- Friday
- November 21st, 2025
முல்லைத்தீவு கடற்கரையின் கிழக்கு பகுதியில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள சுறாவளி, நாளை அதிகாலை 2 மணியளவில் இலங்கைக்குள் உட்புக வாய்ப்புள்ளதால் கரையோர பிரதேசங்களில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்று அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ். பொதுநூலக விருந்தினர் அபிப்பிராயப் புத்தகத்தில் வரலாற்றில் முதல் முறையாக சீன மொழியிலான அபிப்பிராயம் ஒன்று நேற்றுபதியப்பட்டுள்ளது. சீனத் தூதுவர் தலைமையிலான குழுவொன்று நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டனர். அதன் போது யாழ். பொது நூலகத்தினைப் பார்வையிட்டனர். (more…)
மேலதிக சொலிசிட்டர் ஜெனரலான ஐய்யாதுரை ஞானபிரகாசம் பதில் சொலிஸிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமா அதிபர் திணைக்களத்தில் பல வருடங்களாக கடமையாற்றும் இவர் சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்டவராவர்.
சம்பள அதிகரிப்பு உட்பட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ். போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமான இப்பணிப்பகிஷ்கரிப்பு நாளை காலை 8 மணிவரை இடம்பெறும் என அரச மருத்துவ சங்கத்தினர் யாழ். மாவட்டத்திற்கான தலைவர் வைத்தியர் நிமலன் தெரிவித்தார் (more…)
வடமாகாணசபை அமைந்தால் தனி ஈழத்துக்கான நகர்வுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் முன்னெடுக்குமென்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனவே, பிரிவினையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ள 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தை அரசு உடனடியாக அடியோடு இல்லாதொழிக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எல்லாவெல மேத்தானந்த தேரர் வலியுறுத்தியுள்ளார். (more…)
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக புகலிடம் தேடி வரும் தமிழர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது சட்டதிட்டங்களுக்கு அமைய ஏற்க மறுத்து வருகின்றது.மெல்பேர்னிலிருந்த இலங்கைத் தமிழர் ஒருவர் ஒக்டோபர் 31ம் திகதி இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டார். அவுஸ்திரேலிய குடியேற்ற அதிகாரிகள் அகதிகளிடத்தில் கடைசி நேரத்தில் பல கேள்விகள் கேட்டு, சட்டதிட்டங்களுக்கு அமைவாக இல்லையெனின் திருப்பி அனுப்பி விடுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்....
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பாரிய நிதி மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கான விசாரணைகளை இரகசிய காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.இதன் பொருட்டு காவற்துறையினரும், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களும் இணைந்து உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் கணனிகளை பரிசோதனைக்கு உட்படுத்திவருவதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)
இராணுத்தின் ஏற்பாட்டில் இலங்கைக்கான சீனத்தூதுவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இன்று காலை 9.00 யாழ். மாநகர சபைக்குச் சென்று, யாழ். மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவைச் சந்தித்து கலங்துரையாடினர். (more…)
போலியான கம்பனி ஒன்றுடன் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் செய்துகொண்ட மீள் காப்புறுதி காரணமாக அதற்கு 208 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் அறிவித்திருக்கின்றார். கணக்காய்வாளர் நாயகத்தின் இந்த அறிக்கையை அரசாங்க நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு (கோப்) நேற்று செவ்வாய்க்கிழமை ஆராய்ந்தது. (more…)
யாழ்.வரணிப் பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவர் பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கி சுட்டதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, (more…)
யாழ்.குடாநாட்டில் தொலைபேசி விற்பனை நிலையங்களில் இடம்பெற்ற தொடர் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள யாழ். பொலிஸார் இதுவரை 400 கைத்தொலைபேசிகள் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.கடந்த ஒரு வாரத்தில் நாவலர் வீதியிலுள்ள தொலைபேசி விற்பனை நிலையமொன்று இரண்டு தடவைகளும், நல்லூரடியிலுள்ள கணனி உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையம் மூன்று தடவைகளும் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது. (more…)
யாழ். சுன்னாகம் மின்சார நிலையப் பகுதியில் உள்ள குடிநீர் கிணறுகளில் கழிவு ஒயில் புகுவதினால் சுத்தமான குடி நீரைப் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.கடந்த பல வருடங்களாக கழிவு ஒயில் கிணறுகளில் புகுவது சம்பந்தமாக பிரதேச சபை, பிரதேச செயலகம், பொது சுகாதார வைத்தியதிகாரி பணிமனை உட்பட பல இடங்களில்...
அரசாங்கம் வடபகுதி தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்வதற்கு ௭வ்விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.இலங்கையில் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை நடத்துவதற்காகவே ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அனைத்து காய்நகர்த்தல்களையும் முன்னெடுக்கின்றார்.என அவ் இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார். (more…)
முஸ்லிம்களின் ஹஜ்ஜூப் பெருநாளையொட்டி எதிர்வரும் 27ஆம் திகதியை பொது மற்றும் வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னர் பொது மற்றும் வங்கி விடுமுறை தினமாக ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது.
புதிதாக சாதாரண கிணறுகள் அல்லது குழாய் கிணறுகளை தோண்டுவோர் ஆண்டுக்கான அனுமதிக் கட்டணமாக நீர்வளசபைக்கு 7,500 ரூபாவிலிருந்து 15,000 ரூபாவரை செலுத்தவேண்டிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு அமைச்சரவை பத்திரம் ஒன்று விரைவில் சமர்ப்பிக்கப்படும் என நீர்வளசபையின் தலைவர் பந்துல முனசிங்க தெரிவித்துள்ளார். (more…)
யாழ். மாவட்டத்தில் பிறிமா கோதுமை மாவின் விலை நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ 80 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த பிறிமா கோதுமை மா நேற்றுமுன்தினம் முதல் 85ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. (more…)
வலிகாமத்தில் பலாலி படைத் தளத்துக்கு வெளியே மக்கள் காணிகளை உள்ளடக்கி தடுப்பு வேலிகளை அமைப்பதால் தங்களால் அந்தப் பகுதியில் மீளக்குடியேற முடியாதுள்ளதாகத் தெரிவித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக மாதகல் மக்கள் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளனர். (more…)
கலைக்கப்பட்டிருக்கும் நிலையில் உள்ள வட மாகாண சபையின் ஆளுனரால் வெளியிடப்படும் கருத்துகள் அந்த மாகாண சபையினால் வெளியிடப்படும் உண்மையான கருத்துகளாகுமா என்பது தொடர்பில் அரசியலமைப்பு ரீதியான சட்ட வியாக்கியானத்தை உயர் நீதிமன்றம் எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் பரிசீலனைக்கு எடுக்கும். (more…)
நல்லூர் பிரதேச சபையின் தலைவர் எஸ்.வசந்தகுமார் மீது சற்று முன்னர் இனம்தெரியாத நபர்கள் வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.எனினும் இந்த தாக்குதல் சம்பவத்தில் அவர் சிறிய காயங்களுடன் தப்பியுள்ள நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
