அரச மற்றும் தனியார் வங்கிகள் கடன் மற்றும் வட்டி வீதங்களில் சலுகைகளை வழங்காத நிலையில் பாரியளவிலான நபர்கள் தொழிலை இழக்க நேரிடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு வணிக பாதுகாப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுமார் 45 இலட்சம் பேர் இவ்வாறு தொழிலை இழக்க நேரிடுமென உள்நாட்டு வணிக பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.
பெறுமதி சேர் வரி அதிகரிப்பின் காரணமாக தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் உள்நாட்டு வணிக பாதுகாப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.