Ad Widget

எரிபொருள் விலை குறைக்கப்படும் என அறிவித்தது அரசாங்கம்!

எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வடைந்து வருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

அண்மைய நாட்களில் ரூபாயின் பெறுமதி வலுவடைந்து வருவதால், புதிய எரிபொருள் இருப்புக்கள் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்படும் சரக்குகள் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்த குறைப்பின் நன்மையினை நுகர்வோர் விரைவில் பெற்றுக்கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலை குறைப்பு ஏனைய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts