வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் முன்னணியின் உறுப்பினர் கைது

முல்லைத்தீவு-வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த போது அங்கு வைத்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி பகுதியினை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆலய பொங்கல் நிகழ்வு நடைபெற்று வந்த நிலையில் மக்கள் கூட்டத்திற்கு முன்னால் வலுகட்டாயமாக வாகனத்தில் ஏற்றிசெல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட நபர் மருதங்கேணி...

முல்லைத்தீவில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேர் கைது

முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மதவாளசிங்கன் குளம் காட்டுப்பகுதியில் உள்ள நாகஞ்சோலைப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளார்கள். நாகஞ்சசோலைப்பகுதியில் புதையல் தோண்ட முற்படுவதாக முல்லைத்தீவு சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (05.06.2023) அதிகாலை அங்கு சென்ற அதிரடிப்படையினர் புதையல் தோண்ட முற்பட்ட 8...
Ad Widget

ரஷ்ய படைக்குள் கடும் மோதல்!

ரஷ்ய இராணுவத்தின் லெப்டினன்ட் கர்னலை ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் படை சிறைப்பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. பக்முத்-தில் இருந்து வாக்னர் படைகுழு வெளியேறும் வழியை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் இராணுவ அதிகாரிகள் வெடி வைத்து தகர்த்ததாக வாக்னர் படை குழுவின் தலைவர் பிரிகோஜின்(Prigozhin) குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் பக்முத் இருந்து வெளியேறும் போது வாக்னர் PMC படை மீது வெடிகுண்டு...

யாழ். பல்கலைக்கழகத்தில் தியாகி பொன். சிவகுமாரனது 49 ஆவது நினைவேந்தல்!!

தியாகி பொன்.சிவகுமாரனது 49 ஆவது நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை (05) மதியம் 12 மணியளவில் மாணவர்களால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பொன் சிவகுமாரனது உருவப்படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது. பொன்.சிவகுமாரன் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி...

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் டிப்பருடன் மோதி கோர விபத்து! 7 பேர் படுகாயம்!!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் ஹயஸ் வாகனம் முன்னால் பயணித்த டிப்பர் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து நேற்று (4) நள்ளிரவு 12 மணியளவில் கனகராயன் குளத்திற்கும் மாங்குளத்திற்கும் இடையில் 212வது கல்லு பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் முன்னால்...

யாழ். பல்கலையில் மோதலில் ஈடுபட்ட 31 மாணவர்களுக்கு தடை !

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைக்கலப்பு சம்பவத்தை அடுத்து, 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாம் வருட மாணவர்கள் 16 பேருக்கும், மூன்றாம் வருட மாணவர்கள் 15 பேருக்கும் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் விடுதி உட்பட பல்கலைக்கழகத்தின் எந்தவொரு பகுதியினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முகாமைத்துவ கற்கைகள் மற்றும்...

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் அருள்மதி கைது!!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் அருள்மதி கைதுசெய்யப்பட்டுள்ளார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. ஜுன் இரண்டாம் திகதி மருதங்ககேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பு தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்ததாக அருள்மதியின் கணவர் தெரிவித்துள்ளார். மருதங்கேணி பொலீசாரினால்‌ அருள்மதிகைது செய்யப்பட்டுள்ளார்.. தையிட்டியில் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரைக்கு எதிரான...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்குதல் சம்பவம்! களமிறங்கும் பொது பாதுகாப்பு அமைச்சு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அச்சுறுதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்று கோரப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான அறிக்கையை விரைவில் வழங்குமாறு யாழ்ப்பாண பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு, பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி...

யாழ். வடமராட்சியில் இளைஞன் மீது கொடூரத் தாக்குதல்!!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு - முள்ளியானை சேர்ந்த சுந்தரலிங்கம் நிதர்சன் (21) என்ற இளைஞன் மீது கொடூரத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தங்களை CID எனக் கூறிய 10 பேர் கொண்ட குழு மருதங்கேணி சந்தியில் வைத்து இவர்களை வழி மறித்துள்ளார்கள். அருகில் நின்ற மோட்டார் சைக்கிளை காட்டி இது யாருடையதென கேட்டதாகவும், நாங்கள் முள்ளியானை சேர்ந்தவர்கள்...

யாழ் நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல்!!

