- Tuesday
- June 16th, 2026
பாடசாலை மாணவர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்துள்ள இலவச சீருடைக்குப் பதிலாகத் தற்போதய அரசு வவுச்சர் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய முறைமையைப் பயன்படுத்தி வடக்கில் பல பாடசாலைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுவருவதாக தெரிய வருகிறது எனவே இவ்வாறான முறைகேடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின்...
பிஸ்கட் புரையேறியதால் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு யாழ்ப்பாணம் ,3ஆம் குறுக்குத் தெருப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஐந்து மாதங்களேயான உதயபாலன் காசினி என்ற பெண் குழந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. வழமைபோல் தாய் குழந்தைகளுக்கு வழங்கும் சத்து நிறைந்த பிஸ்கட் கொடுத்துவிட்டுத் தூங்க வைத்துள்ளார். காலை...
காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கான காணாமற்போனோரின் உறவுகள் சாட்சியமளிக்கும் அமர்வு பிரதேச செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் சாட்சியமளித்த சிலரின் சாட்சிகள்.... 'இரத்மலானை இந்து கல்லூரியில் சேர்க்கப்பட்ட மகனைக் காணவில்லை' வவுனியா நீதிமன்ற உத்தரவுக்கமைய சிறுவர் நன்னடத்தை அதிகாரியால் இரத்மலானை இந்துக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட எனது மகன் அதன்...
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு வருகின்ற காதல் ஜோடிகள், ஆலய வளாகத்தில் உலாவித் திரிவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆலய நிர்வாக சபையால், இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் கூறப்பட்டுள்ளதாவது, ஆலயத்துக்கு வரும், காதல் ஜோடிகள் தரிசனம் செய்த பின்னர், திரும்பிச் செல்ல வேண்டும். அதனை விடுத்து ஆலய வளாகங்களில் அமர்ந்து பொழுதைப் போக்கக்கூடாது. புனிதமான இந்தப்...
சேட் கிழிக்கப்பட்டு இரத்தக் காயங்களுடன் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் 19 வயதான எனது மகனை இராணுவத்தினர் பிடித்துவைத்திருந்தனர். விட்டுவிடுங்கள் என்று கேட்கப்போன கோயில் பூசாரியாரையும் பூட்ஸ் காலால் தாக்கி ஓட ஓட விரட்டியடித்தனர் இராணுவத்தினர்.'' - இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழு முன் கதறியழுதவாறு சாட்சியம் அளித்தனர் தாயும் தந்தையும். பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்று...
"மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதன் வடக்கு, கிழக்கு விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புறந்தள்ளி தன்னிச்சையாக தனிவழியில் செயற்படுகின்றார்'' என்று இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பியுமான மாவை சேனாதிராஜா நேற்றுச் சபையில் குற்றஞ்சாட்டினார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட...
அரசியல் கைதிகள் விடுதலை, சட்டமா அதிபர் திணைக்களத்தினாலேயே தாமதப்படுத்தப்படுவதாக தெரியவருகின்றது என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சபையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்ற காணி அபிவிருத்தி அமைச்சு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு...
பெண்களுக்கெதிரான வன்முறைக்கு வாரத்தினை முன்னிட்டு பெண்களின் சுய பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப்பட்டறை இன்று யாழ் பழைய பூங்கா வீதியிலுள்ள முகாமைத்துவ திறன் விருத்தி பயிற்சி நிலையத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடைபெறவுள்ளது. யாழ் மாவட்ட செயலக மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டிலும் UNHCR மற்றும் மனித...
யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் முழுமையாக 39,300 புதிய வீடுகளும், 32,017 மலசல கூடங்களும், 13,711 குடிநீர் பெறும் கிணறுகளும் அமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற 2016ம் ஆண்டுக்கான நகரத்திட்டமிடல் தொடர்பான கலந்துரையாடலின் போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் மீள்குடியேறிய...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய உறுதி மொழிகளை சரிவர நிறைவேற்ற தவறினால் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அரச தனியார் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய எழுத்து மூல உறுதி மொழியையடுத்து இன்று மேற்கொள்ளப்படவிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். இதன் காரணமாக...
