- Monday
- July 21st, 2025

யாழ். மாவட்டத்தில் இதுவரையில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 376 தனிநபர் மிதிவெடிகளும், 534 தாங்கி எதிர்ப்பு மிதிவெடிகளும் மீட்கப்பட்டதாக வடபிராந்திய மிதிவெடி செயற்பாட்டு அலுவலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. (more…)

யாழ்ப்பாணத்தில் தந்தை அல்லது தாயை இழந்த 5,732 சிறுவர்கள் இருப்பதாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் தெரிவித்தார். (more…)

யுத்த சூழ்நிலையை தொடர்ந்தும் பேணுவதற்கு அரசாங்கம் முயற்சி செய்துவருகின்றதாக சமவுரிமை இயக்கத்தினரால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

தீக்காயங்களுக்கு இலக்கான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். (more…)

கைதடி அரச முதியோர் இல்லத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தற்காலிக ஊழியர்களாகக் கடமை புரிந்து வருவோர் இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் இருப்பதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி அரச முதியோர் இல்லத்தில் தற்காலிக ஊழியர்களாகக் கடமை புரியும் இவர்கள் நிரந்தர நியமனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து சேவையாற்றி வருகின்றனர். இவர்களில் சிலர் அரச...

உதயன் பத்திரிகை விநியோகஸ்தர் மீதான தாக்குதல் மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனின் அலுவலகத்திலிருந்து வெடிபொருட்கள் மீட்பு போன்ற நடவடிக்கைகள் தமிழ் தேசிய சக்திகளை தனிமைபடுத்தி முறியடிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டவையாகும். (more…)

யாழ்.குடாநாட்டில் விவசாயிகளால் இந்த முறை மேற்கொள்ளப்பட்ட பெரும்போக நெற் செய்கை எதிர்பார்த்த விளைச்சலை ஈட்டிக் கொடுக்கவில்லை. இதனால் தாம் நட்டமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். (more…)

வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடத்துவதை நிறுத்த கோரி சமவுரிமை இயக்கத்தினால் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்திடும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று முற்பகல் 10 மணியிலிருந்து நடைபெற்றுவருகிறது. (more…)

வெலிகந்த புனர்வாழ்வு முகாமில் தற்போது புனர்வாழ்வு பெற்றுவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரும் புனர்வாழ்வுக் காலம் முடிந்த பின்னர் பல்கலைக்கழகத்தில் அவர்களது கல்வியைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என (more…)

பட்டாசு வெடித்தில் சிதறியதில் சிறுவன் ஒருவன் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

கீரிமலை, சேந்தாங்குளம் கடலில் குளிக்கச் சென்று காணாமல் போயிருந்த மாசியப்பிட்டியை சேர்ந்த சிவலிங்கம் உமாசங்கர் என்ற 16 வயது சிறுவனின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (more…)

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மின் மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு வேலைகளுக்காகவும் (more…)

கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் அலுவலகத்திலிருந்து நேற்று 350 கிறாம் நிறையுடைய சீ-4 ரக வெடிமருந்துகளும், பல்வேறு ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்ட இரு மடி கணினிகளும், ஆபாச வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்ட சீ.டி.க்களும், ஆணுறைகளும் மற்றும் யுவதிகளின் புகைப்படங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த் ஜயகொடி தெரிவித்தார். (more…)

வட மாகாண சபைக்கு புதிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்றய தினம் நடைபெற்றது. (more…)

தேசிய மீனவர் மகா சம்மேளனத்தின் தேசிய மகாநாடு எதிர்வரும் 22 ஆம் திகதி அலரி மாளிகை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளர் என். கணேசமூர்த்தி இன்று தெரிவித்தார். (more…)

தனியார் பஸ்களில் ரிக்கெட் வழங்க வேண்டும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் தெரிவிக்கப்பட்டது. எனினும் இதனை பெரும்பான்மையான தனியார் பஸ்கள் பின்பற்றுவதில்லை என்று விசனம் தெரிவிக்கப்படுகிறது. (more…)

புதிய மின் இணைப்புகளுக்கான கட்டணம் இந்த ஆண்டில் இருந்து ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் மின் பொறி யியலாளர் எஸ்.ஞானகணேசன் இத்தகவலைத் தெரிவித்தார்.இந்த விடயம் தொடர் பாக அவர் மேலும் கூறியதாவது: (more…)

யாழ்.நகரப் பகுதியிலுள்ள சில வர்த்தக நிறுவனங்களிடம் புலனாய்வாளர்கள் என்று அறிமுகப்படுத்திய சிலர் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான விவரங்களைத் திரட்டிச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று தினங்களாக இந்தச் சம்பவம் இடம்பெற்று வருவதாகக் கூறப்பட்டது. (more…)

வடமாகாணத்தின் கடல் வளத்தை தென்னிலங்கை மீனவர்கள் சூறையாடி வருவதாகத் வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.தவரட்ணம் குற்றஞ்சாட்டியுள்ளார்.பாதுகாப்புத் தரப்பினரின் முழுமையான ஒத்துழைப்புடனே இந்த வளச் சுரண்டல் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். (more…)

All posts loaded
No more posts