யாழ்ப்பாணம் பொதுசன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று (1) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் காலை 9.30 மணியளவில் பொதுசன நூலகத்தில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது. நினைவேந்தலின்போது யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை உருவாக்குவதற்கு காரண கர்த்தாவாக விளங்கிய செல்லப்பாவுக்கும், யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது...

யாழ்ப்பாண விமான நிலையத்ல் இனி ஏழு நாட்களும் விமான சேவை!!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான, விமான சேவைகளை ஏழு நாட்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற துறைமுகங்கள், கற்பற்றுறை மற்றும் விமான சேவை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்...

யாழ். போதனா மருத்துவமனை மருத்துவக் கழிவுகளை அகற்ற புதிய நடைமுறை

யாழ். போதனா மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டியை யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் மயானத்தில் நிறுவுவதற்கு ஒருங்கிணைப்பு குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ். போதனா மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டி நிறுவுவதற்கு யு.என்.டி.பி. நிறுவனம் நிதி உதவி வழங்கியிருந்தது. எரியூட்டி அமைப்பதற்கான இடத்தை தெரிவு செய்வதில் நீண்ட இழுபறி நிலவியது. ஒவ்வொரு இடத்திலும் பொதுமக்கள்...

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் சர்ச்சையான தையிட்டி சட்டவிரோத விகாரை!

வலி வடக்கு, தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவ நடவடிக்கை மூலம் பலவந்தமாக கைப்பற்றி பௌத்த விகாரை அமைக்கப்பட்டதற்கு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டது. ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை புறந்தள்ளி விகாரை கட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை உடனடியாக அமுல்ப்படுத்த வேண்டுமென மக்கள் பிரதிநிதிகள்...

எரிபொருள் விலையில் மாற்றம்! வெளியானது புதிய விலை விபரம்!!

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 318 ரூபாவாகும். அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 385 ரூபாவாகும். மேலும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்...

யாழில் பரீட்சை எழுதி விட்டு திரும்பிய மாணவிகளிடம் சேட்டை!! மாணவன் மீதும் தாக்குதல்!!

சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் சேட்டை விட்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை காப்பாற்ற முற்பட்ட மாணவரை இளைஞர்கள் குழுவொன்று தலைக்கவசத்தால் தாக்கியுள்ளது. நெல்லியடி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாடசாலை பரீட்சை மண்டபத்தில் பரீட்சை எழுதி விட்டு , வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் , பாடசாலைக்கு...

மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்

தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் பங்குபற்றுவது தண்டணைக்குரிய குற்றமாகும் என மத்திய வங்கி பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. அதன்படி, பிரமிட் திட்டங்களை நடத்திய 8 நிறுவனங்களை இலங்கை மத்திய வங்கி பெயரிட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை மத்திய வங்கி சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் மத்திய...

யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்த போக்கு – சீ.வி.கே

யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்த போக்காக செயற்படுவதாக சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், குடிநீர் விநியோகம் தொடர்பாக கருத்துரைக்கும் போதும் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுவதற்கான வேலை திட்டங்கள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக குழாய்கள் புதைக்கப்பட்டு வருகின்றது...

சுற்றுலாத்துறையை மேம்படுத்த தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்தின் உதவியை நாடியுள்ள இலங்கை

இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்த தென்னிந்திய நடிகரான ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது. தென்னிந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் இந்த வாரம் அவரது இல்லத்தில் சந்தித்ததாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது, துணை உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்....

யாழ்ப்பாணத்தில் காணி மோசடி: புத்தூரைச் சேர்ந்த நொத்தாரிசு கைது

காணியை மோசடியாக விற்பனை செய்வதற்காகப் போலியான கையெழுத்திட்டு உறுதி தயாரித்த குற்றச்சாட்டில் யாழ். புத்தூரைச் சேர்ந்த நொத்தாரிசு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசாந்த தலைமையிலான விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு கொடிகாமம் இத்தாவில் பகுதியில் போலியான கையெழுத்திட்டு உறுதி...

யாழில் இன்று முதல் வீதி விபத்துகளை தடுக்க விசேட வேலைத்திட்டம்!! – மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர்

வீதி விபத்துகளை தடுக்க யாழ்.மாவட்டத்தில் இன்று(31.05.2023) முதல் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார். யாழில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,“யாழ்ப்பாண குடா நாட்டில் மே மாதம் மாத்திரம் 10ற்கும் மேற்பட்ட வீதி விபத்து சம்பவங்கள்...
Loading posts...

All posts loaded

No more posts