வலி வடக்கு வீதி புனரமைப்புக்கு 12 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் கீழுள்ள வீதிகளில் புனரமைப்புக்காக சபையில் இந்தாண்டு வரவு – செலவுத் திட்டத்தில் 12.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வலிகாமம் வடக்குப் பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், எமது பிரதேச சபை வருமானம் குறைந்த பிரதேச சபையாக இருக்கின்றது. இருந்தும் வீதி புனரமைப்புக்காக...

எதிரணி எம்.பி.க்கள் விடியவிடிய ஆர்ப்பாட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழுவுக்கு அழைப்பதற்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைநடுவில் விடியவிடிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சிலர், சபைக்குள்ளே தூங்கினர். அவர்களுக்கு உணவு விநியோகிப்பதற்காக நாடாளுமன்ற சிற்றுண்டிசாலை திறந்திருந்தது. நாடாளுமன்ற வைத்தியசேவையும் தயாராக இருந்தது. நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30க்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Ad Widget

கோட்டா புதனன்றும் மஹிந்த வெள்ளியும் ஆஜர்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் புதனன்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 24ஆம் திகதியும் ஆஜராகவுள்ளனர். கோட்டாபய ராபக்ஷவை புதனன்று ஆஜராகுமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தானாகவே ஆஜராகவிருக்கின்றார். ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்...

பத்தொன்பதாம் திருத்தச்சட்டம் தொடர்பான விவாதம் இன்று

பத்தொன்பதாம் திருத்தச்சட்டம் தொடர்பான விவாதம் இன்று (21) பாராளுமன்றில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்றும் நாளையும் (22) இவ்விவாதம் நடைபெறவுள்ளது. நேற்று (20) பாராளுமன்றில் நடைபெறவிருந்த விவாதம் கட்சித்தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பையடுத்து இன்றைக்கு பிற்போடப்பட்டது.

சிங்கள மற்றும் ஏனைய சமூகத்தினரும் இணைந்து மாகாண சபைகளை அர்த்தமுள்ளதாக்க வேண்டும்!

மாகாண சபையினை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ள முடியும் எனவும் மாகாண சபையினை செயற்பட வைக்க முடியாவிட்டால், அந்த மாகாண சபை தேவையில்லை என கூறமுடியும் எனவும், முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார். ஜனநாயக சக்திகள் மற்றும் சிங்கள மற்றும் ஏனைய சமூகத்தினரும் இணைந்து பேச்சு நடத்தி மாகாண சபைகளை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும்...

மஹிந்தவுக்கு ஆதரவாக 114 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனுவில் இதுவரை 114 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மேலும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று இரவு முழுக்க பாராளுமன்றில் 40 வரையான பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

தமது விவசாய காணிகளில் சிங்களவர்கள் அத்துமீறுவதாக திருமலை தமிழர்கள் போராட்டம்!

திருகோணமலை மாவட்டம் மூதுார் பிரதேச தமிழ் விவசாயிகள், தங்களது காணியில் சிங்கள மக்கள் அத்துமீறி வேளாண்மை செய்வதைத் தடுக்கக் கோரி திங்கட்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதுார் பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் தங்களது காணிகளில் அத்துமீறி நெல் வேளாண்மை செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேற்றி அங்கே தாங்கள் வேளாண்மை செய்யக் கூடியச் சூழல் ஏற்படுத்தப்பட...

படகில் வந்த இலங்கை அகதிகளை சிறையில் அடைக்க உத்தரவு

ராமேஸ்வரம் தனுஸ்கோடி அரிசிசல்முனை கடல்பகுதிக்கு வந்து இறங்கிய அகதியை சிறையில் அடைக்க நீதி மன்றம் உத்தரவு இட்டுள்ளது நேற்று முன்தினம் நள்ளிரவில் ராமேஸ்வரம் அருகே தனுஸ்கோடி அரிசிசல்முனை கடல் பகுதியில் திரிகோணமலைப்பகுதியைச் சேர்நத சத்தியசீலன(50) இவரது மனைவி பரமேஸ்வரி( 41) மகள்கள் மேரி(18) அஞ்சலிதேவி(15)விடுதலைசெல்வி (13) ஆகியோர் மன்னார் மாவட்டம் பேச்சாளைப் பகுதியல் இருந்து இலங்கை...

வளலாய் பகுதியில் வெடி பொருட்கள் அபாயம்

வளலாய் பகுதியில் அண்மையில் மீள் குடியேறிய தாம் வெடி பொருட்களுக்கு மத்தியில் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மக்கள், கடந்த மாதம் வளலாய் பகுதியில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டனர். அதனை அடுத்து அப்பிரதேசங்களில் உள்ள தமது காணிகளை துப்பரவு செய்து சொந்த இடங்களில் மீள் குடியேறி வருகின்றார்கள். தாம் காணிகளை துப்பரவு செய்யும் போது...

சந்திக்க நேரம் கேட்டும் முதல்வர் பதில் தரவில்லை – யாழ். மருத்துவர் சங்கத்தின் தலைவர்

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு குறித்து வடக்கு மாகாண முதலமைச்சரை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாட சந்தர்ப்பம் கேட்டு கடிதம் எழுதினோம். அதற்கு அவர் நீண்ட நாள்களாகியும் பதில் தரவில்லை. - இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் யாழ். மாவட்ட மருத்துவர் சங்கத்தின் தலைவர் முரளி வல்லிபுரநாதன். சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் கழிவு ஒயில் கலந்துள்ளமை சம்பந்தமான...

