Ad Widget

கொழும்பில் உள்ள மக்களுக்கு அவசர எச்சரிக்கை – முகமூடி அணியுமாறு அறிவுறுத்தல்

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளமையினால், சிறுவர்களுக்கு முகமூடி அணிவிப்பது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

ஏனெனில் தூசு துகள்களின் செறிவு காரணமாக, சிறுவர்கள் சுவாசிப்பதில் சிக்கல் நிலைமையை எதிர்கொள்ள நேரிடலாம் என சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவின் புதுடெல்லியில் ஏற்பட்டுள்ள வளி மாசடைவு, தற்போது இலங்கையையும் பாதித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு மையம் நேற்று சந்தேகம் வெளியிட்டிருந்தது.

கொழும்பு நகருக்கு மேலே, வளிமண்டலத்தில் உள்ள தூசு துகள்களின் அளவு நூற்றுக்கு 100 வீதத்தை விடவும் அதிகரித்துள்ளதாக அந்த மையத்தின் சிரேஷ்ட நிபுணர் சரத் பிரேமசிறி தெரிவித்தார்.

குறிப்பாக கொழும்பு நகரின் மேற்பரப்பு வானில் நேற்று முன்தினம் முதல் முகில்கள் போன்ற நிலை காணப்படுகின்றது.

தூசுத் துகள்களே அவ்வாறு தென்படுவதாக தேசிய கட்டட ஆய்வு மையத்தின் நிபுணர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

இதேநேரம், நாட்டின் ஏனைய சில பாகங்களிலும், இந்த நிலைமையை அவதானிக்கக்கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சுவாசம் தொடர்பான நோயுடையவர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என தேசிய கட்டட ஆய்வு மையத்தின் சிரேஷ்ட நிபுணர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பாக விளக்கமளித்துள்ள சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவர் தீபால் பெரேரா, சிறுவர்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் நிலைமை ஏற்படக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லும்போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும், முகமூடியை அணிவது பாதுகாப்பானதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியான நோய் அறிகுறி ஏதாவது தற்போதைய நாட்களில் அவதானிக்கப்படுமாயின், மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், குறித்த நிலைமை தொடர்பாக பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவர் தீபால் பெரேரா, எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts