செனல் 4 தொலைக்காட்சி இலங்கையை விலை பேசுகிறது:- யாழ். தளபதி

போர்க்குற்ற படங்கள் என போலியான புகைப்படங்களை வெளியிட்டு செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இலங்கையை விலை பேசுகின்றது' என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க குற்றஞ்சாட்டினார். (more…)

யாழ். உயர்பாதுகாப்பு வலய 6,000 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்படும்:-மாவட்ட கட்டளைத் தளபதி

உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள 6000 ஏக்கர் காணிகள் மிக விரைவில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன என்று யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். (more…)
Ad Widget

படகுகள் ஆர்ப்பாட்டபேரணி நடத்துவேன்: மீண்டும் அமைச்சர் டக்ளஸ் எச்சரிக்கை

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்கள் ஒரு மாதகாலத்துக்குள் எடுக்கத் தவறினால், தான் கடலில் படகுகளின் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தப் போவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எச்சரித்துள்ளார். இலங்கை - இந்திய மீனவர்களிடையே காணப்படுகின்ற எல்லை தாண்டி மீன் பிடித்தல் குறித்த பிரச்சினைக்கு இரு நாட்டு மீனவர்களையும்...

எங்களுக்கும் இதயம் இருக்கிறது; யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதுவர்

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையை இந்தியா ஆதரிக்க வேண்டும் இவ்வாறு யாழ். சிவில் சமூகத்தால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா "எங்களுக்கும் இதயம் இருக்கிறது. இதற்குமேல் எதையும் சொல்ல விரும்பவில்லை'' என்று பதிலளித்தார். (more…)

பல்கலைக்கு தெரிவான மாணவர்கள் எண்ணிக்கை 63.1 வீதமாக அதிகரிப்பு; -கல்வி அமைச்சர்

வெளிவந்துள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இம்முறை பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களின் எண்ணிக்கை 63.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். (more…)

ஆசிய பசுபிக் சிறுவர் மாநாட்டில் பங்கேற்க யாழ். இந்து மாணவன் தெரிவு

ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் பிராந்தியங்களின் 25ஆவது சிறுவர் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். (more…)

பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பு

90, 95 ஒக்டைன் பெற்றோல்களின் விலை 3 ரூபாவினாலும் சாதாரண டீசலின் விலை 6 ரூபாவினாலும் சுப்பர் டீசலின் விலை 3 ரூபாவினாலும், மண்ணெண்ணெய்யின் விலை 4 ரூபாவினாலும் இன்றுமுதல் அதிகரிப்பதாக (more…)

பொலிஸாரை நண்பர்களாக பார்க்கவும்: யாழ். டி.ஐ.ஜி

இலங்கையில் பொலிஸாரைப் பகைவர்களாகவும் எதிரிகளாகவும் மக்கள் பார்ப்பதை விடுத்து நண்பர்களாக பார்க்கவேண்டும் என்று யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண தெரிவித்துள்ளார். (more…)

விபத்தில் இளைஞர் பலி

மோட்டார் சைக்கிளுக்கு குறுக்காக நாய் ஒன்று ஓடி விபத்துக்கு உள்ளானதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சிறுவிளான் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் ரவிராஜ் (வயது 23) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். (more…)

யாழில் துவிச்சக்கர வண்டிகளுக்கு மின்விளக்கு பொருத்துவது கட்டாயமாக்க நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில் துவிச்சக்கரவண்டிகளுக்கு மின் விளக்கு பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண இன்று தெரிவித்தார். (more…)

யாழில் 9 மணித்தியால மின்வெட்டு

யாழ்ப்பாணத்தின் சில பிர தேசங்களில் ஒன்பது மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. வீதி அகலிப்பு பணிகளுக்காகவும் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடம் நகர்த்தவேண்டியிருப்பதாலும், புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு வேலைகளுக்காகவும், (more…)

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கும் உணவகங்களை மூட நடவடிக்கை

சுகாதார சீர்கேடான முறையில் இயங்கும் உணவகங்களை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ் மாநகர சபையின் சுகாதாரக் குழுத் தலைவர் விஜயகாந் தெரிவித்துள்ளார். (more…)

வன்னி போர் சூழலில் அகப்பட்ட பட்டதாரிகள் பயிலுனர் நியமனம் கோரி மகஜர் கையளிப்பு

வன்னி போர் சூழலில் அகப்பட்ட யாழ். மாவட்ட பட்டதாரிகள், பட்டதாரி பயிலுனர் நியமனத்தில் தம்மையும் உள்வாங்குமாறு கோரி பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தாவிடம் மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர். (more…)

முன்னுரிமை அடிப்படையில் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள்

வலி.வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில், கண்ணிவெடி அகற்றப்பட வேண்டிய பகுதிகளில் கட்டுவனில் ஒரு பகுதி தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றி முடிக்கப்பட்டுள்ளது. (more…)

மீள்குடியேற்ற விபரங்களை ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்ப நடவடிக்கை

யாழ். வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றம் தொடர்பான விபரங்களை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக (more…)

96ஆவது பொன் அணிகள் போர் ஆரம்பம்

யாழ். மாவட்டத்தின் பொன் அணிகள் இரண்டும் 96ஆவது தடவையாக துடுப்பாட்டக் களத்தில் மோதுகின்றன. யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான கிரிக்கெட் போட்டிகளில், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான பொன் அணிகள் போர் கிரிக்கெட் போட்டி இன்று காலை 9 மணிக்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி பிக்நெல் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது . முதலில் துடுப்பெடுத்தாடும் யாழ்ப்பாணக் கல்லூரி...

எந்த உதவியும் வேண்டாம் சொந்த இடத்துக்கு விடுங்கள் ;- வலி.வடக்கு மக்கள்

எங்களுக்கு எந்த உதவியும் வேண்டாம், சொந்த மண்ணில் குடியமர்த்தினாலே போதும், நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை பார்த்துக்கொள்வோம். எனவே சொந்த இடம் திரும்ப விடுங்கள். (more…)

28இல் 28ஆவது பட்டமளிப்பு விழா

யாழ். பல்கலைக்கழகத்தின் 28 ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 28ஆம் திகதி வியாழக்கிழமை கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார். (more…)

சா/த பரீட்சையில் ஆங்கில செயன்முறை பரீட்சை – கல்வியமைச்சர்

கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப்பரீட்சையில் ஆங்கில செயன்முறை பரீட்சையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். (more…)

பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு விசேட மாநாடு

யாழ்ப்பாணத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாகவும் அவர்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பிலான மாநாடு ஒன்று யாழ் மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts