- Tuesday
- April 7th, 2026
வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் உள்ள மணற்காட்டு கிராமத்தில் கடலில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த 16 வயது மாணவன் ஒருவன் சுழியில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இப்பரிதாபகரமான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 12:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. (more…)
யாழ். மாவட்ட சிற்றூர்த்தி சேவைச் சங்கங்கள் இன்று முதல் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணைய தலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்துள்ளார். (more…)
யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய காது, மூக்கு மற்றும் தொண்டை தொடர்பிலான சத்திரசிகிச்சை நிபுணர் திருமாறன் தற்காலிக இடமாற்றம்பெற்று கொழும்பிற்கு சென்றுள்ளதாக யாழ். அரச வைத்திய சங்க தலைவர் எஸ்.நிமலன் தெரிவித்தார். (more…)
மழை, வெள்ளம் காரணமாக யாழ்.மாவட்டத்தின் 750 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக 5 பிரதேச செயலக பிரிவுகளிலும் நேற்று வரை 750 குடும்பங்களைச் சேர்ந்த 3265 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். (more…)
விடுதலைப்புலிகளின் இரண்டாம் பரம்பரை படையினரை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாக யாழ்ப்பாண படைகளின் கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்க பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளார்.யாழ்ப்பாண இளைஞர் யுவதிகளுக்கு இந்தியாவில் போர்ப் பயிற்சி வழங்க தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. (more…)
தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இறுக்கமான உறவினைப் பேணுவதோடு, தமிழ் மக்களினதும், தமிழ் கட்சிகளினதும் ஒற்றுமைக்காக உழைப்பதற்காக உறுதிகொள்வதென்ற தீர்மானத்தினை எடுத்துக் கொள்ளவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரி உறுதியளித்துள்ளார். (more…)
யாழ்ப்பாணத்தில் ஆயுர்வேத வைத்தியர் ஒருவரின் வீட்டில் 19 பவுண் நகை மற்றும் 16 ஆயிரம் ரூபா பணம் என்பன ஆயுதமுனையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோரினால் அபகரிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் நேற்று மாலை 6. 15 மணியளவில் நவாலி கிழக்கு பிரசாத் வீதியிலுள்ள சந்தைக்கு (more…)
யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் கடும்மழை காரணமாக யாழ் நகரையொட்டிய கரையோர மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொம்மைவெளி, நாவாந்துறை, காக்கைதீவு, வசந்தபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களே பாதிக்கப்பட்டுள்ளனர். (more…)
டில்லியில் ஓடும் பஸ்சில் வைத்து ஒரு கும்பலால் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் போராடி வந்த 23 வயது மருத்துவ மாணவி சிங்கப்பூர் மௌன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இன்று அதிகாலையில் உயிரிழிந்துள்ளார்.கடந்த 13 நாட்களாக மரணத்துடன் கடுமையாக போராடி வந்த மேற்படி மாணவி, இன்று அதிகாலை 2.15 மணியளவில்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சகோதரும் பிரபல வெர்த்தகருமான துவாரகேஸ்வரன் மீது சற்றுமுன் யாழ்.நல்லூர் ஆலய பகுதியில் அசிற்(அமில) வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது;அசிற் வீசப்பட்ட நிலையில் காயமடைந்த துவாரகேஸ்வரன் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் துணைவேந்தர் பீடாதிபதிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் குறித்து மேற்கொண்டு வருகின்ற விசமத்தனமான பிரசாரங்களை நம்பி செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னர் பிரசுரிக்குமாறும் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. (more…)
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளமை சட்டவிரோதம் எனவும், தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளரும், குற்றப் புலனாய்வுப் பிரிவும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்கள் என்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். (more…)
காரைநகர் ஈழத்துச் சிதம்பர தீர்த்த உற்சவத்தின் போது நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக பால்காவடி எடுத்த ஒருவர் இடைவழியில் மயங்கி வீழ்ந்து மரணமாகியுள்ளார்.இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் கோவிலிலிருந்து ஈழத்துச் சிதம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே இவர் மயக்கமடைந்தள்ளார். (more…)
யாழ்.மாதகல் பகுதியில் இந்திய மீனவர்கள் 7 பேர் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி மீனவர்கள் பயணித்த இழுவை படகானது மாதகல் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையிலே இம்மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரைகளை மாணவர்கள் பகிஷ்கரித்துள்ள நிலையில், பல்கலைக்கழக நடவடிக்கைகளின் முன்னெடுப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான விசேட கூட்டமொன்று எதிர்வரும் திங்கட்கிழமை நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. (more…)
யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக அவருடைய உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.நடராஜா கலியுகராஜா (வயது 47) என்பவரே கடத்தப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)
யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.4 வயது சிறுமியே இவ்வாறு காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மண்டைத்தீவைச்சேர்ந்த சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுரேந்திரன் சுதந்தினி என்பவரே புதன் கிழமை காணாமல் போனதாகவும் அவரே (more…)
யுத்தத்தின் அதிர்வுகளில் இருந்து தமிழர்கள் விடுபடுவதற்கும் யுத்த பாதிப்புகளில் இருந்து மக்களை நல்வழிப்படுத்தவுமே தமிழ் பௌத்த அறநெறிப் பாடசாலை யாழ் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டதே தவிர பௌத்த மதத்தை பரப்புவதற்காக அல்ல. பௌத்த மதத்தில் உள்ள தர்ம சிந்தனைகளை அங்குள்ள மாணவர்களும் அறிந்து கொள்வதற்கே (more…)
புற்றுநோய் வைத்திய நிபுணர் என்.ஜெயக்குமார் வீட்டின் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கு சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெப்ரி தெரிவித்தார். (more…)
Loading posts...
All posts loaded
No more posts
