Ad Widget

அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை – அதிர்ச்சியில் நாட்டு மக்கள்

இலங்கையில் வருடாந்த வருமானம் 1.2 மில்லியன் ரூபாவை மீறும் ஒவ்வொரு நபரிடமிருந்தும் வருமான வரி அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மாத வருமானம் உள்ள ஒவ்வொரு நபரும் வருமான வரிக்கு உட்பட்டவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்பட திட்டமிடப்பட்டு வருகின்றது.

புதிய தீர்மானத்திற்கமைய, வருடாந்த வருமானம் 1.2 மில்லியனில் இருந்து 06 மில்லியன் ரூபா வரை வருமான வரியாக 6 சதவீதம் மற்றும் 05 மில்லியனில் இருந்து 10 மில்லியன் வரை வருமான வரி 12 சதவீதமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி 10-15 மில்லியன் ரூபாவுக்கு இடைப்பட்டவர்களுக்கு 24 சதவீதம் மற்றும் 15-20 மில்லியன் ரூபாவுக்கு இடைப்பட்டவர்களுக்கு 30 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் 20 மில்லியனுக்கும் அதிகமான தனிநபர்கள் வருமானத்தில் 36 சதவீதம் அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும்.

கடந்த அரசாங்கத்தின் போது இந்த வரி வரம்புகள் விதிக்கப்பட்டன, ஆனால் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தவுடன் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தத்தில், செலுத்த வேண்டிய குறைந்தபட்ச வருமான வரி வரம்பு ஆண்டு வருமானமாக 03 மில்லியனாக மாற்றப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் இந்த வரித் திருத்தம் கட்டாய சரத்தான மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts