்பாணம் காரைநகரில் குடும்பத்தலைவர் ஒருவரைக் கொலை செய்த குற்றத்துக்கு இருவருக்கு தூக்குத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார். 2008ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி காரைநகர் பாலாவோடையில் முருகேசு கணேசன் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டார். உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு கொலையில் முடிந்தது. அவரது கொலையடுத்து...

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செயயக்கோரி யாழில் போராட்டம்!!

ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை, இலங்கைக்கு வருகைதர வேண்டுமென வலியுறுத்தி யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் யாழ்.மாவட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.கல்வியங்காட்டிலுள்ள காணாமற்போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ‘ஐ.நா.அமைதிப்படை வர வேண்டும்’, ‘காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை அகற்று’, ‘கோட்டாபயவை கைது...
Ad Widget

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இந்திய அதிகாரிகளை அவமதித்த இலங்கை விமானபடை!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஆரம்பிப்பதற்கு விமானப்படைத் தளபதி ஒத்துழைக்கவில்லை என்றும், இந்திய தொழில்நுட்ப குழுவுக்கு தேநீர் கூட வழங்க மறுத்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல், ‘கொழும்பு ரெலிகிராப்’ இணையத்தில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவில் பங்கேற்றது தொடர்பாக ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்....

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் கஜன் மற்றும் சுலக்சனின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்!!

யாழ்ப்பாண காவற்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகொலையான யாழ்.பல்கலை கழக மாணவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் நடைபெற்றன. மாணவர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களின் உருவ படங்களுக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டன. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன்...

யாழ். இந்துவுக்கு அமெரிக்க விஞ்ஞானி வருகை!!

அமெரிக்க விஞ்ஞானியும், அமெரிக்க இலினொய்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சிவலிங்கம் சிவானந்தன் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு வருகை தந்தார். கல்லூரியின் அதிபர் ரட்ணம் செந்தில்மாறன் அவரை வரவேற்பளித்தார். விஞ்ஞானி பாடசாலை மாணவர்களையும் சந்தித்து தனது அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் தற்போது அமெரிக்காவின் விஞ்ஞானியுமான சிவானந்தனுக்கு பாடசாலை மாணவர்களினால்...

தனிமையில் வசித்த வயோதிபப் பெண் சித்திரவதையின் பின்கொலை!

கோண்டாவிலில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண், சித்திரவதையின் பின் கொடூரமாக கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று நீதி விசாரணையின் போது, தெரியவந்துள்ளது. கொடூர குணமுடைய ஒருவனே பெண்ணை கொலை செய்துள்ளான். அவன் வயோதிபப் பெண்ணை இழுத்து வந்து உடையை அகற்றி, வயிற்றுப் பகுதியில் நெருப்புத் தணல் உடைய கட்டையால் சூடு வைத்து பெரும் சித்திரவதை செய்துள்ளான்...

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை – சுமந்திரன்

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை தாம் சந்திக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள்தான் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை எனவும் அவர்...

ஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ரணில் அழைப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் முன்வைப்பதற்காக 13 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய ஆவணத்தை தயாரித்துள்ள ஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன், கட்சிப் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு சந்திப்பைப்...

இடியுடன் கூடிய மழை தொடர்ந்தும் நீடிக்கும் – மக்களே அவதானம்

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகமாகக் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும்...

தேர்தலை பகிஸ்கரிப்பதா? அல்லது சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவா? ஆனந்தசங்கரி கேள்வி

தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து கொடுத்த கோரிக்கைகள் எந்தவொரு வேட்பாளரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்திருந்தும் மக்களிடம் தாங்கள் தேசியத்திற்காகப் பாடுபடுகின்றோம் என்று நாடகம் ஆடுவதற்காக கொடுக்கப்பட்டவை. தென் இலங்கை அரசியற் தலைவர்கள் அமைச்சர்கள் பிரதம மந்திரி மற்றும் ஜனாதிபதி ஆகியோர் சமஸ்டி கிடையாது - ஒற்றையாட்சி அரசியலின் கீழ்தான் தீர்வு என்று திரும்பத்திரும்ப கூறியும்...

சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் யாழ் சர்வதேச விமான நிலையம்!!

