Ad Widget

திண்பண்டங்களின் விலையை குறைக்க தயார் – பேக்கரி சங்கம்

இலங்கையிலுள்ள வெதுப்பகங்களுக்கு கோதுமை மா விநியோகம் செய்யும் நிறுவனங்கள், கோதுமை மாவின் விலை குறைத்தால், வெதுப்பகங்களில் உற்பத்தி செய்யப்படும் திண்பண்டங்களின் விலையை குறைக்கலாம் என்று இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

‘எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்களில் குறைவு ஏற்பட்டிருப்பதனால், கோதுமை மா விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். அதனால் அந்நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை குறைத்தால் எமது உற்பத்தி பண்டங்களின் விலையையும் எமக்கு குறைக்க முடியும்’ என்று இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கப் பேச்சாளர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

மேலும் வெதுப்பக உற்பத்தி பண்டங்களின் மீதான 15 வீத வரியினையும் பாணின் மீதான 2 வீத வரியினையும் அரசாங்கம் குறைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Related Posts