- Tuesday
- August 26th, 2025

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போனதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போன சிறுமிகள் 14, 15 மற்றும் 16 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த சிறுமிகள் முல்லைத்தீவு மற்றும் உரும்பிராய் பிரதேசங்களில் வசிப்பதாகவும், இந்த சிறுவர் இல்லத்திற்கு பாதுகாப்பிற்காக...

சமுர்த்தி உத்தியோகத்தர் என கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஊர்காவற்துறை பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடமாடுவதாகவும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது சமுர்த்தி கொடுப்பனவு பெறும் முதியோருக்கு அரசினால் வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை பெறும் முதியவர்களை இலக்கு வைத்து ஒரு குழு பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றது. புதிதாக வந்த சமுர்த்தி...

யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கும் தமிழ் நாட்டிற்குமான சேவைகள் சிறப்பாக இடம்பெற்று வருகிறதாக யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்துள்ளார். இது குறித்து யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்ட பின் இந்தியாவிலிருந்து பல்வேறு துறைசார்ந்த கலைஞர்களை யாழ்ப்பாணம் வரவழைத்து நிகழ்வுகளை நடத்தி வருகிறோம்....

ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியை அடுத்து தொழிற்சங்க நடவடிக்கையை நாளை வியாழக்கிழமை காலை முதல் கைவிட தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. அனைத்து கோரிக்கைகளையும் கவனத்தில் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணிக்கு பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் இன்று...

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்குப் பகுதியில் இன்றைய தினம் (புதன்கிழமை) அதிகாலை வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் வீட்டின் ஒரு பகுதி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு என்பன எரிந்துள்ளன. அதிகாலை 12.30 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. நாகர் கோவில் பகுதியில் மயானம்...

யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட சங்கம் தடைசெய்யப்படும் அபாயம் உருவாகியுள்ளது. அப்படியான நிலைமை உருவாகினால், அடுத்த சில வருடங்களிற்கு யாழ் உதைபந்தாட்ட லீக்கிற்கு உட்பட்ட 33 கழகங்களும், எண்ணற்ற விளையாட்டு வீரர்களும் இருண்ட உதைபந்தாட்ட வாழ்க்கையை எதிர்கொள்ள நேரிடும். கடந்த 12ஆம் திகதி யாழ்ப்பாண உதைபந்தாட்ட லீக்கின் தேர்தலில் ஏற்பட்ட குழப்பங்களையடுத்தே, இந்த விபரீதமான நிலைமை உருவாகியுள்ளது. கடந்த...

இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் இன்றைய தினம் புதன்கிழமை (15) யாழ்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சம்பள அதிகரிப்பை வழங்க கோரியும் வரி அறவீட்டினை நிறுத்த கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் பதாகைகளை தாங்கியவாறு 20000 உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மூன்றில்...

பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சார கட்டண உயர்வு, வங்கி கடன், வட்டி அதிகரிப்பு, சம்பளத்திக்கான வரி விதிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக பொது மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள்,...

அத்தியாவசிய சேவைகளுக்கு என நியமிக்கப்பட்ட அரச ஊழியர்கள் நாட்டின் சட்டத்தை மீறி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சரத்வத்தேச நாணய நிதியத்தின் உதவியும் விரைவில் கிடைக்கவுள்ள நிலையில்...

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாக்கிழமை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 319.84 ஆகவும், விற்பனை பெறுமதி 335.68 சதமாகவும் பதிவாகியுள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து டொலர் மற்றும் ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்ந்து...

யாழ்.இந்துக் கல்லுாரியில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவன் பாடசாலை நேரத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, குறித்த பாடசாலையில் தரம் 10ல் கல்வி கற்கும் மாணவன் பாடசாலையின் மேல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். எனினும் தெய்வாதீனமாக அருகில் இருந்த மின் வயரில் சிக்குண்டதன்...

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் களவாடப்பட்ட 3 மூன்று மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வருடம் பத்தாம் மாதம் காரைநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற...

யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவின் போது, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் ஆதரவு கோரினாரென அந்த கட்சியின் யாழ்.மாவட்ட ஊடக பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று(திங்கட்கிழமை)இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கடந்த காலத்திலும் இலங்கை...

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், நாடு நெருக்கடியான தருணத்தில் இலங்கையில் வேலைநிறுத்தம் செய்வதால் இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் வேலைநிறுத்தம் மற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் அனைத்து...

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்ட திகதிகளில் இடம்பெறுவது மீண்டும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் இடம்பெறவேண்டும் என்றால் தபால் வாக்குச் சீட்டுகளை மார்ச் 21 ஆம் திகதிக்குள் தமக்கு கிடைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. எவ்வாறாயினும் இன்றைய தினத்திற்குள் உரிய நிதி ஒதுக்கீடுகள் கிடைத்தால் குறிப்பிட்ட திகதிக்குள் அவற்றை அச்சிட முடியாது...

மொறட்டுவ பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவன் பகிடிவதையினால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். வறுமையான குடும்பப் பின்னணியி லிருந்து மொறட்டுவ பல்கலைக்கழகத் துக்குத் தெரிவான 23 வயதான மாணவனே பகிடிவதைக் கொடுமையால் இவ்வாறான ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளான். சிரேஷ்ட மாணவர்கள் தினமும் இரவு 6...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற திருத்த வேலை காரணமாக பெற்றோல் வழங்க மறுத்ததால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வந்த இருவர் மிரட்டல் விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்தச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது. நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றது போன்றதொரு சம்பவம் தங்களுக்கும்...

இலங்கையில் தற்போது நடைபெறுகின்ற பிற்போக்குத் தனமான ஜனநாயக விரேத செயற்பாடுகளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அதற்காக எதிர்வரும் 15ஆம் திகதி ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளதாகவும் இதன்போது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதையும் இலங்கையை சர்வதேச நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்...

எதிர்வரும் 15ஆம் திகதி அதாவது நாளை மறு தினம் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தினத்தில் ஆசிரியர் - அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர் - அதிபர் சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள...

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவுக் கூட்டம், கோரமின்மை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தெரிவுக்கான புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்ட வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் எஞ்சியுள்ள பதவிக் காலத்துக்குப் புதிய இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக...

All posts loaded
No more posts