Ad Widget

தென் பசுபிக் சமுத்திரத்தில் நிலநடுக்கம்!! – சுனாமி எச்சரிக்கை!!

தென்பசுபிக் சமுத்திரத்தின் பிஜி மற்றும் நிவ் கெலிடோனியா ஆகிய நாடுகளை அண்மித்த கடற்பரப்பில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவு கோளில் 7.7 மெக்னிடியுட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியுகெலிடோனியாவிலிருந்து 38 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கமைய, வனவாட்டுவில் 3 மீற்றர் அளவிலான சுனாமி அலைகளும், பிஜி தீவுகளில் 0.3 முதல் 1 மீற்றர் அளவிலான சுனாமி அலைகளும் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts