- Saturday
- August 23rd, 2025

வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வெப்ப குறியீடு, மனித உடல் உணரும் வெப்ப அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

யாழ்.நகரில் விடுதியில் தங்கியிருந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு நேற்றைய தினம் (29.05.2023) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விடுதியில் சோதனை நடாத்தி மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும்...

இலங்கை மத்திய வங்கி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை தளர்த்தியதுடன் சுமார் 843 வகையான பொருட்களுக்கு அந்த பொருட்களை இறக்குமதி செய்யும் போது பொருட்களின் மொத்த மதிப்புக்கு சமமான ‘பண வரம்பு தேவை’ கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது. இந்த 843 பொருட்களில் கையடக்கத் தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்குவதாகவும்...

எதிர்வரும் (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, பதிவு செய்யப்பட்ட டக்சி முச்சக்கரவண்டிகளுக்கான 22 லீற்றராகவும், மற்ற முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான ஒதுக்கீடு 14 லீற்றராகவும் அதிகரிக்கப்படவுள்ளது. மேலும் கார் மற்றும் வேன்களுக்கான ஒதுக்கீடு 40 லீற்றராகவும், பேருந்து...

யாழ். மகாஜன பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாக நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலையில் மூன்று மாணவர்களை திடீரென குறித்த ஆசிரியர் தாக்கிய நிலையில் இருவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் குறித்த ஆசிரியரை...

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (29.05.2023) ஆரம்பமாகியுள்ளது. குறித்த பரீட்சையில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றவுள்ளதுடன், 3 லட்சத்து 94 ஆயிரத்து 450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் டெங்கு காய்ச்சலில்...

பதின்ம வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்துக்கு இராணுவச் சிப்பாய்க்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். 2013ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி நெடுங்கேணியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட...

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்து இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை வீதியில் உள்ள யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள பழக்கடை நடத்துவோர் மீது நேற்று இரவு இனந்தெரியாத குழு ஒன்றினால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்தோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை...

தையிட்டியில் தனியார் காணியில் திஸ்ஸ விகாரை அமைத்ததற்கு எதிராக கடந்த (22.05.2023) ஆம் திகதியில் இருந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (23.05.2023) போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதிநிதி, ஊடகவியலாளர் மற்றும் பொதுமக்கள் உட்பட ஒன்பதுபேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று (25.05.2023) அதிகாலை குறித்த பகுதியில்...

நாடளாவிய ரீதியில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்றுடன் (26.05.2023) விடுமுறை வழங்கப்படவுள்ளது. 2022ஆம் கல்வி ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. மேலும் அடுத்த மாதம் 12ஆம் திகதி பாடசாலையின் கற்பித்தல் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட...

இலங்கையில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுட்டுள்ளது. பல்கலைக்கழக உபவேந்தர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகங்களில் போதைப் பொருள் பாவனை மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இன்மை என்பன அதிகரித்துள்ளதால் இந்த பாதுகாப்பு அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுக்கப்ப முயற்சி அப் பகுதி மக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும் இன்று வியாழக்கிழமை (25) தடுத்து நிறுத்தப்பட்டது. குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர் மற்றும், கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள், குறித்த மாவீரர்துயிலுமில்லக் காணியினை அளவீடு செய்ய...

ஜூலை 15 ஆம் திகதிக்குள் கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் புகையிரத சேவையை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வீதியின் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது வடக்கு புகையிரத சேவை கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான வீதியின் திருத்தப் பணிகளை அடுத்த மாதம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி...

இலங்கையில் நேற்று (புதன்கிழமை) 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நேற்று கொரோனாதொற்றால் ஒரு மரணம் பதிவாகியிருந்தது. இன்நிலையில் இலங்கையில் மொத்த கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 672,408 ஆக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

தமிழர்களுக்கென்று ஒரு தாயகம் இல்லாத நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரைக்கு எதிராக நள்ளிரவு வரை தொடர்ந்து போராட்டம் இடம்பெறுகின்றது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள்...

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்...

வீட்டுப் பாவனையாளர்களுக்கான மின்சாரக் கட்டணம் 23 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது நிலையில் இதன் பயனை 1,744,000 குடும்பங்கள் அடைவார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி, தற்போதுள்ள யூனிட் விலை 0-30 யூனிட் வகைக்கு 5 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் யூனிட் விலை 25 ரூபாவாக மாற்ற புதிய திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை 400...

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன், இந்தியா மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கான இயக்குநர் பென் மெலோர் ஆகியோர் விஜயம் செய்துள்ளனர். இதன்போது சமகால விவகாரங்கள், பிரித்தானியாவுக்கும், யாழ்.பல்கலைக் கழகத்துக்கும் இடையிலான கல்வி சார் உடன்படிக்கைகள் பற்றிக் கேட்டறிந்த பிரித்தானியத் தூதுவர்,...

எரிபொருள் கோட்டாவில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், கையிருப்பில் உள்ள எரிபொருள் மற்றும் கொள்வனவிற்கான இயலுமை உள்ளிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு எரிபொருள் கோட்டா முறையில் மாற்றம் ஏற்படுத்தாதிருக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். இதேவேளை சர்வதேச நிறுவனங்களின் முதலீடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், எரிபொருள்...

தையிட்டியில் தமிழர்களின் காணிகளை பலவந்தமாக பறித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்ற வலியுறுத்தி நேற்றையதினமும் (22) தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், பேச்சாளர் க.சுகாஸ் உள்ளிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் நேற்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். விகாரையை எதிர்வரும் 26ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளதாக...

All posts loaded
No more posts