தேர்தலை புறக்கணிக்க கோரி வடக்கில் தீவிர பிரசாரத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க கோரி வடக்கு முழுவதும் தீவிர பிரசார பணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஈடுபட்டுள்ளது. தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் எண்ணம் இரு தரப்பினருக்கும் இல்லை என்பதனால் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஜனாதிபதி தேர்தல் என்பது சிங்கள தலைவர்களை...

ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து, சிறுபான்மை சமூகத்திற்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் -சிவாஜி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 16ஆம் திகதி இரவுக்கு முன்னரேனும் அரசியல் கைதிகளை விடுதலை செய்து, சிறுபான்மை சமூகத்திற்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தினார். அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று (புதன்கிழமை) கொழும்பில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டார்....
Ad Widget

CID எனக் கூறி யாழில் கத்திக் குத்து – 25,000 ரூபாய் பணம் கொள்ளை

யாழ்ப்பாணத்தில் வீதியில் சென்றுகொண்டிருந்த ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தோடு அவரிடமிருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருதனார் மடம் – உரும்பிராய் வீதியில் நேற்று (புதன்கிழமை) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் செல்லத்துரை செல்வக்குமார் (வயது – 50) என்பவரே கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். மோட்டார்...

ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் குண்டு வெடிப்பொன்று இடம்பெறும் சாத்தியம்!!!

ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் குண்டு வெடிப்பொன்று இடம்பெறும் சாத்தியமுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் குண்டு வெடிப்பொன்று இடம்பெறும் சாத்தியமுள்ளதாக என்ற கருத்திலான டுவிட்டர் தகவலொன்று தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக பொலிஸ் தலைமையகம் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....

கொழும்பில் உள்ள மக்களுக்கு அவசர எச்சரிக்கை – முகமூடி அணியுமாறு அறிவுறுத்தல்

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளமையினால், சிறுவர்களுக்கு முகமூடி அணிவிப்பது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஏனெனில் தூசு துகள்களின் செறிவு காரணமாக, சிறுவர்கள் சுவாசிப்பதில் சிக்கல் நிலைமையை எதிர்கொள்ள நேரிடலாம் என சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். இந்தியாவின்...

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு – தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வ அறிக்கை

எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில், இலங்கைக்கு ஜனநாயக ரீதியாக ஜனாதிபதியொருவரை தெரிவு செய்தற்கான தேர்தல் 2019 நவம்பர் 16ஆம் திகதி...

வல்வெட்டித்துறை மக்கள் வங்கி முகாமையாளரின் வீட்டில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் விளக்கமறியல்!!

வல்வெட்டித்துறை மக்கள் வங்கி முகாமையாளரின் வீட்டில் அத்திமீறிச் பொலிஸார் செயற்பட்டமை தொடர்பில் முரண்பட்ட கிராம சேவையாளர் உள்பட இருவரை நாளை வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. வங்கி முகாமையாளரின் துணைவியாரின் சகோதரர்கள் இருவரே பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். வவுனியாவில்...

புலம்பெயர் தமிழர்கள் ஈழம் கனவை கைவிட்டுள்ளனர் – ஆளுநர்

புலம்பெயர் தமிழர்கள் ஈழம் கனவை கைவிட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அவர்கள் தற்போது வடக்கு அபிவிருத்திக்கு ஒத்துழைக்க தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அண்மையில் தான் பிரான்சுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாகவும் அந்த சந்தர்ப்பத்தில் அங்குள்ள...

யாழில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் கைது

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குட்டி என அழைக்கப்படும் கொள்ளையன் உள்ளிட்ட நால்வர் கோப்பாயில் வீடொன்றில் மறைந்திருந்த வேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நவாலியில் திருமண வீடொன்றில் புகுந்து காணொலியைக் காண்பித்து 60 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டமை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்தவர்களே இவ்வாறு...

யாழ் மாநகர சபையில் அன்றா நிறுவனம் தொடர்பில் பார்த்திபன் கேள்வி!!

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் அன்றா நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளுக்காக செலுத்த வேண்டிய 22 இலட்சத்து 64 ஆயிரத்து 104 ரூபா பல மாதங்களுக்கு மேலாக செலுத்தப்படாமை தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்திபன் கேள்வி எழுப்பினார். யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சபா...

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு புளொட் ஆதரவு!!

ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் தீர்மானித்துள்ளது. ஏற்கனவே தமிழைரசுக் கட்சியும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது புளொட்டும் சஜித்தை ஆதரிப்பதாக அக்கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாம்...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சிவாஜிலிங்கம் போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அவர் இன்று (புதன்கிழமை) முற்பகல் 10 மணியளவில் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தார். சிறைகளில் வாழும் தண்டனை பெற்ற அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு மற்றும் ஏனையவர்களை நிபந்தனையின்றி விடுவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே ஜனாதிபதி வேட்பாளர்...

