- Tuesday
- August 26th, 2025

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளும் பணி இன்றுடன் நிறைவடைகிறது. இம்முறை பரீட்சைக்கு ஓன்லைன் (online) ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க வேண்டும் என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரர்கள் தமது பாடசாலை அதிபரினூடாகவும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட முறையிலும் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய விண்ணப்பிக்க வேண்டும். பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான...

நாட்டில் இன்று மழையுடனான காலநிலை ஓரளவு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் அதே வேளையில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, மேல் மற்றும்...

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகள் இந்திய துணைத்தூதுவரை நேற்று சந்தித்து கலந்துரையாடினர். நேற்று மதியம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் துணைதூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை சந்தித்த மீனவர் சங்க பிரதிநிதிகள் மகஜர் ஒன்றை வழங்கியதோடு, வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர். குறிப்பாக இந்திய கடற்றொழிலாளர்களின்...

யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவு விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) வைத்தியசாலையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது த.சத்தியமூர்த்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்திய சாலையின் மருத்துவ கழிவுகள் பாதுகாப்பான முறையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உள்ள எரியூட்டியில் எரிக்கப்பட்டு...

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறை பக்கம் உள்ள நுழைவாயிலுக்கு அருகில் பட்டா வாகனத்தில்...

இந்திய கடற்றொழிலாளர்களை இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தொிவித்து வடமாகாண கடற்றொழிலாளர்களால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்று அனுப்படவுள்ளது. இதன்போது நேரில் சந்தித்து பேச வாய்ப்புதரக்கோரியும் குறித்த கடிதத்தில் வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் வடபகுதி கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலில்...

யாழ். பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் 4 பேருக்கு வகுப்புத் தடை மற்றும் பல்கலைகழக வளாகத்திற்குள் நுழைவதற்கான தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த 22 ஆம், 23 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலை வார நிகழ்வுகளின் போது, 3 ஆம் வருட மாணவர்களால், 2 ஆம் வருட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் சுதந்திரமான மற்றும் முறை சார்ந்த விசாரணையை...

ரணில் விக்ரமசிங்க தன்னுடைய அடி மனதில் இருக்கின்ற அந்த பயங்கரவாத தோற்றத்தை வெளிக்காட்டி மக்களின் உரிமைகளை தடுத்து வருவது மிக மோசமானது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் இன்று இடம்பெறுகின்ற நிழ்வுகளிற்கு இலங்கையின் ஜனாதிபதி...

எதிர்காலத்தில் பெற்றோல் விலையை சுமார் 800 ரூபாவாக அதிகரிப்பதற்கக QR முறையை இல்லாதொழிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் வினவிய போது அவர் அதனை நிராகரித்துள்ளார். தற்போது அவ்வாறான திட்டங்கள் எதுவும் இல்லை எனவும், எரிபொருளின் விலை 10 - 15 ரூபா...

யாழ்ப்பாணத்தில் காணியற்று வாழும் தமக்கு காணி வழங்க வேண்டும் என கோரி வடமாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ஆகியோரிடம் காணி அற்றோர் மக்கள் இயக்கம் மகஜர் கையளித்துள்ளது. நீண்ட காலமாக தாம் வாடகை வீடுகளில் வசித்து வருவதனால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதுடன் , தற்போது பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளமையால் ,...

ஆட்கொணாவு மனு மீதான கட்டளை இராணுவத்தினருக்கு எதிரானதாகவுள்ளமை மிகப்பெரிய வெற்றி எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை ஆஜர்ப்படுத்தவும் அல்லது காரணம் கூறவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி எஸ். இரட்ணவேல் தெரிவித்தார். வவுனியா மேல் நீதிமன்றத்தில் பொன்னம்பலம் கந்தசாமி (கந்தம்மான்), சின்னத்துரை சசிதரன் (எழிலன்), உருத்திரமூர்த்தி கிருஸ்ணகுமார் (கெலம்பஸ்) ஆகியோர் தொடர்பாக ஆட்கொணர்வு மனு மீதான...

இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது பால்நிலைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்னும் தலைப்பிலான ஓவியக் கண்காட்சி யாழ். பல்கலைக் கழக நூலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) காலை ஆரம்பமாகியது. இந்த ஓவியக் கண்காட்சி எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையம், ஐக்கிய நாடுகள்...

ஜனாதிபதி பைத்தியக்காரத்தனமாக பேசுகிறார் எனவும்,தேர்தலே இல்லை என அறிவித்து பைத்தியம் பிடித்தவர் போல் நடந்து கொள்கிறார் எனவும்,தேர்தல் இல்லை என்றால்,இல்லாத தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்தது எவ்வாறு என தாம் கேள்வி எழுப்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். வேட்புமனு தாக்கல் செய்யும் திகதியும் அறிவிக்கப்பட்டு,தேர்தலை நடத்தும் திகதியும் தீர்மானிக்கப்பட்டதன்...

நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவவிற்கும், சி.வி.விக்கினேஷ்வரனுக்கும் இடையில் தொடர்பு உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) அமெரிக்க பாதுகாப்பு பாதுகாப்பு அதிகாரிகளின் விஜயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார முன்வைத்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார். இருவருக்குமான நியமன கடிதத்தை பிரதமர் தினேஷ் குணவர்த்தன இன்றைய தினம் (வியாழக்கிழமை) வழங்கி வைத்துள்ளார்.

தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி நாடாளுமன்றில் கூறியுள்ள நிலையில் , தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவி என யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் காசுக்கட்டளை மூலம் 500 ரூபாய் பணத்தினை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர், “தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம், சிறு துளி பெருவெள்ளம்”...

மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் 350 மெகாவோட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கான அனுமதியை இலங்கை முதலீட்டு சபை நேற்று இந்திய அதானி நிறுவனத்திற்கு வழங்கியது. முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்தநிகழ்வில் இந்திய அதானி நிறுவனத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்....

நடைபெறாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்று(வியாழக்கிழமை) விசேட உரையாற்றிய அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தற்போதை சூழ்நிலையில் தேர்தலொன்றை நடத்துவதற்கு நாட்டின் பொருளாதாரம் சீராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கான நிதி இல்லையென கடந்த டிசம்பர் 14ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்ததாகவும்...

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் (வியாழக்கிழமை) நல்லை ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர ஞானதேசிக பரமாச்சார்ய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார். நல்லூரில் உள்ள நல்லை ஆதீனத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் போது செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன், எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்...

சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சகல அரச மருத்துவமனைகளிலும் இன்றைய தினம் (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. அதற்கு ஆதரவு வழங்கும் வகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலதிக நேரக் கொடுப்பனவை வரையறுத்தல் தொடர்பான...

All posts loaded
No more posts