சங்கானையில் தொடரும் வழிப்பறி கொள்ளைகள்!

வீதியால் சென்ற முதியவர் ஒருவரை வழிமறித்த இரு வழிப்பறி கொள்ளையர்கள் , அந்த முதியவரை கத்தியினால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தி விட்டு , முதியவரின் ஒன்றரை பவுண் சங்கிலி மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பி சென்றுள்ளனர். சங்கானை பகுதியில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) குறித்த சம்பவம்...

17 வயதுடைய மகனை திருத்து தருமாறு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த தாய்!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஒருவரை அவருடைய தாயார் தனது மகனை திருத்தித் தருமாறு கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் இன்று (புதன்கிழமை) காலை ஒப்படைத்துள்ளார். ஒப்படைக்கப்பட்ட இளைஞன் க. பொ. த சாதாரண பரீட்சைக்கு தோற்றிய பின் வீட்டில் இருப்பதாகவும் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக...
Ad Widget

பேராசிரியர் சி. பத்மநாதனின் மூன்று ஆய்வு நூல்கள் வெளியீடு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் தகைசார், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி. பத்மநாதன் எழுதிய திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் பற்றிய மூன்று ஆய்வு நூல்களின் வெளியீட்டு விழா இன்றைய தினம் (புதன்கிழமை) யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் இந்து நாகரிகத்துறை ஏற்பாட்டில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நூல்...

முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு - மல்லாவி பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மல்லாவி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அனிச்சாமிகுளம் பிரதேசத்தில் மல்லாவி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது கைது...

வல்வெட்டித்துறையில் பகுதியில் வாள் வெட்டு ஒருவர் படுகாயம்!

வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த இருவர், வீட்டில் இருந்த முதியவர் மீது தாக்குதலை மேற்கொண்டதில் முதியவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் தேவமயில் முருகவேள் (வயது 65) எனும் முதியவரே படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் ஊறணி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை, நாவலடி , ஊரிக்காடு பகுதியில் உள்ள...

13 வயதுச் சிறுமி தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் – நவாலி பகுதியில் 13 வயதுச் சிறுமி ஒருவரை 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார். இது தொடர்பில் அப்பகுதி மக்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து 41 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் இன்றையதினம் கைது செய்துள்ளனர். குறித்த நபருக்கும் சிறுமியின் தாயாருக்கும் இடையே தவறான...

நெடுங்கேணியில் துப்பாக்கி சூடு – 21 வயது யுவதி பலி

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் இன்று (18) இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 21 வயது யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர். நெடுங்கேணி, பகுதியில் வீடடில் இருந்த 21 வயது யுவதி ஒருவர் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. குறித்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த யுவதி சம்பவ...

யாழில் முச்சக்கரவண்டி சாரதியொருவரின் மோசமான செயல்!!

யாழ். நகர் சேவைத் தரிப்பிட அனுமதி அற்ற, வீதியால் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்த இளம் பெண் ஒருவரை மிரட்டி சுமார் ஒரு கிலோ மீற்றருக்கும் குறைவான தூரத்திற்கு 2000 ரூபா கூலி கொடுக்குமாறு மிரட்டிப் பணம் பெற்றுக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் வைரவர் கோயிலடி அருகாமையில் நேற்று முற்பகல் இச் சம்பவம் பதிவாகியுள்ளது....

உயர் பாதுகாப்பு வலயத்துக்காக யாழில் 1,614.11 ஏக்கர் நிலத்தை சுவீகரிக்க முயற்சி

யாழ்.குடாநாட்டில் 1,614.11 ஏக்கர் நிலத்தை உயர் பாதுகாப்பு வலயத்துக்காக சுவீகரிக்கும் பணியை அரசாங்கம் தொடங்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் சில இடங்களை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்து கடந்த மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இம்மாதம் ஜனாதிபதி ரணில் இரத்து செய்திருந்தார். இந்நிலையில் யாழில் உயர் பாதுகாப்பு வலயத்துக்காக மக்களின் காணிகளை...

வல்லையில் தொடரும் வழிப்பறி கொள்ளை – பொலிஸார் பாராமுகம்!!

யாழ்ப்பாணம் வல்லை வெளி பகுதியில் தொடர் வழிப்பறி கொள்ளைகள் இடம்பெற்று வரும் நிலையில் அச்சுவேலி பொலிஸார் பாராமுகமாக உள்ளதாக பல தரப்பினராலும் குற்றம் சாட்டப்படுகிறது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆள் நடமாட்டம் குறைவான வல்லை வெளி பகுதியில் மாலை மற்றும் முன்னிரவு வேளைகளில் மோட்டார் சைக்கிள்களில் நடமாடும் வழிப்பறி கொள்ளையர்கள் பெண்களை இலக்கு வைத்து...

