- Tuesday
- August 26th, 2025

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மைநிலையினை வலியுறுத்துமாறு கோரி அவர்கள் போராட்டம் மேற்கொண்டுவரும் கொட்டகைக்கு சட்டவிரோதமாக மின்சாரத்தினை பெற்றனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குறித்த சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார், “நாம் கடந்த 2210...

எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வடைந்து வருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார். அண்மைய நாட்களில் ரூபாயின் பெறுமதி வலுவடைந்து வருவதால், புதிய எரிபொருள் இருப்புக்கள்...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, நாமல் ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ‘புதிய நியமனம் கிடைத்தமை பெருமையாக உள்ளது’ என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

எதிர்வரும் 15ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. சம்பள முரண்பாடு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடுகளுக்கான கொடுப்பனவுப் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பல ஆசிரியர் சங்கங்கள் நேற்று (புதன்கிழமை) கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவை சந்தித்ததன் பின்னணியில்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) ஒரு மணிநேர வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுவதுடன் அடையாளமாக நண்பகல் 12மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய பல்கலைக்கழக ஊழியர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக கல்வி சாரா பணியாளர்களின் பிரச்சனைக்கு உடனடி தீர்வு...

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை நேற்றையதினம் (புதன்கிழமை) முதல் குறைக்கப்பட்டதாக செரண்டிப் மற்றும் பிறிமா நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 15 ரூபாயால் குறிக்கப்பட்டுள்ளதாக இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டதினால் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளிகள், பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர் நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் மருந்து தட்டுப்பாட்டை நீக்கு, வாிக்கொள்கையை மீளப் பெறு, மேலதிக கொடுப்பனவுக்கான வரையறைகளை நீக்கு என்பன உள்ளிட்ட 8 கோாிக்கைகளை முன்வைத்து பாரிய வேலை நிறுத்த போராட்டம்...

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் QR முறை புதுப்பிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். முன்னதாக QR ஒதுக்கீடு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த மாற்றம் வந்துள்ளது. இதற்கிடையில், QR முறை மூலம் வாரத்திற்கு பெறப்படும் எரிபொருளின் அளவுகளில் எந்த மாற்றமும் இருக்காது...

முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர் வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர். மகளிர் தினமான நேற்று தமக்கான உரிமைகள் வழங்கப்படவேண்டும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் வெளிக்கொணரப்படும் இந்த பிரச்சினைக்கு சர்வதேச நீதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது....

அரபு நாடொன்றுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றிருந்த பெண் ஒருவர் காணாமல்போயுள்ளதாக பெண்ணின் கணவனும், பிள்ளைகளும் நேற்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் முறைப்பாடு வழங்கியிருக்கின்றனர். 39 வயதுடைய கோமதி பஞ்சலிங்கம் என்பவரே அரபு நாட்டிற்கு பணிக்காக சென்றிருந்த நிலையில், காணாமல் போயுள்ளார். இவர் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை பிரிவில் இயக்கச்சி, கிநொச்சி என்னும் முகவரியைக் கொண்டவர் எனவும்...

ஆட்டிறைச்சி எலும்பு மார்பு இரத்த குழாயில் சிக்கி குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த லோகந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா (வயது- 46) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். கடந்த 25ஆம் திகதி அவர் ஆட்டிறைச்சி சாப்பிட்டுள்ளார். ஆட்டிறைச்சி எலும்பு தொண்டைக்குள் சிக்கியுள்ளது. அதனால் அவர் வாழைப்பழம்...

அதிஷ்டம், பரிசுப்பொருள் உங்களுக்கு கிடைத்துள்ளது என தொலைபேசிமூலம் அழைத்து மக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில பணமோசடி செய்து ஏமாற்றிய பண்டாரகம அட்டுளுகம, பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரை யாழ் விசேட குற்றவிசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரால் நேற்று கைதுசெய்யப்பட்டார். யாழ்மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு அதிஷ்டகார் ஒன்று கிடைத்துள்ளதாக Ez Case மூலம் 24...

உள்ளூராட்சித் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, இது தொடர்பான அறிவிப்பை வெளியிட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் அதற்கான நிதி மற்றும் வாக்குச்சீட்டு அச்சிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று செவ்வாய்க்கிழமை கூடியது....

இலங்கை முழுவதும் உள்ள 33 தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன. அதற்கமைய நாளை (8) வடக்கு கிழக்கில் உள்ள ஸ்ரீ லங்கா சுகாதார சேவைச் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து சுகயீன விடுமுறைப் போராட்டம் மேற்கொள்ளவிருக்கின்றனர். அதேவேளை நாளை நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கவனயீர்ப்பு போராட்டம்...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது. அதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 318.30 ரூபாவாகவும் விற்பனை விலை 335.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பமாவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால், ஏனைய பரீட்சை அட்டவணை திட்டமிடல்கள் தாமதமாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். நாளாந்த ஊதியம் 2,000 ரூபாய் என வரம்புக்குட்படுத்தப்பட்டதன் காரணமாக ஆசிரியர்கள் மதிப்பீட்டு பணிக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் அவர்...

யாழ்.மாவட்டத்தில் பிறப்பு வீதம் குறைந்து செல்கின்ற நிலையில் இன்னும் சில வருடங்களில் சுமார் 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக சிவ பூமி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் எச்சரிக்கை விடுத்தார். கடந்த சனிக்கிழமை யாழ் உரும்பராயில் இடம் பெற்ற ஞான வைரவர் அறக்கட்டளை நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கற்றல் பொருட்கள் வழங்கும்...

நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என்ற அறிவித்தல் தொல்பொருள் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. உடைந்து விழும் நிலையில் உள்ள அந்தக் கட்டடத்திற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நாடப்பட்டுள்ளமை காரணமாக அதற்குள் யாரையும் நுழையவேண்டாம் என தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் அடுத்த வாரமளவில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வேகமாக அதிகரித்தால் பணவீக்கம் வேகமாக வீழ்ச்சியடையும் எனவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள் விலைகள் குறைவடைந்தால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடையும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் மேலும்...

இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு அரசியல் விவகாரங்களில் பௌத்த தேரர்களால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளே காரணம் என்பதே எனது நிலைப்பாடாகும். வட, கிழக்கு வாழ் தமிழ்மக்களின் பிரச்சினைகள் என்னவென்பதைக் கண்டறிவதற்கு ஆங்கிலம் அல்லது தமிழ்மொழி பேசக்கூடிய பௌத்த தேரர்கள் தமிழ் தலைவர்களுடன் கலந்துரையாடுவது இன்றியமையாததாகும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு...

All posts loaded
No more posts