- Saturday
- August 16th, 2025

அரிசியில் செயற்கை தவிட்டு சாயம் கலந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மில் உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சுதுமலை பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் திடீர் பரிசோதனையை மேற்கொண்ட வேளை, செயற்கை தவிட்டு சாயங்கள் கலந்த ஒரு தொகை அரிசியினை கடந்த ஆகஸ்ட் மாதம் மீட்டிருந்தார். மீட்கப்பட்ட...

கடந்த ஆட்சியில் மதுபானசாலைகளுக்கு பெர்மிட் பெற்று வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் அனைவரது பெயர்களையும் தற்போதைய அரசு உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று (03) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும்...

யாழ்ப்பாண பண்ணை சுற்றுவட்டப் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (04) காலை சிரமதான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சுகாதார தரப்பினர், பொலிஸ், இராணுவத்தினரின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நடவடிக்கையில் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டதுடன் விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் பிளாஸ்டிக் சேகரிக்கும் கூடைகளும் அங்காங்கே வைக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன்,...

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை 8 சுயேட்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் பதில் அரசாங்க அதிபருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். வியாழக்கிழமை (3) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நேற்று 4ஆம் திகதி...

யாழில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன் ஒருவன் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளான். யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி கற்கும், லோட்டஸ் வீதி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த தவசுதன் சாருஜன் (வயது 15) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவன் கைப்பேசி கேமிற்கு...

இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி, இஸ்ரேல் மீது சுமார் 400 ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் இந்த தாக்குதலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இஸ்ரேலியர்களை எச்சரிக்கையாக இருக்கவும்,...

தமிழ்த் தரப்பு பிாிந்து நின்று இம்முறை தோ்தலில் போட்டியிடுமாக இருந்தால் சில ஆசனங்களை இழக்கும் நிலையே ஏற்படும் என முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இந்திய தூதுவருடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடா்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும்...

வடமாகாண ஆளுநர் செயலகத்தின் பொது மக்கள் குறைகேள் வலையமைப்பான “அபயம்” பிரிவின் செயற்பாடுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை முதல் நிறுத்துப்பட்டுள்ளன. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் பொது மக்கள் தங்கள் குறைகளை ஆளுநரிடம் நேரடியாகவோ அல்லது 021 221 9375 மற்றும் 021 221 9376 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக முறையிடலாம் என ஆளுநர்...

சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ஐஓஎம் (IOM) அலுவலகத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை போராட்டம் நடைபெற்றது. இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சிறுவர்கள் காணாமலாக்கப்பட்டமை தொடர்பாக நீதி கோரி கோஷங்களை எழுப்பினர்.

யாழ்ப்பாணத்தில் இரண்டு கைக்குண்டுகள் உள்ளிட்டவற்றுடன் வன்முறை கும்பலை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பகுதியை சேர்ந்த 18 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 02 கைக்குண்டுகள், 04 வாள்கள், 04 பெற்றோல்...

திர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக குத்துவிளக்குக்கு பதிலாக சங்கு சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட இளைஞர்களை இணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின்...

தமிழரசுக் கட்சியுடன் பங்காளி கட்சிகள் இணைய விரும்பாவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியாக தனித்து களமிறங்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் M.A, சுமந்திரன் தொிவித்துள்ளாா். மன்னாரில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், ”எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தமிழரசுக்...

பருத்தித்துறை சாலையினரால் கீரிமலையிலிருந்து கொழும்பிற்கு நடாத்தப்பட்ட பேருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் குறித்த பேருந்து சேவைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆண்டுவரை இடம்பெற்ற சேவை பேருந்து இன்மை, மற்றும் சாரதிகள் இன்மை போன்ற காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று பிற்பகல் 7:15 மணிக்கு கீரிமலையிலிருந்து புறப்பட்டு காங்கேசன்துறை,...

மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம், நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 21 ரூபாவினால் குறைந்துள்ளதுடன், அதன் புதிய விலை 311 ரூபாவாகும். 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையில்...

உணவுப்பொதி, பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகள் 40 ரூபாவினால் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன் முட்டை ரொட்டி ஒன்றின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் முட்டை விலை குறைவடைந்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பேக்கரி உற்பத்தி உணவுப்பொருட்களில் எந்தவிதாமாற்றமும்ம மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது....

இந்த ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு, பரீட்சைக்கு முன்னர் கலந்துரையாடப்பட்டதாக இனங்காணப்பட்ட மூன்று வினாக்களுக்கும் தோற்றிய சகல மாணவர்களுக்கும் புள்ளிகளை வழங்குவதே சிறந்த மாற்றாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி...

தமிழரசுக் கட்சியின் அறிவிப்பின் மூலம் ஆதிக்கம் தமிழரசுக் கட்சியினுடையதே. வந்து சேருங்கள் உங்களுக்கு நாங்களாக பார்த்து தருவோம் என்றவாறான நிலைப்பாட்டை கூறியிருப்பதாகவே தெரிகின்றது. அப்படியான நிலைப்பாட்டில் நாங்கள் போக முடியாது என யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பொதுச்சபை கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதியில்...

மன்னார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் மலலசேகர (41308) வின் துரித நடவடிக்கையின் காரணமாக மன்னார் பிரதான பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) காப்பாற்ற பட்டதாக தெரிய வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (29) காலை மன்னார் நகருக்குள் நுழையும் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள அலுவலகத்தில் பிரதேச போக்குவரத்து பிரிவுக்கு...

சுமந்திரன் தலைமையிலான அணியுடன் ஒருபோதும், ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என். சிறீகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற சந்திப்பிலேயே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் வெளியேறியவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என புன்முறுவலோடு சுமந்திரன் அழைப்பு விடுத்திருக்கிறார். அவருக்கு நாங்களும்...

நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக முப்படையினருக்கு அழைப்பு விடுக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை உறுப்பினர்கள் அனைவரையும் அழைப்பதற்கான உத்தரவு அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது கடமைகளை...

All posts loaded
No more posts