நாடு முழுவதும் கனமழை பொழிந்து வரும் நிலையில், யாழ்ப்பாண விமான நிலையப்பகுதிகளிலும் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பல பகுதிகள் சேறும்சகதியுமாக மாறியுள்ளன. கடந்த 16ம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. யாழ் விமானநிலையம் அவசரகதியில் அமைக்கப்பட்டது என்ற விமர்சனமும் எழுந்திருந்தது. இந்த நிலையில் கனமழை...

கோட்டாபயவிற்கு இந்தியா இரண்டு செய்தி அனுப்பியுள்ளது!! யாழில் கஜேந்திரகுமார் பரபரப்பு தகவல்!

ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியாவே உள்ளது. கோட்டாபய சீன சார்பு நிலைப்பாட்டில் இருந்தால், அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட 13 அம்சங்களையும் ஆதரிக்க தயாராக இருக்கிறோம். கோட்டா இந்திய சார்பு நிலையெடுத்தால், ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்குவோம் என்ற செய்தியை இந்தியா இதன்மூலம் வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

ஜனாதிபதித் தேர்தல் குறித்த முடிவை வியாழனன்று கூட்டமைப்பு அறிவிக்கும்!!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் என்பன வரும் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. கூட்டமைப்பின் தலைவர்...

அங்கஜன் எம்.பியின் 4 அம்சக் கோரிக்கையை கோத்தாபய ஏற்பு!!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முன்வைத்த 4 அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர் ஏற்றுக்கொண்டுள்ளார். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (ஒக்.20)...

நீராவியடி விவகாரம் – ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!!

முல்லைத்தீவு – நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. அதற்கமைய ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் தேரர் உயிரிழந்த...

யாழில் வயோதிபப் பெண் வெட்டிக்கொலை – பொலிஸார் விசாரணை

கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோயிலடியில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண் ஒருவர் கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 61 வயதுடைய குறித்த பெண்ணின் சடலம் இன்று (திங்கட்கிழமை) காலை வீட்டு வளவிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை நேற்றிரவு இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கும் பொலிஸார், கொலைக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவித்தனர். மேலும்...

பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் கரையோரப் பகுதிகளில் காலை...

முல்லைத்தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு – அகழ்வு நடவடிக்கை இன்று!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கொலனி பகுதியில் அடையாளங்காணப்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்படவுள்ளன. முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் குறித்த மனித எச்சங்கள் இன்று (திங்கட்கிழமை) மீட்கப்படவுள்ளன. சுதந்திரபுரம் – கொலனி பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் காணியில் இருந்து அகழப்பட்ட மண் நேற்று பிறிதொரு பகுதியில் கொட்டப்பட்டது. இதன்போதே, குறித்த மனித எச்சங்கள்...

கோட்டாவிற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் படைத்தளபதிகள் யாழில் களமிறக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக, முன்னாள் படைத்தளபதிகள் யாழ்ப்பாணத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர். கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலராக இருந்த காலகட்டத்தில், இறுதிக்கட்டப் போரின்போதும் போருக்குப் பின்னரான காலகட்டத்திலும் அவருடன் இணைந்து பணியாற்றிய, யாழ்ப்பாணத்தில் கட்டளைத் தளபதிகளாக இருந்த, இரண்டு மேஜர் ஜெனரல்களே இவ்வாறு தேர்தல் நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர்....

பாடசாலை மாணவனின் உயிரைப் பறித்த பிக் கப்!! சாரதியை காப்பாற்ற பொலிஸார் மக்கள் மீது தடியடி!!!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் சைக்கிளில் பயணித்த பாடசாலை மாணவர்கள் இருவரை கப் ரக வாகனம் மோதியதில் மாணவன் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மாணவன் படுகாயமடைந்து மாஞ்சோலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவத்தையடுத்து உள்ளூர் மக்கள் ஒன்றுதிரண்டு வாகனத்தைச் செலுத்தி வந்த சிங்கள சாரதியை தாக்கினர். சம்பவ இடத்துக்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸார் சாரதியை பொது மக்களிடமிருந்து மீட்டுச் சென்றனர்....
Loading posts...

All posts loaded

No more posts