- Wednesday
- September 10th, 2025

போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் வன்புணர்வுக்கு உள்படுத்தியதனால் மனவிரக்திக்கு உள்ளாகிய இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 20 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது....

வரலாற்றுச் சிறப்புமிக்க, தேவார பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் தடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. யாழ். – நல்லூரில் உள்ள இந்து மாமன்றனத்தின் அலுவலககத்தில், நல்லை ஆதீன முதல்வர் தலைமையில் ஒன்றுகூடிய சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த விடயம் தொடர்பாக...

அரச மற்றும் தனியார் வங்கிகள் கடன் மற்றும் வட்டி வீதங்களில் சலுகைகளை வழங்காத நிலையில் பாரியளவிலான நபர்கள் தொழிலை இழக்க நேரிடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வணிக பாதுகாப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுமார் 45 இலட்சம் பேர் இவ்வாறு தொழிலை இழக்க நேரிடுமென உள்நாட்டு வணிக பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது....

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது. இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெற்று வருகிறது. அதன்படி 37 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர். இராஜாங்க அமைச்சர்களின் விபரம் வருமாறு 01. ஜகத் புஷ்பகுமார – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் 02. ரஞ்சித்...

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம் குறித்து இணையனுசரணை நாடுகளிடம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் மீதான கரிசனையை வெளிப்படுத்தவேண்டுமெனில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டுமென்ற விடயத்தை உள்ளடக்கிய புதிய தீர்மானத்தை முன்வைப்பது...

நாட்டில் அண்மைக்காலமாக குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் திணைக்களத்தில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய அதிகாரிகள் குழுவிற்கான பாராட்டு நிகழ்வில் கலந்துகொண்ட போதே சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஸபந்து தென்னகோன் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பொலிஸாருக்கு சாதாரண பிரஜைகளின் கடமைகளில் ஈடுபடுவதற்கான நேரம் குறைக்கப்பட்டமையே இந்த நிலைக்கு...

யாழ்.வடமராட்சி, மந்திகை பகுதியில் மயக்க மருந்து கொடுத்து ஒருவர் மயங்கிய பின்னர் அவரின் மோதிரத்தை களவாடி சென்ற சம்பவமொன்று நேற்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வாடகை முச்சக்கரவண்டி ஒன்றில் வந்து கொண்டிருந்த நபர் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக வந்ததும் முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு கூறி மருத்துவமனைக்குள் மருந்து எடுப்பது...

எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் லாஃப் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களின் விலையை மேலும் குறைக்க உள்ளதாக கடந்த 21ஆம் திகதி அறிவித்திருந்தது. இதற்கமைய, லாஃப் எரிவாயுவின் விலை இந்த...

5 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்தால் பிணை வழங்கப்படாது என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளை எதிர்த்துப் போராடுவதற்கான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்த பொது பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தில் இது தொடர்பில் தேவையான...

எரிபொருள் இன்மையால் நாளாந்தம் சுமார் 300 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : எரிபொருள் இன்மையால் நாளாந்தம் சுமார் 300 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை மூட வேண்டிய...

போதைப் பொருள் பாவனையில் இருந்து இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றும் நடவடிக்கையாக மாணவர்களின் புத்தகப்பை பரிசோதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாட்டுக்குள் ஹெரோயின் கொண்டுவந்து அதனை மிக நுணுக்கமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை...

நாட்டில் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் கோதுமை மா தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என நம்புவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். துருக்கியில் இருந்து கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதாக அவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 450 ரூபாயாக அதிகரித்தால், 450...

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வு ஜெனீவாவில் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது ஐ.நா.உறுப்பு நாடுகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. எவ்வாறாயினும், எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்துகொள்வதற்கு கட்சி பிரதிநிதிகளை அனுப்புவதற்கு கூட்டமைப்பு தீர்மானிக்கவில்லை என அதன் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இருப்பினும்...

யாழ். செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம் செம்மணி பகுதியில் இன்று புதன்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது. அதன் போது செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும் நினைவு கூறப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 1996 ஆம் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி கல்லூரி...

022 ஆம் ஆண்டுக்கான பாடசாலையின் முதலாம் தவணை இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் துறையின் கீழ் இயங்கும் பாடசாலையின் முதல் தவணை இன்றுடன் முடிவடைகிறது. இந்தநிலையில் பாடசாலையின் இரண்டாம் தவணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இரண்டாம் தவணை செப்டம்பர் 13ஆம்...

இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பும் வடமாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரச காணி வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணிபுப்புரை விடுத்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக தமிழ் நாட்டில் சுமார் 58 ஆயிரம் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்களில் சுமார் 3ஆயிரம் பேர் மீள இலங்கைக்கு திரும்பவுள்ளனர். ஏற்கனவே ஒரு...

இலங்கையில் வருடாந்த வருமானம் 1.2 மில்லியன் ரூபாவை மீறும் ஒவ்வொரு நபரிடமிருந்தும் வருமான வரி அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மாத வருமானம் உள்ள ஒவ்வொரு நபரும் வருமான வரிக்கு உட்பட்டவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் முதலாம்...

ஒரு இலட்சம் மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் கொண்ட கப்பலொன்று இலங்கை கடற்பரப்பில் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கச்சா எண்ணெய் கப்பலுக்கு பணம் செலுத்த முடியாத நிலையில் 08 நாட்களாக கப்பல் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. யூரல் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தக் கப்பல் ஓகஸ்ட் 23ஆம் திகதி இலங்கையை வந்தடைந்ததுடன், பணம் செலுத்த முடியாத காரணத்தினால்...

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 450 ரூபாவை எட்டினால், ஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபாவாக அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பாண் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதுடன், பாண் விற்பனையில் தொடர்ச்சியாக நட்டம் ஏற்படுவதாகவும் அகில இலங்கை உணவக...

இலங்கையில் ஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகத்து வருவதாக மருத்துவத்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் மாதம் சர்வதேச ஞாபகமறதி நோயாளர்களுக்கான மாதமாகவும், செப்டம்பர் 21ஆம் திகதி சர்வதேச ஞாபக மறதியாளர்கள் தினமாகவும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையிலும் ஞாபகமறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருவதாக இலங்கை அல்சைமர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தநிலை இப்படியே...

All posts loaded
No more posts