100 ரூபாவாக குறைகிறது பாணின் விலை! வெளியானது தகவல்

பாணின் விலையை 100 ரூபாவாக குறைக்க எதிர்பார்ப்பதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த விலை குறைப்புக்கு அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையைக் குறைத்தால் மட்டுமே தற்போது முடங்கியுள்ள வெதுப்பகத் தொழிலை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பாண் உள்ளிட்ட உணவு...

தேர்தலை நடத்த கோரி யாழில் போராட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினரால் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10. 30 மணியளவில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மின் கட்டண உயர்வை உடன் நிறுத்து, பொருட்களின் விலையை குறை, உள்ளூராட்சி...
Ad Widget

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 334.50 ரூபாவாகவும் விற்பனை விலை 348.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

யாழ்.சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்!

வடக்கின் நுழைவாயில்” சர்தேச வர்த்தக சந்தை 13வது தடவையாக இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது. யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை 13 ஆவது தடவையாகவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தொடக்கம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரையிலான மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது. கண்காட்சி கூடத்தினை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நாடா வெட்டி திறந்து வைத்தார்....

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்தத்துக்கு தட்டுப்பாடு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதி வழங்கல் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், அந்த அதிகரிப்பிற்கு ஏற்ப குருதிக்கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை எனவும் இதனால் இரத்த வங்கியில் அடிக்கடி இரத்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியவில்லை என இரத்த வங்கி அறிவித்துள்ளது. கடந்த 28ஆம் திகதி 49...

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான உணவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளது.

ஊடகங்களை அனுமதிக்காத அரச அதிபர்!! ஊடகவியலாளர்களை உள்ளேவருமாறு அழைத்த டக்ளஸ்!!

யாழ்.மாவட்டச் செயலர் சிவபாலசுந்தரன் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி முன்னாயத்தக் கலந்துரையாடலுக்கு ஊடகங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உடனடியாக ஊடகவியலாளர்களை உள்ளேவருமாறு அழைத்தார். கடந்த காலங்களில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு...

இராணுவத்தினருடன் மதுபோதையில் தர்க்கம்!! இரு இளைஞர்கள் கைது!!

யாழ்.நீர்வேலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் ரோந்து சென்ற இராணுவத்தினருடன் மதுபோதையில் தர்க்கம் புரிந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்து சென்ற இராணுவத்தினரின் துவிச்சக்கர வண்டிகளுக்கு குறுக்கே மோட்டார் சைக்கிளை விட்டு தர்க்கம் புரிந்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய கோப்பாய் பூதர்மடம் மற்றும் நீர்வேலி பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய இழுவை படகுகள் மீண்டும் அட்டகாசம்!

யாழ் சுழிபுரம் மேற்கு சவுக்கடி கடற்பரப்பில் நேற்று இரவு கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்களின் வலைகள் நாசமாக்கப்பட்டுள்ளது. சுமார் 12 இலட்சம் பெறுமதியான வலைகள் இந்திய இழுவை படகுகளால் அறுத்து நாசம் செய்யப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சுழிபுரம் திருவடி நிழலை கடற்பரப்பிலும் இவ்வாறானதொரு சம்பவம் பதிவாகியிருந்தமை...

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நடைபெற்றது!

யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்க உள்ளதாக அமைச்சர் டக்ளஸ்...

மண்ணெண்ணெய் விலை குறைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (01) நள்ளிரவு முதல் இது நடைமுறைக்கு வரும். இருப்பினும், மற்ற பெட்ரோலிய பொருட்களின் விலைகள் திருத்தப்படவில்லை என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் கூறியது. எனவே, ஒரு லிட்டர் பெட்ரோலியப் பொருட்களின் தற்போதைய விலைகள் பின்வருமாறு: மண்ணெண்ணெய் - ரூ....

யாழ்.நகர் பகுதியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை!

யாழ் நகரப் பகுதிகளில் வாகன நெரிசலை தடுப்பதற்கும் வாகனங்களை நிறுத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளும் பொருட்டு யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.மஞ்சுள செனரத்துடன் யாழ். வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் யாழ் பொலிஸ் தலைமையகத்தில் நேற்றைய தினம் (புதன்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர். குறித்த கலந்துரையாடலில், யாழ் நகரப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் முறையற்ற...

யாழ். மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு விரைவில்!

யாழ். மாநகர சபையின் எஞ்சியுள்ள ஆட்சிக் காலத்துக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ளது. 2022 டிசம்பர் மாதம், யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வாக்கெடுப்பின் முதலாவது சமர்ப்பிப்பில் அங்கீகரிக்கப்படாததன் காரணமாக முன்னாள் முதல்வரும்,...

எனது சம்மதம் இன்றி எனது கட்சியின் பெயருக்கு யாரும் பணம் வழங்க வேண்டாம்! – சி.வி.விக்னேஸ்வரன்

போலியாக தனது பெயரையும் கட்சியினையும் பயன்படுத்தி சில நாட்களாக வெளிநாடுகளில் பணம் சேகரிக்கும் சம்பவம் இடம்பெறுவதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது தலைமையில் இயங்கி வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பெயரில் அதன் செயலாளர் நாயகம் ஆகிய எனக்கு...

புலிகளின் தலைவர் தொடர்பாக பொய்யான கருத்துகளை வெளியிடுவது போராட்டத்தை அவமதிக்கும் செயல் – சித்தார்த்தன்

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து அவருடைய கருத்து அல்ல என்பதை அவரே குறிப்பிட்டிருந்ததாக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார். தனது குடும்பதையே ஒரு இனத்திற்காக அர்பணித்த தம்பி...

பொதுமக்கள் ஒன்று சேரும் உரிமையை தடுக்க ஜனாதிபதி முயற்சிக்கின்றார் – எம்.ஏ சுமந்திரன்

பாதைகள், வீதிகள், பாலங்கள் போன்றவை இந்த நாட்டில் அத்தியாவசிய சேவையா என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார் திருகோணமலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த விசேட சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”நேற்றைய தினம் ஜனாதிபதி அவர்களால் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் பாதைகள், வீதிகள்,...

இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் – விசாரணையினை ஆரம்பித்தது சி.ஐ.டி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான கொலை சதி முயற்சி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் கட்சியொன்றுடன் தொடர்புடைய குழுவொன்று, சில தினங்களுக்கு முன்னர் வெளிநாடொன்றில் இந்த கொலைச் சதித்திட்டம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக...

யாழில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் வழக்கை மே மாதம் 8ஆம் திகதிக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்ள யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகளின் வழக்கு விசாரணை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இன்றைய...

புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழில் விசேட வைத்தியசாலை!

புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழ்ப்பாணம், பதுளை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகளையும், பொருத்தமான இடத்தில் விசேட நவீன சிறுவர் வைத்தியசாலையொன்றையும் ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மருத்துவ ஆராய்ச்சிக்கான நவீன ஆய்வுகூடம்...

போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து காவலாளியை வாளால் வெட்ட முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது!!

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்ததுடன், கடமையில் ஈடுபட்டிருந்த காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நோயாளர் பார்வை நேரம் முடிந்த பின் தந்தையை பார்வையிட அனுமதிக்கவில்லை என்ற காரணத்துக்காகவே இந்த வன்முறை இடம்பெற்றதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது....
Loading posts...

All posts loaded

No more posts