நிபுணர் குழுவில் நீரியல் நிபுணர்கள் இல்லை: களனி பல்கலை விரிவுரையாளர் ஆதங்கம்!

வலிகாமம் பகுதியில் உள்ள நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொள்ளும் வட மாகாண நிபுணர் குழுவில் நீர் மாசு குறித்த நிபுணத்துவம் பெற்றவர்கள் இல்லை என களனி பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளர் வைத்தியகலாநிதி குமரேந்திரன் தெரிவித்துள்ளார். சுன்னாகம் சிவன் கோவில் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஆவண இறுவட்டு...

ராடரின் உதவியுடன் சுன்னாகத்தில் ஆய்வு!

வடக்குமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் சுன்னாகம் பகுதி நிலக்கட்டமைப்பை ஆராயும் நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுன்னாம் மின்சார நிலையப் பகுதியில் உள்ள பிரதேசத்தில் கழிவு ஒயில் நிலத்தில் கலந்துள்ளமை தொடர்பில் ஆராயும் பெருட்டு ராடர் கருவி மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட ராடர் கருவியின் உதவியுடன், தொழில் நுட்பவியலாளர்களை...

இருவர் கொடுத்த வாக்குமூலத்தால் 10 ஈருருளிகள் மீட்பு

யாழ்ப்பாணம் குருநகர் மற்றும் அராலிப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருவர் நேற்று யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் 26,29 வயதுடையவர்கள் என்றும் கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த நபர்கள் கொடுத்த வாக்குமூலத்தால் களவாடப்பட்ட 10 துவிச்சக்கர வண்டிகளை யாழ்ப்பாண பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக...

இலங்கையர் ஐவர் தமிழகத்தில் கைது

தமிழகத்தின் தனுஷ்கோடி அருகேயுள்ள அரிச்சல்முனை பகுதியில் கரைசேர்ந்த இலங்கை தம்பதியினர் மற்றும் அவர்களது மூன்று இளவயது மகள்மார் உட்பட ஐவரை கைது செய்துள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் பேசாலை பகுதியிலிருந்து 25,000 இலங்கை ரூபாயை வழங்கி படகு மூலம் இவர்கள் தமிழகத்தை வந்தடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை அரிச்சல்முனையருகே இறக்கிவிட்ட படகோட்டிகள் மீண்டும் மன்னாரை...

யாழில் ரயில் பயணிகளின் நன்மை கருதி புதிய பேருந்து சேவைகள்!

கொழும்பிலிருந்து ரயில் மூலம் யாழ்ப்பாணம் வரும் அனைத்துப் பயணிகளும் தத்தமது இடங்களிற்கு செல்வதற்கு வசதியாக இலங்கை போக்குவரத்துச்சபையின் யாழ்.சாலையினால் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாண ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து ரயில்களின் நேரத்திற்கும் எற்ப 776 பாதை வழியே குறிகட்டுவானுக்கும், 777,780 பாதைகள் வழியே ஊர்காவற்றுறைக்கும், 788 பாதை வழியே இளவாலைக்கும் 789...

இலங்கை கிரிக்கெட் சபைக்கான நிதியை நிறுத்தியது ஐ.சி.சி.!

இலங்கைக் கிரிக்கெட் சபைக்கான நிதி உதவியை சர்வதேச கிரிக்கெட் சபை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இலங்கைக் கிரிக்கெட் சபைக்குள் காணப்படும் அதிகரித்த அரசியல் தலையீடுகளே நிதி நிறுத்தப்பட்டமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இலங்கைக் கிரிக்கெட் சபையின் நிர்வாகக் குழு கலைந்தது. இந்நிலையில் இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்ட்டது. இது தொடர்பில் விளையாட்டுத்துறை...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19 ஆம் திருத்தத்திற்கு ஆதரவு! மூனின் அறிக்கைக்கும் வரவேற்பு!!

அரசமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக அரசு இதுவரையில் தகவல்களை வெளியிடவில்லை. எனவே, அது தொடர்பில் விவரங்கள் வெளியான பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளியிட முடியும் என்றும்...

கதிரை சின்னத்தில் மஹிந்த?

இலங்கை அரசியலில் அடுத்த வாரம் தீர்க்கமான சில தீர்மானங்களை எடுக்கும் வாரமாக அமையப் போகின்றது. 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுமா? அல்லது நாடாளுமன்றம் கலைக்கப்படுமா? என்ற கேள்விகள் இலங்கை அரசியலை ஆக்கிரமித்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் வேட்பாளராகி பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரை சின்னத்தில் போட்டியிடுவாரென்றும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இது தொடர்பில்...

முன்னாள் – இந்நாள் முதல்வர்கள் யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேச்சு

வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் யாழ்ப்பாணத்தில் வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து உரையாடினார். இச்சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இலங்கை வந்துள்ள வரதராஜப்பெருமாள் தாம் கட்சி சாராத அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட உத்தேசித்துள்ளார்...

19ஆவது திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

அரசியலமைப்பில் மேற்கொள்ளவுள்ள 19ஆவது திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள்,கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் அதிகாரங்கள் சிலவற்றை குறைக்கும் வகையில் கொண்டுவரப்படவுள்ள 19ஆவது திருத்தத்துக்காக சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூல திருத்தத்துக்கே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. 19ஆவது திருத்தத்தில் சில உறுப்புரைகளை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்து,...
Loading posts...

All posts loaded

No more posts