நாளை மேற்கொள்ளப்படவிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடவுள்ளதாக, தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத் தலைவர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட யோசனை தொடர்பில் எதிர்ப்பை வௌியிடும் வகையில் நாளை நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளிக்காமையால், அதன் பின்னர் இடம்பெற்ற...
போருக்குப் பின்னரான கடந்த 5 ஆண்டுகளில் வடக்கு மாகாணத்தில் புதிதாக 18 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 29 விகாரைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், 2014 ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 47ஆக அதிகரித்துக் காணப்படுகின்றது என வடக்கு மாகாண புள்ளிவிபரக் கையேட்டின் விபரங்கள் தெரிவிக்கின்றன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2009 ஆம் ஆண்டு...
அரசாங்க ஊழியர்களுக்கு 10,000ரூபா கொடுப்பனவை, அடுத்த வருடம் முதல் மூன்று கட்டங்களாக அவர்களது அடிப்படை சம்பளத்தில் இணைக்கவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இதன்படி அடுத்த ஜனவரி மாதமளவில் 2000 ரூபாவை அடிப்படைச் சம்பளத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் ஆற்றும் விஷேட உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் புதிதாக...
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நாளை நடத்தாதிருக்குமாறு பரீட்சைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. நாளைய தினம் இடம்பெறவுள்ள வேலை நிறுத்தத்தை முன்னிட்டு இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பரீட்சைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள முறைக்கு அமைய அதனைப் பிற்போட...
யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இயந்திரவியல் சிறப்பு இறுதியாண்டு மாணவனான மகேஸ்வரன் றஜிதனால் வயலில் நீர்பாய்ச்சுவதற்கான வாய்க்கால் போடும் எளிய இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். முழுக்க உள்ளூர் பொருட்களை கொண்டு அமைக்கப்பட்ட இவ்வியத்திரத்தின் மூலம் வேண்டிய படி வாய்க்கால் அமைக்க உதவும். கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த மாணவன் சிறு வயது முதல் கல்வியிலும் ஏனைய இணைபாட விதான...
கொழும்பையும் வடக்கையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் அடுத்தாண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் எம்.பி.கே.எல்.குணரத்ன தெரிவித்துள்ளார். திருகோணமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு, பொலன்னறுவ, திருகோணமலை ஊடான வடக்கிற்கான நெடுஞ்சாலைத் திட்டம் உள்ளிட்ட மூன்று பாரிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த திட்டங்களுக்கு...
பால் மாவின் விலை உயர்வடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வரிச் சலுகை வழங்கப்படாவிட்டால் பால் மாவின் விலைகளை உயர்த்த நேரிடும் என பால் மா இறக்குமதியாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வரிச் சலுகை உரிய முறையில் வழங்கப்படாவிட்டால் 400 கிராம் எடையுடைய பால் மாவின் விலையை 75 ரூபாவினால் உயர்த்த நேரிடும் என சங்கம்...
யுத்தத்தின் இறுதி நாட்களில் அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோஸப் உட்பட பொதுமக்கள் பலர் முன்னிலையில் வட்டுவாகலில் வைத்து அறுபதுக்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் கைக்குழந்தைகளை தாங்கிய பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். எனது கணவர் சுந்தரம் பரமநாதனும் இவ்வாறு சரணடைந்தவர்களில் ஒருவராவார். தற்போதுவரை அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாதுள்ளது. இராணுவத்திடம் நேரடியாகஒப்படைக்கப்பட்ட...
கல்விப் பொதுத் தாராதர சாதாரண தரப் பரீட்சையில் நாளைய தினத்திற்குரிய பரீட்சையை வேறு ஒரு தினத்தில் நடத்துமாறு ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் பரீட்சைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்புக் காரணமாக பல துறைகளின் பணிகள் முடங்கக்கூடும் என ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதன்...
காணாமல் போன எனது கணவர் தற்போது உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கில்லை. எனது கணவரின் மரணச்சான்றிதழையும் பெற்றுவிட்டேன். எனவே, எனக்கு நட்டஈடு தாருங்கள் என்று, காணாமல் போன முஹமட் அஜ்மீன் என்பவரது மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார். காணாமல் போனார் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆறு நாட்கள் அமர்வு, கடந்த வெள்ளிக்கிழமை (11)...
Loading posts...
All posts loaded
No more posts
