Ad Widget

அரசியல் கைதிகள் விடயத்தில் நீதி மன்றத்தின் ஊடாக விரைவில் தீர்வு : மகேஷ் சேனநாயக்க

நீதி மன்றங்களை சுயாதீனமாக உருவாக்கி அரசியல் கைதிகள் விடயத்தில் கூடிய விரைவில் தீர்வை பெற்றுதருவேன் என ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் இராணுவ தளபதியுமான மகேஷ் சேனநாயக்க உறுதியளித்துள்ளார்.

வவுனியாவிற்கு நேற்று (வியாழக்கிழமை) விஜயம் செய்த அவர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கடந்த 71 ஆண்டுகளாக அரசியல் வாதிகள், மற்றும் அரசியல் கட்சிகள் மக்களை பிரித்து காட்டியே தமது அரசியலை நடாத்தியிருக்கிறார்கள்.

அதனால் கடந்த 30 ஆண்டுகளாக நாட்டில் யுத்தமே இடம்பெற்றது. யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்த போதும் அபிவிருத்தி என்ற பெயரிலேயே பாதைகள் போடப்பட்டிருக்கிறது. கட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் மக்கள் நாளாந்தம் வாழ்வதற்குரிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன் அரசியல் கைதிகளை பொறுத்த வரையில் அவர்கள் அரசியல் கைதிகளா, இல்லையா என்பதில் பிரச்சனை இருக்கிறது.

இந்த விடயத்தில் தீர்மானம் எடுக்க வேண்டியது நீதி மன்றங்களே. முதலில் சுயாதீனமான நீதி மன்றங்களை உருவாக்கி தன்னிச்சையான முறையில் நீதிமன்றங்கள் செயற்பட வழியமைக்க வேண்டும். அதன் செயற்பாடுகளை விரைவுபடுத்தி அதற்குரிய தீர்வினை எட்டுவேன்.

தமிழ் கட்சிகளின் கோரிக்கைகள் அரசியல் தொடர்பானதுடன், அரசியல் வாதிகளின் தேவைகளுக்கு உகந்ததுமானதாக தான் நான் பார்க்கின்றேன்.

சமத்துவத்தையும், சமவாய்பையும் ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்வேன். அதற்கு உங்களின் ஆதரவினை வழங்குமாறு கேட்டுகோள்கின்றேன்” எனத் தெரிவித்தார்.

Related Posts