- Friday
- May 8th, 2026
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை பேச்சுவார்த்தையின் ஊடாக வெற்றிக் கொள்ள முடியும் என்ற காரணத்தினால்தான் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறினேன் என முன்னாள் பிரதி அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். பி.பி.சி செய்தி பிரிவுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை தான் காட்டிக் கொடுத்ததாக...
புனர்வாழ்வளிக்கப்பட்ட 20 பட்டதாரி இளைஞர்களை வேலைவாய்ப்பு திட்டத்தில் சேர்ப்பதற்கும், அவர்களுக்கு வேலை வழங்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த இளைஞர்கள் 20 பேருக்கும் புனர்வாழ்வு திணைகளத்தால் புனர்வாழ்வுக்கு உட்பட்டுள்ளதாகவும், புதிய திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு கோரியுள்ளதாகவும் அமைச்சரவைக்கு பத்திரம் முன்வைக்கப்பட்டது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு உயர் கல்விக்கு உட்பட்டிருந்தாலும், 20 பட்டதாரிகளும் “சிவில் சமூகங்களால் தங்கள் தகுதிநிலை...
முதியவர் உயிரிழப்பை அடுத்து மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் அச்சுவேலி வைத்தியசாலையில் இடம்பெற்றது. இந்தச் சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றது. வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் சென்றிருந்த முதியவர், மருத்துவர் வருகை தருவதில் ஏற்பட்ட தாமதத்தால் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பில் மருத்துவருக்கும் முதியவரின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனையடுத்து வைத்தியசாலையில் கூடிய முதியவரின் உறவினர்கள் மற்றும் ஊரவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவரைத்...
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க இலங்கை தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்துள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களை தனித்தனியே சந்தித்து அவர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தீர்மானம் எடுத்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, இன்று அல்லது நாளை கட்சியின்...
ஜனாதிபதி தேர்தலில் குறைந்தபட்சம் 13 போலி வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளது. இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு களமிறங்கியுள்ளனரென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும் இந்த போலி வேட்பாளர்களில் ஏழு பேர் முக்கியமான ஒரு வேட்பாளருக்கு ஆதரவாகவும் ஏனைய ஆறு பேர் மற்றொரு முக்கிய...
சென்னை- யாழ்ப்பாணம் இடையே எதிர்வரும் 11ஆம் திகதி முதல் அலையன்ஸ் எயர் நிறுவனம் விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. அதற்கமைய வாரத்தில் மூன்று நாட்களுக்கு விமான சேவைகள் இடம்பெறுமென அலையன்ஸ் எயர் நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சென்னை- யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவையை அலையன்ஸ் எயர் நடத்தவுள்ளது. அதன்பின்னர், கூடிய...
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 15ஆம் திகதி வௌ்ளிக்கிழமை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறையளிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த அறிவித்தல் அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகின்ற கல்வி பணிமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும்...
இலங்கையில் மிகவேகமாக கண்நோய் பரவிவரும் நிலையில் மக்கள் மிக அவதான மாக இருக்குமாறு தேசிய கண் வைத்தியசாலை இயக்குனா் மோனிக்கா விஜேரத்ன எச்சாிக்கை விடுத்திருக்கின்றாா். கண்களில் கண்ணீர் வடிதல், கண் சிவத்தல் மற்றும் கண்களில் வலி ஆகிய அறிகுறி களே இந்த நோய் தொற்றிற்கான காரணமாகும். இவ்வாறான அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற...
யாழ்ப்பாணம் நகர மண்டப அடிக்கல் நாட்டுவிழாவின் மொத்தச் செலவீனமாக 8 லட்சத்து 47 ஆயிரத்து 895 ரூபா 48 சதம் ஏற்பட்டுள்ளதாக மாநகர சபை கணக்கிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் நகர மண்டப அடிக்கல் விழாவிற்கான செலவீனத்தை மாநகர சபை ஏற்றுக்பொள்வது தொடர்பில் மாநகர சபைநில் சர்ச்சை ஏற்பட்ட சமயம் அடிக்கல் நாட்டுவிழாவுடன் பணி நிறுத்தப்பட்டால்...