வடக்கு கடற் தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநருடன் மீனவப் பிரதிநிதிகள் நிகழ்நிலையில் சந்திப்பு!

வடமாகாண கடற் தொழிலாளர்கள் தமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் வடமாக ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை ஜூம் (zoom) செயலி ஊடாக நேற்று முன்தினம் சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற யாழ்ப்பாணம் உள்ள தீவு மன்னர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சங்கங்களின் பத்துக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு தமது...

ஏழுநாள் காய்ச்சலால் எட்டு மாத குழந்தை உயிரிழப்பு!

ஏழுநாள் காய்ச்சல் காரணமாக பிறந்து எட்டுமாதங்களேயான ஆண்குழந்தை உயிரிழந்துள்ளது கிளிநொச்சி கணேசபுரத்தை சேர்ந்த எட்டுமாத குழந்தைக்கு கடந்த ஏழுநாட்களாக காய்ச்சலுடன் சளி காணப்பட்டது. இதனை அடுத்து கடந்த 14 ம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனைக்காக சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நவாலி அட்டகிரி பகுதியில் 111 கைகுண்டுகள் மீட்பு!!!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் இன்று காலை பொலிஸ் விசேட அதிரடி படையினரால் 111 கைகுண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் காணியொன்றினை அதன் உரிமையாளர் கடந்த 11ஆம் திகதி உழவுக்குட்படுத்திய நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருளை...

சண்டிலிப்பாய் அபிவிருத்தி உத்தியோகஸ்தரிடம் வழிப்பறி!

சண்டிலிப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை வழிப்பறி கொள்ளையர்கள் வீதியில் மறித்து கத்தி முனையில் அவரிடம் கொள்ளையடித்துள்ளனர். அபிவிருத்தி உத்தியோகஸ்தரான குறித்த பெண் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) மாலை பிரதேச செயலக பணி முடித்து தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , வீதியில் நின்ற...

வல்வெட்டித்துறையில் அமைச்சரை கடிக்க முற்பட்ட நாய் சுட்டுக்கொலை!!

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்தே வடமராட்சிக்கு தனிப்பட்ட முறையில் முன்னெடுத்த பயணித்தின் போது அவரது பாதுகாவலரினால் நாய் ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இராஜாங்க அமைச்சர் தனது குடும்ப நண்பர் ஒருவரை சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு...

வெடுக்குநாறி மலை தொடர்பான வழக்கில் இருந்து ஆலயம் நிர்வாகம் விடுதலை!

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து ஆலயத்தின் நிர்வாகத்தினர் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை ஆயர்படுத்துமாறு வவுனியா நீதவான் பொலிஸார் உத்தரவிட்டுள்ளார். வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும்,நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு தடைகளை ஏற்ப்படுத்தி வந்ததுடன் தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம்...

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த நடவடிக்கை எடுங்கள் – கஜேந்திரன்

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் என்பன தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான முனைப்பைக் காண்பிக்காத நிலையில், இலங்கையை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகயை முன்னெடுக்குமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் பின்லாந்து வெளிவிவகார அமைச்சர் பெக்கா காவிஸ்தோவிடம் வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும்...

தேசிய அடையாள அட்டை பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான கட்டண அதிகரிப்பு அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசினால் வெளியிடப்பட்டது. இந்நிலையில், 100 ரூபாயாக இருந்த புதிய...

ஜனாதிபதியை சந்திப்பதற்கு வலிகாமம் வடக்கை சேர்ந்த 2500 குடும்பங்கள் ஆர்வம்!

காணிவிடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு வலிகாமம் வடக்கை சேர்ந்த 2500 குடும்பங்கள் விரும்புவதாக வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். மயிலிட்டி பலாலியில் உள்ள தங்கள் பாரம்பரிய நிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைளை எடுக்குமாறு கோருவதற்காகவே அவர்கள் ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஆவலாக உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தன்னை நாங்கள்...

எரிக் சொல்ஹெய்மிற்கும், கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பு

நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதற்கமைய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளதாக எரிக் சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் இதன்போது கவனம்...
Loading posts...

All posts loaded

No more posts