- Tuesday
- May 6th, 2025

உரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அயல் வீட்டாருடன் பேசியதற்காக இளம் குடும்பஸ்தரின் வீட்டுக்குள் நுழைந்து பொலிஸார் அட்டகாசம் புரிந்திருப்பதுடன், குடும்ப தலைவரை பொலிஸ் நிலையத்திற்கு இழுத்து சென்றுள்ளனர். [caption id="attachment_101888" align="aligncenter" width="1254"] crime scene tape focus on word 'crime' in cenematic dark tone with copy space[/caption] இந்த சம்பவம்...

கிராம மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் பாரபட்சம் காட்டியதாக எழுந்த முரண்பாட்டையடுத்து 25 வயதுடைய இளம் குடும்பப் பெண் நஞ்சு அருந்தி உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார். [caption id="attachment_101888" align="aligncenter" width="1254"] crime scene tape focus on word 'crime' in cenematic dark tone with copy space[/caption]...

உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே 185 கிராம சமுர்த்தி உத்தியோகத்தர் தமது பிரிவைச் சேர்ந்த சமுர்த்திப் பயனாளிகளை ஒரே இடத்துக்கு அழைத்து உதவித் திட்டத்தை வழங்க முற்பட்டுள்ளார். எனினும் விரைந்து செயற்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், கூடியிருந்த மக்களை வீடுகளுக்குத் திருப்பினர். அத்துடன், உரிய நடைமுறைகளைப் பின்பற்றி மக்களுக்குரிய உதவித் திட்டங்களை அவர்களின் இடங்களுக்குச்...

வட்டுக்கோட்டை பகுதியில் உயிருக்கு போராடி ய நோயாளி ஒருவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நோயாளர் காவு வண்டி தாமதித்த தால் நோயாளி உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். சமகால நிலைப்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஊரடங்கு நடைமுறையில்...

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிக்கு வெளிநாட்டிலிருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்தவர்கள் சுகாதார அதிகாரிகளின் அறிவுத்தலை அலட்சியம் செய்து வெளியில் நடமாடுபவர்களின் வீடுகளுக்கு பூட்டுப் போட்டு அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கைகள் காத்தான்குடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் நேற்று இரவு பொதுச் சுகாதார அதிகாரிகளினால் ஒருவரின் வீட்டுக்கு பூட்டு போடப்பட்டதுடன் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு காத்தாக்குடி...

யாழ்.இளவாலை பகுதியில் கடற்படை சிப்பாயை சூலத்தால் குத்திய இளைஞன் மீது பொலிஸாா் நடாத்திய தாக்குதலையடுத்து சூலத்தால் குத்து வாங்கிய கடற்படை சிப்பாயும், பொலிஸாரால் தாக்க ப்பட்ட இளைஞனும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். [caption id="attachment_101888" align="aligncenter" width="1254"] crime scene tape focus on word 'crime' in cenematic dark tone with copy...

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இ.போ.சபைக்குச் சொந்தமான பேரூந்து ஒன்று போதனா வைத்தியசாலை முன்பாக திடீரென பிறேக் பிடித்த காரணத்தால் 16 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்தினம் இரவு வருகை தந்த இ.போ.ச பேரூந்து அதி வேகமாகப் பயணித்துள்ளது. இதன்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை அன்மித்த நிலையிலும்...

வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் பணியாற்றும் பெண் உயரதிகாரி ஒருவருக்கு மிரட்டல் விடுத்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வலிதெற்கு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட இணுவில் பகுதியில் பிரதேச சபையின் அனுமதி எதுவும் பெறாமல் கட்டடம் ஒன்று...

யாழ் பரியோவான் கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்கள் தற்போது பழைய மாணவர்களாக ஒன்று கூடி கைதடி முதியோர் இல்லத்தில் அவர்கள் நேற்று செய்த செயற்பாடு அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துள்ளது. வருடாவருடம் வடக்கின் போர் என அழைக்கப்படும் யாழ் பரியோவான் கல்லூரிக்கும் மத்திய கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட போட்டி நடைபெறுவது வழக்கம் . இந்த வருடமும்...

மோட்டாா் சைக்கிளுக்கு லீசிங் காசு கட்டத்தவறியமையினால் வீடு புகுந்து லீசிங் நிறுவன ஊழியா்கள் தரக்குறைவாக பேசியதுடன் செய்த அட்டகாசங்களால் மனம் உடைந்துபோன 5 பிள்ளைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியிருக்கின்றது. யாழ்ப்பாணம்- தாவடி தெற்கு கிராமத்தில் நேற்றமுன்தினம் மாலை இந்த சம்பவம் இடம்பெற்றியிருக்கின்றது. சம்பவத்தில் சுவிதன் அனுசுயா(வயது34) என்ற குடும்ப...

