- Monday
- September 8th, 2025

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா,...

இன்று (ஒக்டோபர் 25) செவ்வாய்க்கிழமை நிகழவிருக்கும் சூரிய கிரகணம் இலங்கையிலும் ஒரு பகுதி தெரியும் என்று அறிவிக்கபட்டுள்ளது. அரிய நிகழ்வைப் பார்க்கும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானியலாளர்கள் எச்சரித்துள்ளனர். சூரிய கிரகணம் யாழ்ப்பாணத்தில் மாலை 5.27 முதல் 5.46 வரை தெரியும். அதன்போது சூரியன் சந்திரனை 8.8 சதவீதம் மறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பில் பகுதி...

பருத்தித்துறை புலோலி சிங்கநகர் பகுதியில் நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார் சசிகாந் (வயது- 24), மந்திகை உபயகதிர்காமம் பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் லம்போசிகன் (வயது ப24) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்துக்களின் பண்டிகையான தீபாவளி பெருநாளான நேற்று இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்...

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஷ்ட மாணவர்களுக்குக் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில், புதுமுக மாணவர்களைப் பகிடிவதைக்குட்படுத்திய சிரேஷ்ட மாணவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இடம்பெற்ற விசாரணைகளின் போது குற்றம் நிரூபிக்கப்பட்ட...

அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட பலநூற்றுக்கணக்கானோர் படகுமூலம் சென்று இந்தியாவில் ஏதிலிகளாக தஞ்சமடைந்துள்ளனர். அந்தவகையில் இன்று காலை திருகோணமலையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று படகு மூலம் இந்தியா சென்று தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் ஆகியோரே இவ்வாறு ஏதிலிகளாக சென்றுள்ளனர்....

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சம்பள அதிகரிப்பு சாத்தியமில்லை என்றால் இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு அரச ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கமைய, சுமார் ஐந்து இலட்சம் அரச ஊழியர்கள் கையெழுத்திட்ட மனுவுடன் அரசிடம் கோரிக்கையொன்றினை முன்வைக்க அரசு ஊழியர் சங்கங்களின் ஒன்றியம் முடிவு செய்துள்ளது. நாட்டில் தற்போது பணவீக்கம் வேகமாக உயர்ந்துள்ளதுடன், பெறப்படும் சம்பளம் வாழ்க்கைச் செலவுக்கு...

இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 35வது நினைவு தினம் இன்று (வெள்ளிக்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த 21பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். அந்த கொடூர சம்பவத்தின் 35ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ் போதனா...

2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், க.பொ.த. உயர்தரப் பரீட்சையை அடுத்த வருடம் (2023) ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17ஆம் திகதி...

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும் , யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் , வடமாகாண பண்பாட்டலுவல்கள் இணைந்து நடாத்திய யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா இன்று (வெள்ளிக்கிழமை) யாழில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் தலைமையில் இடப்பெற்ற இவ்விழாவில் , பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் எஸ்,எம்.சமன் பந்துலசேனவும்...

யாழ்ப்பாணம் நகரில் போலியான உறுதி நிறைவேற்றப்பட்டு மேற்கொள்ளப்பட்ட காணி மோசடி தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் மன்றில் முற்படுத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகரில் மறைந்த தம்பதியரின் சார்பில் நிறைவேற்றப்பட்ட அறுதி உறுதியின் மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினர் ஒருவரை கைது...

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட ஏனைய துறைகளில் பணிபுரியும் பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கு போட்டிப்பரீட்சை நடத்துவது தொடர்பாக எதிர்வரும் வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம் ஜயந்த நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 200 இற்கும் அதிகமானவர்கள், விரிவுரையாளர்கள் பட்டப்பின் படிப்பிற்காக வெளிநாடு சென்று திரும்பி வரவில்லை....

தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினரை தீபாவளி தினத்தன்று விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும் கட்டம் கட்டமாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ஆகியோருக்கு தமிழ் மக்கள் சார்பில் தனது நன்றியையும் அவர் தெரிவித்தார்....

நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் இதனைத் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலாக எதிர்வரும் 29ஆம் திகதி பாடசாலை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி...

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மா கிலோ ஒன்றின் மொத்த விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் வெதுப்பக பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அந்தச் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்த்தன தெரிவித்தார். கோதுமை மாவின் விலை...

யாழ்.மாநகர எல்லைக்குள் வீதிகள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீசுகின்றவர்களை புகைப்படம் மற்றும் காணொளி பதிவு செய்து ஆதாரத்துடன் மாநகரசபைக்கு அறிவிப்பவர்களிற்கு குறித்த குற்றத்திற்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தில் பத்து வீத தொகையினை சன்மானமாக வழங்குவதென யாழ்.மாநகர சபை தீர்மானித்துள்ளது. யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற மாநகர சபைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டது. மேலும்,...

சட்டவிரோதமான முறையில் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] காரைநகர் கடற்பரப்பில் நேற்றைய தினம்(புதன்கிழமை) இரவு மீன் பிடித்துக்கொண்டிருந்த போதே கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைதான மீனவர்களையும் அவர்களின் படகினையும் மேலதிக நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல்...

கோதுமை மாவின் மொத்த விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் கோதுமை மாவின் மொத்த விலை 290 ஆக காணப்பட்டதுடன், தற்போது 25 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கோதுமை மாவின் புதிய மொத்த விற்பனை விலை 265 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் ஒருவரும் ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 772ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில்...

இலங்கையின் முன்னாள் பிரதமர் ராஜபக்ச தனது மனைவியுடன் சேர்ந்து கொழும்பில் உள்ள திரையரங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து ரசித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், முன்னாள்...

All posts loaded
No more posts