கல்வி இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாஸவிற்கான ஆதரவு கூட்டம் யாழ் தீவகம் துறையூரில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர்...
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (ரெலோ) இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் எம்.கே.சிவாஜிலிங்கம். நேற்று காலை பதவிவிலகல் கடிதத்தை கட்சியின் செயலாளரிடம் நேரடியாக வழங்கினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தவிசாளராக இதுவரை சிவாஜிலிங்கம் பதவி வகித்து வந்திருந்தார். இந் நிலையில் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக கட்சிக்கு தெரியாமல் அறிவித்தல்...
பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையிலான இலங்கை தமிழரசு கட்சி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று காலை வவுனியாவில் நடைபெற்றது. இம் மத்திய குழு கூட்டத்தில்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ பீட 4ஆம் வருட மாணவனான மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவன் தூக்கிட்டு இரண்டு நாட்கள்...
வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுது உண்ணுகின்றோம். ஆனால், இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அதே போன்று வருடம் பூராவும் மரங்களை நடுகைசெய்ய இயலுமெனினும் கார்த்திகை மாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும். கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரம் அல்ல் அது...
ஜனாதிபதி வேட்பாளர்களின் கவனத்திற்கும் - என் தமிழ் மக்களுக்கும்! இந்திய முறையிலான அதிகார பகிர்வு! 1933ஆம் ஆண்டில் பிறந்து 86ஆண்டுகளின் பின் நான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கின்றேன். நாமும் நம்நாடும் கண்டுவந்த – அனுபவித்த பல்வேறு இன்ப துன்பங்களை நினைவுகூர்ந்து பார்க்கின்றேன். நம்முடன் ஒன்றாக ஒட்டி உறவாடிய பல்வேறு சமயத்தவர்கள் இனத்தவர்களுடன் எத்தகைய...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முதலில் வணிக விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. சிவில் விமான சேவைகள் அதிகாரசபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 10ஆம் திகதி முதல் இவ்வாறு வணிக விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி விமான நிலையங்களிற்கு இவ்வாறு நாளாந்த வணிக விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான...
நீதி மன்றங்களை சுயாதீனமாக உருவாக்கி அரசியல் கைதிகள் விடயத்தில் கூடிய விரைவில் தீர்வை பெற்றுதருவேன் என ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் இராணுவ தளபதியுமான மகேஷ் சேனநாயக்க உறுதியளித்துள்ளார். வவுனியாவிற்கு நேற்று (வியாழக்கிழமை) விஜயம் செய்த அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கடந்த 71...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் கண்டறிதல் நடவடிக்கைக்காக இரு ரோபோக்கள் பயன்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருளை கண்டறிய இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இவை சீன அரசாங்கத்தினால் அண்மையில்...
அரச , தனியார் துறைகளில் தொழில் புரியும் ஊழியர்களுக்கு அவர்களின் தொழில் நடைமுறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் விடுமுறைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது. அத்துடன் இதன்போது ஊழியர்களின் சம்பளம் மற்றும் தனிபட்ட விடுமுறை விதிகளுக்கு எந்தவித இழப்புகளுமின்றி அந்த விடுமுறைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரச மற்றும்...
யாழ்.வேம்படி மகளிா் கல்லுாாியில் குண்டு தாக்குதல் நடாத்தப்போவதாக கல்லுாாியின் முன்னாள் அதிபருக்கு எச்சாிக்கை கடிதம் அனுப்பபட்டிருப்பது தொடா்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. திகதியிடப்படதாத அந்தக் கடிதத்தில் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்னும் ஒரு மாதத்தில் குண்டு வெடிக்கும் என்று ஆங்கில மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. வேம்படி பாடசாலை முன்னாள் அதிபர் வேணுகா...
Loading posts...
All posts loaded
No more posts
