- Saturday
- August 23rd, 2025

யாழ்.வசாவிளான் பகுதியில் வீதியால் சென்ற பாடசாலை மாணவியிடம் அங்க சேஷ்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயை அப்பகுதிமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். நேற்று திங்கட்கிழமை மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றநிலையில் சம்பவம் தொடர்பில் பலாலிப் பொலிஸார் மற்றும் இராணுவப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தனிமையில் சென்ற பாடசாலை மாணவியை பின்தொடர்ந்த குறித்த இராணுவ சிப்பாய் அங்கசேஷ்டையில்...

யாழ்.கல்வி வலயத்தில் பணியாற்றும் ஆசிரிய ஆலோசகர் ஒருவர் பாடசாலைக்குச் சென்று பெண் ஆசிரியையை பார்த்து கிறீம் பூசுவதில்லையா? பூசினால் அழகாக இருப்பீர்கள் என கூறிய சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஆசிரியை உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடு வழங்கியுள்ளார். நேற்றைய தினம் யாழ்.கல்வி வலயத்திலுள்ள பாடசாலை ஒன்றுக்கு கடமை நிமித்தம் சென்றிருந்த குறித்த ஆசிரிய ஆலோசகர் எந்த அறிவிப்பும்...

யாழ்.பல்கலைக்கழக களஞ்சியத்திலிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கட்டட உபகரணங்கள் காணாமல்போனமை தொடர்பில் முறையான விசாரணை இடம்பெறுகிறது என பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா தெரிவித்தார். யாழ்.பல்கலைக்கழக களஞ்சியத்தில் இருந்த பொருட்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் அவ்வாறான நடவடிக்கைகள் இடம் பெறுகிறது என அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்...

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்கு காத்திருப்புப் பட்டியலின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கு உடனடியாக அனுமதிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, திறமை ஒழுங்கில் வெற்றிடங்களை நிரப்பும் முகமாக தெரிவுசெய்யப்படும் மாணவர்களை பதிவுசெய்வதற்கு அனுமதிக்காமல், திருப்பி அனுப்பும் அதிகாரம் பீடாதிபதிகளுக்கு இல்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவரான சிரேஷ்ட...

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி, அதற்கு தீர்வு பெற்றுத்தர முயல்வேன் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார். இன்றைய தினம் (22) உத்தியோபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்த வடக்கு ஆளுநர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: இன்று என்னை வாழ்த்துவதற்கு வருகைதந்த மத குருமார் சில...

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆளுநர் செயலத்தில் உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்று கொண்டார். இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக வைத்தியர் சின்னையா சிவரூபனை மீண்டும் நியமிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் நேற்று(21) பிற்பகல் 2.30 மணியளவில் பளை வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது. இதன்போது குறித்த வைத்தியரை மீண்டும் கடமையில் அமர்த்துவதற்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வினை காண்பது குறித்து தீர்க்கமான முடிவொன்றை எடுத்துக்கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நில...

வடக்கு மாகாணத்தின் பதில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி இன்று நண்பகல் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார். வடமகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை, மருத்துவர் சத்தியமூர்த்தி யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக இக்கடமையை ஆற்றுவார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) ஆளுநர் திருமதி சாள்ஸ் அவர்கள் பதவியேற்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று இடம் பெற உள்ளதாக கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது இதற்கமைய வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் நூற்றுக்கு மேற்பட்ட பொலிசார் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக...

தென்பசுபிக் சமுத்திரத்தின் பிஜி மற்றும் நிவ் கெலிடோனியா ஆகிய நாடுகளை அண்மித்த கடற்பரப்பில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 7.7 மெக்னிடியுட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியுகெலிடோனியாவிலிருந்து 38 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய, வனவாட்டுவில் 3 மீற்றர் அளவிலான சுனாமி அலைகளும்,...

நாட்டில் தற்போது வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவிவரும் நிலையில், பெரசிடமோல் அல்லாத மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் விசேட வைத்தியர் உபுல் திசாநாயக்க பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் வைரஸ் காய்ச்சல், டெங்கு மற்றும் இன்புளுவென்சா என 3 காய்ச்சல் வகைகள் பரவி வருவதாகத் தெரிவித்துள்ள அவர் இதில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் எந்த வகை...

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 14ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. இதன்போது பொதுச்சுடரினை யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராமினால் ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்சியாக ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது. இதன்போதுது யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்,பேராசிரியர்கள், கலைப்பீட பீடாதிபதி எஸ் ரகுராம், பொதுமக்கள்...

வாகனப் பதிவுச் சான்றிதழிலிருந்து வாகனங்களின் முன்னாள் உரிமையாளர்கள் தொடர்பான பெயர் பட்டியலை நீக்குவதற்கு மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய நேற்று முன்தினம் 17 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்துக்கு அமைய அண்மைக்கால உரிமையாளர் மற்றும் தற்போதைய உரிமையாளரின் தகவல்கள் மட்டுமே சேர்க்கப்படும் என்றும்...

தலைமன்னார் பகுதியில் மூன்று மாணவிகளை கடத்த முற்பட்டதாக பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களுக்கான அடையாள அணிவகுப்பில் மூன்று சிறுமிகளும், இரு சந்தேகநபர்களையும் அடையாளம் காட்டியுள்ளனர். தலைமன்னார் பகுதியில் மூன்று சிறுமிகளை வெள்ளை வாகனம் ஒன்றில் கடத்த முற்பட்டதாக இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில்...

எதிர்வரும் ஜீன் மாதம் முதல், பொதுமக்கள் தங்களுக்கான கடவுச் சீட்டைப் பெற்றுக்கொள்ள, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு பிரவேசிக்க வேண்டிய அவசியம் இல்லை என அதன் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை, இணையத்தளம் ஊடாக அனுப்பிவைக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அமைவான கட்டணம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின், வங்கிக்...

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டின் பலப்பக்கங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் யாழ்.இந்துக் கல்லூரியில் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து பதாகை ஒன்று வாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. “தாலாட்டு கேட்டு வளர்ந்தவர்கள் அல்ல நாம், எம் தாயாரின் மரண ஓலங்களை கேட்டு வளர்ந்தவர்கள் நாம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்கால் நினைவுமுற்றத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ சற்றுமுன் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி இடம்பெற்று வருகின்றது.

கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல்போயுள்ளார். மயிலிட்டி - தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் காணாமல் போயுள்ளார். இளைஞன் காணாமல்போனமை தொடர்பாக 2022.10.13 அன்று பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்தும் இதுவரை...

வடமாகாணத்திற்கு தேவையான அனைத்தையும் வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தொிவித்திருக்கின்றார். வடமாகாண ஆளுநராக நேற்று (17) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டதன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். வடக்கு மக்களுக்கு தேவையானவற்றை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழுமையான ஒத்துழைப்புக்களை அர்ப்பணிப்புடன் வழங்குவததாக உறுதியளித்துள்ளார். தாரளமான மனதுடைய...

All posts loaded
No more posts