வல்வெட்டித்துறை மக்கள் வங்கி முகாமையாளரின் வீட்டில் பொலிஸார் தேடுதல்!! இருவர் கைது!!

வல்வெட்டித்துறை மக்கள் வங்கி முகாமையாளரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜீப் வாகனமும் தாமும் தேடிவந்த வாகனமும் வேறு எனத் தெரிவித்துள்ள பொலிஸார், நீதிமன்றின் உத்தரவின் பேரில் வீட்டுக்குள் சல்லடை போட்டுத் தேடுதல் நடத்தினர். அத்துடன் வங்கி முகாமையாளரின் துணைவியாரின் சகோதரர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். வவுனியாவில் மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பயணித்த...

மின்துண்டிப்பிற்கு எதிராக வவுனியாவில் இரவிரவாக போராட்டம்!

வவுனியாவில் 50இற்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியதை தொடர்ந்து, பொறுமையிழந்த மக்கள் நேற்றிரவு வீதிக்கிறங்கினார்கள். வவுனியாவில் நான்கு இடங்களில் வீதிகளை மறித்து மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். இதனால் ஏ9 வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது. நேரம் செல்லச்செல்ல போராட்டம் தீவிரமடைந்து வவுனியப புகையிரத நிலையத்திற்கு அண்மையாக புகையிரதத்தையும் வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இருளில் மூழ்கியுள்ள வவுனியாவில்...

பல வாள்வெட்டு வன்முறைகள், கொள்ளை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் தேடப்பட்டு வந்த ஆவா நீதி மன்றில் சரண்!!!

யாழ்ப்பாணத்தில் பல வாள்வெட்டு வன்முறைகள், கொள்ளை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கடந்த 2 வருடங்களாக தேடப்பட்டு வந்த “ஆவா” என காவற்துறையினரால் விழிக்கப்படும் இளைஞர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று சரணடைந்தார். சந்தேகநபரை வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆவா குழுவின் முக்கியஸ்தர் எனவும் “ஆவா” எனவும் காவற்துறையினரால் குறிப்பிடப்படும்...

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையக் கூடும்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று தற்காலிகமாக சிறிது குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. எனினும் சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் காணப்படுகின்றது. கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில்சில இடங்களில் காலை வேளையிலும் மழையோ...

தமிழரசுக் கட்சி என்னுடன் ஏன் கலந்துரையாடவில்லை? – சிவாஜி

சிங்கள பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவை தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சி தன்னுடன் ஏன் கலந்துரையாடவில்லை என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். மன்னார் தனியார் விடுதி ஒன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளிப்பதாக தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது....

வெளிப்படைத் தன்மையற்ற விஞ்ஞாபனத்தை நம்பி எவ்வாறு வாக்களிக்க முடியும்? –சி.வி.விக்னேஸ்வரன்

வெளிப்படைத் தன்மை இல்லாத தேர்தல் விஞ்ஞாபனத்தை நம்பி நாம் எவ்வாறு வாக்களிக்க முடியும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். வாராந்தம் கேள்வி பதிலில், புதிய ஜனநாயக முன்னணியியன் ஜனாதிபதி வேட்பாளருடைய தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவந்துள்ள நிலையில் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த முடியுமா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர்...

விடுதலைப் போராட்டத்தை கருணா மாத்திரமே காட்டிக் கொடுத்தார் பிரபாகரன் ஒருபோதும் கூறவில்லை!!

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை பேச்சுவார்த்தையின் ஊடாக வெற்றிக் கொள்ள முடியும் என்ற காரணத்தினால்தான் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறினேன் என முன்னாள் பிரதி அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். பி.பி.சி செய்தி பிரிவுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை தான் காட்டிக் கொடுத்ததாக...

புனர்வாழ்வு வழங்கப்பட்ட 20 பட்டதாரிகளுக்கு அரச வேலை வழங்க அமைச்சரவை ஒப்புதல்!!

புனர்வாழ்வளிக்கப்பட்ட 20 பட்டதாரி இளைஞர்களை வேலைவாய்ப்பு திட்டத்தில் சேர்ப்பதற்கும், அவர்களுக்கு வேலை வழங்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த இளைஞர்கள் 20 பேருக்கும் புனர்வாழ்வு திணைகளத்தால் புனர்வாழ்வுக்கு உட்பட்டுள்ளதாகவும், புதிய திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு கோரியுள்ளதாகவும் அமைச்சரவைக்கு பத்திரம் முன்வைக்கப்பட்டது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு உயர் கல்விக்கு உட்பட்டிருந்தாலும், 20 பட்டதாரிகளும் “சிவில் சமூகங்களால் தங்கள் தகுதிநிலை...
Loading posts...

All posts loaded

No more posts