யாழ்.பல்கலையில் தற்கொலை விழிப்புணர்வு ஊர்வலம்

அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுக்கும் முகமாக யாழ்.பல்கலைக் கழக உளவியல் மெய்யியல் துறையினரின் சமுதாய வழிகாட்டல் மையத்தினர் தற்கொலை விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றினை பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர் (more…)

வீதியால் நடந்துசென்றவர் மீது தாக்குதல்

கொடிகாம் - நெல்லியடி வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்தவர் மீது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் மூவர், புதன்கிழமை (10) இரவு தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Ad Widget

வாழ்வாதார நிவாரண திட்டத்தின்கீழ் 706 பேருக்கு கடன்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வாழ்வாதார நிவாரண கடன் (சஹண அருண கடன் திட்டம்) திட்டத்தின் கீழ், யாழ்.மாவட்டத்தில் இதுவரையில் 706 பயனாளிகளுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஆ.ரகுநாதன் இன்று வியாழக்கிழமை (11) தெரிவித்தார். (more…)

13 குறித்து கூட்டமைப்புடன் பேச தயார் – ஜனாதிபதி

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பகிரங்க பேச்சுக்கு தான் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

பளையில் மிதிவெடி; எஜமானைக் காப்பாற்றிய நாய்

மிதிவெடியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தனது எஜமானின் உயிரை சமயோசிதமாகச் செயற்பட்டுக் காப்பாற்றியுள்ளது ஒரு நாய். உடனே எங்கோ வெளிநாட்டில் நடந்த சம்பவம் என்று எண்ணிவிடாதீகள். இந்தச் சம்பவம் பளை, இத்தாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. (more…)

முதலில் பிஸ்கெட் பிறகு கைவிலங்கு- கடற்படையின் வினோதக் கைது

நாங்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டு நிற்கும் போது இலங்கை கடற்படையினர் முதலில் வந்து எங்களுக்கு பிஸ்கெட் கொடுத்து விட்டு எம்மிடமுள்ள மீன்களை வாங்கிச் சென்றனர். சிறிது நேரம் கழித்து வந்த அதே கடற்படையினர் தம்மை கைது செய்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தெரிவித்தனர். (more…)

இவ்வருடம் 23500 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி!

இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 23 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள முப்படையினரின் 20 பயிற்சி நிலையங்கள் ஊடாக கட்டங்கட்டமாக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் (more…)

வடமாகாண அபிவிருத்திக்கென இவ்வருடத்தில் மட்டும் 1.385 பில்லியன் ஒதுக்கீடு!

வடமாகாண அபிவிருத்திக்கென இவ்வருடத்தில் மட்டும் 1.385 பில்லியன் ரூபா அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாகாண அபிவிருத்திக்காக அடுத்த வருடத்தில் 6 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். (more…)

மேலும் 21 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து, மேலும் 21 இந்திய மீனவர்கள் இன்று வியாழக்கிழமை (11) அதிகாலை கைது செய்யப்பட்டனர். (more…)

மீனவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே மீன்பிடி ஆலோசனை குழுவின் அமைக்கப்பட்டது

'வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை ஆராயந்து உடனடியான அதற்கு தீர்வை பெற்று கொடுக்கவேண்டும் என்ற முதலமைச்சரின் ஆலோசனைக்கு அமைவாக மீன்பிடி ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது' (more…)

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் தொடர்பிலான கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் முகாமையாளர் மன்றத்தின் ஏற்பாட்டில், வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர், கழிவகற்றல் தொடர்பிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் யாழ்.பொது நூலகத்தில் நேற்று புதன்கிழமை (10) இடம்பெற்றது. (more…)

இந்திய மீனவர்கள் சுற்றாடலை அழிக்கின்றனர் – ஜனாதிபதி

இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதனால் இலங்கையின் சுற்றாடலை அழிக்கின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (more…)

சாவகச்சேரியில் வாகன விபத்து இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஜூனியன் பேக்கரி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். (more…)

சூளைமேடு கொலை வழக்கு: ஆஜராக டக்ளஸுக்கு அனுமதி

சூளைமேடு கொலை வழக்கில் காணொலி காட்சி மூலம் ஆஜராகுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. (more…)

சயந்தனும் தவராசாவும் அமெரிக்காவிற்கு

வடக்கு மாசகாண சபை உறுப்பினர்கள் இருவர் அமெரிக்காவுக்கு பயணமாகியுள்ளனர்.வடக்கு மாகாண சபை உறுப்பினர் சயந்தன் மற்றும் சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள பயிலரங்கு ஒன்றிற்காக செல்கின்றனர் என அறியமுடிகின்றது. (more…)

நேற்று மாகாண அவையில் என்னதான் நடந்தது?

வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வான 15 ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வீ.கே சிவஞானம் தலைமையில் நேற்று கைதடியில் உள்ள மாகாண சபைபயின் கட்டத்தில் நடைபெற்றது. (more…)

திருத்தங்களுடன் நிதி நியதிச்சட்டம் ஆளுநருக்கு மீண்டும் அனுப்பிவைப்பு

வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட நிதி நியதிச்சட்டம் தொடர்பான திருத்தங்கள் செய்யப்பட்ட கடிதம் புதன்கிழமை(10) மாலை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக வடமாகாண அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)

மூத்த பத்திரிகையாளர் மாணிக்கவாசகர் காலமானார்

மூத்த பத்திரிகையாளர் செல்லத்தம்பி மாணிக்கவாசகர் கொழும்பில் காலமானார். ஊடகத்துறையில் அனைவருடனும் நட்போடு பழகிய மூத்த பத்திரிகையாளர் செல்லத்தம்பி மாணிக்கவாசகர், செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில், (more…)

வடமாகாண விவசாய அமைச்சின் பார்த்தீனியம் ஒழிப்பில் களைநாசினிப் பிரிவும் களம் இறங்கியது

யாழ் மாவட்டத்தில் விவசாயத்தையும், மனித உடல் நலத்தையும், சுற்றுச்சூழலையும் மிக மோசமாகப் பாதித்து வரும் பார்த்தீனியத்தை ஒழிக்கும் பணியில் வடக்கு விவசாய அமைச்சு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. (more…)

உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையை இலங்கை சுகாதார அமைச்சு நிராகரிப்பு

உலக தற்கொலை தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதன்படி இந்த வருடத்தின் உலக தற்கொலை தினத்தின் தொனிப் பொருளாக 'தற்கொலை செய்வதை தவிர்த்துக்கொள்வோம், ஒருவருடன் ஒருவர் தொடர்புபட்ட உலகம்” காணப்படுகின்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts