Ad Widget

ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியை அடுத்து நாளை கைவிடப்படுகின்றது தொழிற்சங்க நடவடிக்கை !

ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியை அடுத்து தொழிற்சங்க நடவடிக்கையை நாளை வியாழக்கிழமை காலை முதல் கைவிட தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

அனைத்து கோரிக்கைகளையும் கவனத்தில் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 8 மணிக்கு பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் இன்று தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்கிழமை (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடு தழுவிய ரீதியில் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட பல தொழற்சங்கங்கள் தீர்மானித்திருந்தன.

அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள புதிய வரிக் கொள்கையை திருத்தியமைக்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

Related Posts