Ad Widget

பொதுமக்கள் ஒன்று சேரும் உரிமையை தடுக்க ஜனாதிபதி முயற்சிக்கின்றார் – எம்.ஏ சுமந்திரன்

பாதைகள், வீதிகள், பாலங்கள் போன்றவை இந்த நாட்டில் அத்தியாவசிய சேவையா என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்

திருகோணமலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த விசேட சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”நேற்றைய தினம் ஜனாதிபதி அவர்களால் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் பாதைகள், வீதிகள், பாலங்கள் அடங்கலாக மதகுகளையும் அத்தியாவசிய சேவையாக பிரகடுனப்படுத்தப்பட்டுள்ளது.

இனிவாரும் காலங்களில் பொதுமக்கள் ஒன்று சேரும் செயற்பாடுகளை தடுப்பதற்காகவே இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளில் ஜனாதிபதி ஈடுபட்டு வருவதாகதகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts