Ad Widget

15ஆம் திகதிக்கு பின்னர் கோதுமை மா தட்டுப்பாடு முடிவுக்கு வரும்!!

நாட்டில் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் கோதுமை மா தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என நம்புவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

துருக்கியில் இருந்து கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதாக அவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 450 ரூபாயாக அதிகரித்தால், 450 கிராம் பாண் ஒன்றின் விலை 350 ரூபாயாக அதிகரிக்கப்படுமென உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலைமையைத் தடுக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் நுகர்வோர்கள் மட்டுமின்றி தாங்களும் கடும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கோதுமை மாவின் விலை உயர்வு காரணமாக நாடளாவிய ரீதியில் பல்வேறு விலைகளில் ரொட்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில் ரொட்டியை உட்கொள்வதை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related Posts