Ad Widget

யாழ் மாநகர சபையில் அன்றா நிறுவனம் தொடர்பில் பார்த்திபன் கேள்வி!!

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் அன்றா நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளுக்காக செலுத்த வேண்டிய 22 இலட்சத்து 64 ஆயிரத்து 104 ரூபா பல மாதங்களுக்கு மேலாக செலுத்தப்படாமை தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்திபன் கேள்வி எழுப்பினார்.

யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சபா மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது பிரேரணை ஒன்றினை சமர்ப்பித்தே குறித்த கேள்வியினை எழுப்பி இருந்தார்.

குறித்த பிரேரணையில் மேலும் தெரிவிக்கப்பட்டு இருந்ததாவது ,

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் மத்திய பஸ் தரிப்பிடத்தில் 12, கஸ்தூரியார் வீதியில் 10, நாவலர் வீதியில் 06, பிரதான வீதியில் 23, பலாலி வீதியில் 17, ஸ்ரான்லி வீதியில் 13, கே.கே.எஸ் வீதியில் 03 உட்பட மொத்தமாக 95 விளம்பர பலகைகள் காணப்படுகின்றன. அதில் 35 விளம்பர பலகைகளுக்கான ஒரு வருடத்தற்குரிய கட்டணமான 2,264,104.00 ரூபா இது வரை செலுத்தப்பட வில்லை.

இதில் அன்றா நிறுவனத்தினுடைய 28 விளம்பர பலகைகளுக்குரிய 2,093,787.45 இன்னும் செலுத்தப்படவில்லை. இவ் 28 விளம்பர பலகைகளுக்குள் 2018 ஆம் ஆண்டுக்குரிய 5 விளம்பர பலகைக்கான கட்டணங்களும் உள்ளன. அத்துடன் ஒரு விளம்பர பலகையின் ஒரு வருடத்திற்குரிய ஒப்பந்த காலம் இம்மாதம் 8 ஆம் திகதியுடன் முடிவடையும் நிலையிலும் அதற்கான கட்டணமும் அறிவிடப்படவில்லை.

ஒரு சாதாரண வியாபார ஸ்தானபத்திரிக்குரிய வரியான 6000 ரூபாவினை செலுத்த தவறும் பட்சத்தில் வியாபார ஸ்தாபன உரிமையாளருக்கு கடிதங்கள் அனுப்பி பின்னர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து அதனை அறவிடுகின்ற யாழ்.மாநகர சபை 22 இலட்சத்து 64 ஆயிரத்து 104 ரூபாவினை கடந்த பல மாதங்களாக ஏன் ஒரு வருடமாக அறிவிடாமல் இருப்பது ஏன்? எனவே குறித்த கட்டணங்களை உடனடியாக அறவிடுவதற்கு நடடிக்கை எடுக்க வேண்டும்

அதேவேளை மற்றுமொரு பிரேரணையில் ,

யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் காணப்படும் வியாபார ஸ்தாபனங்களில் Mobitel, Dialog, Airtel, Necto, Anchor என பல நிறுவனங்களின் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான விளம்பரக்கட்டணங்கள் குறித்த நிறுவனங்களால் யாழ்.மாநர சபைக்கு செலுத்தப்பட வேண்டும் என்பது நியதி

அந்தவகையில் Mobitel நிறுவனம் 60 விளம்பர பலகைகளுக்கென 280,800.00 + VAT+NBT ரூபாவினையும் Airtel நிறுவனம் 31 விளம்பர பலகைகளுக்கென 135,525.00+VAT+NBT ரூபாவினையும் யாழ்.மாநகர சபைக்கு செலுத்தி வருகின்றது. இதில் Mobitel நிறுவனம் விளம்பரக்கட்டணத்தை 2017 ஆம் ஆண்டு தொடக்கமும் Airtel நிறுவனம் 2011 ஆம் ஆண்டு தொடக்கமும் செலுத்தி வருகின்றது.

வேறு எந்த ஒரு நிறுவனங்களும் இது வரை வியாபார ஸ் தாபனங்களில் தங்களால் வைக்கப்படுகின்ற விளம்பர பலகைகளுக்கான கட்டணத்தை செலுத்துவதில்லை. இதில் மிக முக்கியமானது Dialog நிறுவனம் ஆகும் இவ் நிறுவனத்தின் விளம்பரபலகைகளே மாநகர எல்லைக்குள் காணப்படும் வியாபரஸ்தாபனங்களில் அதிகளவில் காணப்படுகின்றன. இருந்த போதிலும் குறித்த நிறுவனம் இது வரை எந்த கட்டணங்களையும் செலுத்துவதில்லை. எனவே குறித்த நிறுவனங்களிடம் இருந்து விளம்பரப் பலகைக்கான கட்டணங்களை அறிவிட வேண்டும். என தனது பிரேரணையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts