- Thursday
- May 14th, 2026
புதிய அரசமைப்பை அறிமுகப்படுத்தி, அதனூடாக நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமை ஆகியவற்றை மேமம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐ.நா. சபையின் 70ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றுமுன்தினம் அங்குள்ள விகாரையயான்றுக்குச் சென்றார். இங்கு கூடியிருந்த இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு...
பட்டதாரிகள் பலர் உண்ண உணவில்லையானாலும் அரசாங்க உத்தியோகமே வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருப்பதாகவும், அரசாங்க சம்பளத்திலும் பல மடங்கு கூடிய வருமானத்தைத் தரும் தனியார் நிறுவனங்களில் தரப்படும் வேலைகளை எமது இளைஞர்கள் யுவதிகள் உதாசீனம் செய்வதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட வடமாகாண...
அரியாலை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களையும், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 19ம் திகதி யாழ். நகரப் பகுதியில் வைத்து, ஆசிரியரான சண்முகவேல் மாதவமணிவண்ணன் மற்றும் அவரது மனைவியும் சிலரால் தாக்கப்பட்டனர். இதனால் படுகாயமடைந்த ஆசிரியர் யாழ்....
யாழ்.போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சைப் பிரிவினர் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தடன் இணைந்து யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் இலவச நீரிழிவுப் பரிசோதனை முகாம்களை நடாத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு அந்தந்தப் பிரிவில் உள்ள சனசமூக நிலையங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். ஒவ் வொரு பிரிவிலும் கண்டறியபடாமல் இருக்கும் நீரிழிவு நோய்,உயர் குருதி அமுக்கம், அதிகரித்த உடற்பருமன்,...
நீண்ட காலமாக வெற்றிடமாக இருந்த யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவிக்கு வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இறுதி யுத்தத்தின் போது வன்னிப்பகுதியிலிருந்து காயப்பட்ட பொதுமக்களின் மருத்துவ உதவிகளை இவர் மேற்கொண்டிருந்தார். இதேவேளை, யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளராக க.நந்தகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் கற்று, இறுதிப் பரீட்சைக்குத் தோற்றத் தவறியோர் மற்றும் இறுதிப் பரீட்சையில் சித்தியடையத் தவறியவர்கள், அடிப்படை சித்தி அடைந்தவர்கள் ஆகியோரின் விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. எனவே, மேற்குறித்த நிலையிலுள்ளவர்கள் அலுவலக நேரத்தில் வந்து பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஆசிரிய கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம் அறிவித்துள்ளார். இறுதிப் பரீட்சைக்குத் தோற்றத் தவறியவர்கள் மற்றும் இறுதிப் பரீட்சையில்...
நெடுந்தீவு 9ஆம் வட்டாரப் பகுதியில் சனிக்கிழமை (26) இரவு அத்துமீறி நுழைந்த கடற்படைச் சிப்பாயை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், ஞாயிற்றுக்கிழமை (27) உத்தரவிட்டார். வீடொன்றுக்குள் அத்துமீறி கடற்படைச் சிப்பாய் நுழைந்த போது, அங்கிருந்தவர்கள் அபாயக் குரல் எழுப்பியதும் தப்பிச் சென்றுள்ளார்....
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 30வது அமர்வில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுத் தீர்மானம் முழுமையாக தமிழில் இதோ!
நாவற்குழியில் உள்ள அரச காணியில் தற்காலிக குடிசைகள் அமைத்து வசித்து வந்த 12 குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதற்கு சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார். நாவற்குழி ஐயனார் கோவிலடி பகுதியில் அரச காணியினுள் தற்காலிக குடிசைகள் அமைத்து 12 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களை உடனடியாக அந்த...
பல்வேறு காரணங்களைக் கூறி வன்னி மற்றும் தீவகப் பகுதிகளில் கடமையாற்றாது உரிய வயதெல்லையைக் கடந்த ஆசியர்கள் வலிகாமம் பகுதியில் உள்ள கஷ்ட,அதி கஷ்ட பிரதேச பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப் படவுள்ளதாக வலிகாம வலயக் கல்விப் பணிப்பாளர் செ.சந்திரராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில். வன்னி மற்றும் தீவகக் பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் பல்வேறு...
திருகோணமலை, சம்பூர் பிரதேசத்திலிருந்து கடற்படை வெளியேறுவதாக கூறியபோதிலும், மக்களின் விவசாய நிலங்களில் கடற்படை முகாம்களை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த மாதம் சம்பூருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடற்படையினரின் வசமிருந்த 40 ஏக்கர் நிலப்பரப்பை மக்களிடம் கையளித்தார். எனினும் குறித்த பகுதியிலிருந்து கடற்படையினர் வெளியேறுவதற்கான முயற்சிகளை...
ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வைப்பெற்று அந்த அரசியல் தீர்வு பாராளுமன்றத்தில் பெருபான்மைப்பலத்துடன் நிறைவேற்றப்பட்டு நாட்டு மக்களின் ஆணையைப்பெறவேண்டும் அது தான் எமது இறுதி இலக்கு. இவ்வாறு எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று தெரிவித்தார். தொடர்ந்து இவர் கருத்து தெரிவிக்கையில் - நாட்டில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பில் உண்மை அறியப்பட...
மக்கா புனித தலத்துக்கு யாத்திரை சென்ற இரு இலங்கை யாத்திரிகர்களைக் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு வெள்ளவத்தையைச் சேர்ந்த அபூபக்கர் அசீஸ் (வயது 58), ரோஷன் அப்துல் அசீஸ் (வயது 55) தம்பதியினரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இவர்கள் இருவரையும் தேடும் பணியை விரைவாக செயற்படுத்தபடுவதாக மக்கா யாத்திரையில் ஈடுபட்டிருந்த அப்துல் காதர் தெரிவித்துள்ளார்....
ஜெனிவா மனித உரிமைகள் கவுன்ஸிலின் பிரேரணையில் அடங்கிய யோசனைகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அரசாங்கம் எப்போதும் மீள் நல்லிணக்கம் தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் உறுதியளித்துள்ளார். மேலும் ஐ.நா. பிரகடனங்களுக்கு மதிப்பளிக்கும் அரசாங்கம் தொடர்ந்தும் அனைத்து நடவடிக்கைகளையும்...
மூன்று விசேட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளகப் பொறிமுறையுடனான விசாரணை நடத்தப்படும். எனவே சர்வதேச விசாரணை என்று சிலர் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். இதில் எவ்வித உண்மைகளும் இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பரணகம ஆணைக்குழுவை அமைத்து சர்வதேச சட்டத்தரணிகளின் உதவியைப் பெற்றவர் மஹிந்த ராஜபக்ஷவே ஆவார் என்றும் பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். ஊடகத்துறை சார்ந்த...
நாட்டின் அனைத்து பாகங்களிலும் இன்று (28) மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகிறது. இம் மழைவீழ்ச்சியினளவு 100 மில்லி மீற்றரை தாண்டலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. அத்துடன் ஊவா கிழக்கு மாகாணங்களில் மாலை...
நேற்று நள்ளிரவு நாடுபூராகவும் மின்சாரம் தடைப்பட்டது. எதுஎவ்வாறு இருப்பினும் நிலைமை அதிகாலை 03.30 - 04.00 மணிவரையான காலப்பகுதிக்குள் முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளதாக, இலங்கை மின்சாரசபை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். தொழிநுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. இது குறித்து விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இனிமேல் இவ்வாறு நடக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதனால்...
யாழ்.இந்துக்கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இன்று (27) பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவரது முழுமையான உரை வருமாறு அதிபர் அவர்களே, ஆசிரியர்களே, மாணவர்களே, பல நாடுகளிலும் இருந்து இங்கே வந்திருக்கக்கூடிய பழைய மாணவர்களே, பழைய மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகளே, கல்விமான்களே, ஆன்றோர்களே, சான்றோர்களே,...
வீடுகளில் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் குறித்து பரிசோதனை மேற்கொள்ளும் சுகாதார பரிசோதகர்களுடன் இரா ணுவத்தினர் செல்வது தொடர்பில் பொது மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். எனினும் சுகாதார பரிசோ தகர்களுடன் இராணுவத்தினர் செல்வதற்கு தாம் அனுமதிய ளிக்கவில்லை என யாழ். மாநகர சபையின் ஆணையாளர் வாகீசன் தெரிவித்தார். அண்மைய நாட்களாக யாழ். மாநகர சபைக்குட்பட்ட...
யாழ். பஸ் நிலைய பகுதியில் மது போதையில் நின்ற ரவுடிகளின் தாக்குதலுக்குள்ளாகி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தம்பதியரில் கணவன் நேற்று முன்தினம் 12.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 19 ஆம் திகதி சனிக்கிழமை இரவு10.30 மணியளவில் யாழ். பஸ் நிலையத்துக்குப் பின்பாக உள்ள உணவகம் ஒன்றில் தேநீர் அருந்தியுள்ளனர்....
Loading posts...
All posts loaded
No more posts