யாழில் கிராம சேவையாளரிடம் மீண்டுமொரு ஈஸி காஸ் மோசடி மேற்கொள்ள முயற்சித்த போதிலும் குறித்த கிராம சேவையாளர் சுதாகரித்துக் கொண்டதால், மோசடி கும்பலிடம் ஏமாறாது தப்பிக்கொண்டார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , யாழ்.அச்சுவேலி பகுதியை சேர்ந்த கிராம சேவையாளர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபர் ஒருவர் தன்னை புலனாய்வு பிரிவின் காவற்துறைப்...

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து ஈசி காஸ் (ez case) மூலம் 25 ஆயிரம் ரூபாயை கும்பல் ஒன்று மோசடி செய்துள்ளது. இது குறித்து தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வீதி போக்குவரத்து விதிமுறைகளை கண்காணிக்கும் பணியில் கடந்த வாரம் ஈடுபட்டுக்கொண்டு இருந்துள்ளார்....

தென்னை மர வட்டு மிதிப்பதாக குறைந்த கூலி பேசி வேலையை தொடங்கும் நபர்கள் வேலை முடிய அதிக பணம் கேட்டு மிரட்டி பணத்தினை பெற்று சென்றனர் என பாதிக்கப்பட்ட ஒருவர் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; திருநெல்வேலி தபால் பெட்டி சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சென்ற இருவர்...

நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் போலி மருத்துவர்கள் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவ்வாறான போலி மருத்துவர்களில் சுமார் 10 ஆயிரத்துக்கு அதிகமானோரை அடையாளம் கண்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித்த அளுத்கே தெரிவித்தள்ளார். அவ்வாறான போலி மருத்துவர்களை இனங்கண்டு தண்டிக்க நடைமுறையில் சட்டங்களில் திருத்தங்களை...

மல்லாகம் நீதிமன்றில் திறந்த மன்ற நடவடிக்கையின் போது விளக்கமறியல் சந்தேக நபருக்கு கஞ்சா போதைப்பொருளை கைமற்றிய மற்றொரு சந்தேக நபரை சிறைச்சாலை உத்தியோகத்தர் கண்டறிந்தனர். அதனால் சந்தேக நபரை கடுமையாக எச்சரித்த மன்று, அவர் மீது வழக்குத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அத்துடன், நீதிமன்ற வளாகத்துக்குள் வருபவர்கள் பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்படும் நிலையில் கஞ்சா போதைப்பொருளை ஒருவர்...

யாழ்ப்பாணம் நகரில் இயங்கும் கிறீம் ஹவுஸ் ஒன்றில் பணியாற்றும் சிறுவர் தொழிலாளி ஒருவர் மின்சார தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள கிறீம் ஹவுஸ் ஒன்றில் நேற்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். சங்கானை, தேவாலய வீதியைச் சேர்ந்த நல்லகுமார் நிசாந்தன் (வயது -17) என்ற சிறுவர்...

யாழ்ப்பாணம் – கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு இடையேயான மோதல் நிலை வன்முறையாக மாறியதால் விரிவுரையாளர்கள் மூவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அவசர பொலிஸ் பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். வன்முறைக்கு காரணமான மாணவன் தப்பித்த நிலையில் அவரால் அழைத்துவரப்பட்ட 6 பேரில் ஒருவர் மாணவர்களால் பிடிக்கப்பட்டு...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் மனைவி மத மாற்றம் செய்வதற்காக மாத வருமானம் பெறுகிறார் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன். நேற்றையதினம் யாழில் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சுமந்திரன் மனைவியின் பெயர் சாவித்திரி. சுமந்திரன் நாடாளுமன்றத்தில் தனது வருவாய்...

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அசமந்தப் போக்கால் பதிவு செய்யப்படாத விடுதி ஒன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெறுவது யாழ்ப்பாணம் பிரதேச செயலக அதிகாரிகளால் கண்டறியப்பட்டு அங்கிருந்த 17 வயது நிரம்பிய ஒரு பிள்ளையின் தாயாரான சிறுமி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அந்த சிறுமியின் கணவர் என தன்னை அறிமுகப்படுத்தியவரும் அதிகாரிகளால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கோயில் வீதியில்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதை மற்றும் பாலியல் துன்புறுத்தல் ரீதியான வன்முறைகளுக்கு எதிராக பெண்கள் அமைப்பினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, பாலியல் வன்முறை மற்றும் பகிடிவதைக்கு...

All posts loaded
No more posts