- Monday
- January 12th, 2026
கொரோனாப்பெருந் தொற்று அபாயத்தையடுத்து நாட்டில் எழுந்துள்ள நிலைமை காரணமாக இலங்கை பரீட்சை திணைக்களம் இம்மாதம் நடாத்தவிருந்த சகல பரீட்சைகளையும் ஒத்திவைத்துள்ள நிலையிலும், பல்கலைக் கழகங்களின் விரிவுரைகளை ஒன்லைன் மூலமாக நடாத்துவதற்குப் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளபோதிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பரீட்சைகளை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறித்து விசனம் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த...
வரலாற்றுச் சான்றுகளாக முத்திரை சேகரித்தல், நாடுகளின் நாணயங்ள் சேகரித்தல் ஏன் பேனா சேகரிப்பதும் உண்டு இன்னும் சிலர் லேஞ்சியினை சேகரிப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் வித்தியாசமான சித்தனையில் வித்தியாசமான பொருள் ஒன்றைச் சேகரித்து யுத்தகாலம் முதல் இன்றுவரை பேணிப் பாதுகாத்து வருகின்றார். தனது தொழில் நிமித்தம் பல நாடுகளின் பணியாளர்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிட்டியதனால்...
அண்மையில் கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட இலங்கை போக்கு வரத்து சேவைக்கு சொந்தமான பேருந்தில் கொரோனா நோயாளர் ஒருவர் பயணம் மேற்கொண்ட பேருந்தின் சாரதியை தனிமைப்படுத்துமாறு சுகாதாரத்திணைக்களத்தினால் வவுனியா சாலைக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் சாரதியை தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்குட்படுத்தாமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கண்டி பேருந்து சேவையில் ஈடுபடுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினால் விடுக்கப்பட்ட தனிமைப்படுத்தல் சட்ட...
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் ஆளுகைக்கு ட்பட்ட தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் சிகிச்சை பிரிவில் கடமைபுரியும் எட்டு கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் சிகிச்சைக்கு வரும் புற்றுநோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபட்டு வருதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சிறீ பவானந்தராஜாவை சந்தித்து முறையிட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் நாடு...
பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த 6 மாதக் குழந்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று சாவகச்சேரி பிரதேசத்தில் நடந்துள்ளது. கிளிநொச்சி, அக்கராயனில் இருந்து பெண் ஒருவர் பஸ்ஸில் யாழ்ப்பாணம் வந்துள்ளார். பஸ் வாசலின் அருகில் இருந்த இருக்கையில் அவர் அமர்ந்திருந்த நிலையில், பஸ் சடுதியாக பிறேக் அடித்து நிறுத்தப்பட்டுள்ளது. வீதியில் குறுக்கே...
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாணவர்கள் சிலருக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். யாழ். பல்கலைகழகத்தில் முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் whatsapp சமூக வலைத்தளங்கள்...
15 வயது பாடசாலை மாணவியைக் கடத்திச் சென்று மீளவும் கொண்டு வந்து விட்டமை தொடர்பில் மாணவியின் முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஒருவர், மாணவியைத் தாக்கியுமுள்ளார். மாணவி நேற்று காலை 7.30 மணியளவில் பாடசாலைக்குச் சென்ற போது, கோண்டாவில் இ.போ.ச சாலை முன்பாக ஒருவரால் மோட்டார் சைக்கிளிலில் கடத்திச்...
புத்த பெருமானின் உருவம் பொறித்த சேலையை அணிந்து, கொழும்பு - நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வந்த பெண் ஒருவர் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 62 வயதுடைய , உப்புக் குளம் வடக்கு, மன்னார் பகுதியைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். பிரிதொருவருக்கு சிகிச்சைப் பெற்றுக்கொள்வதற்காக, மன்னாரில் இருந்து குறித்த பெண்...
யாழ்ப்பாணத்தில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரை மாய்த்தமைக்கு சமுர்த்தி அலுவலகத்தினதும், சமுர்த்தி உத்தியோகத்தரதும் செயற்பாடுமே காரணம் என குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர். குறிப்பாக, அலுவலகத்தில் வைத்து பெண் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் அவரை அவமரியாதையாக திட்டியதாக குறிப்பிடப்படுகிறது. சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் இந்த சம்பவம் நடந்தது. கடந்த 20ஆம் திகதி, சிவயோகன் என்கிற குடும்பஸ்தர்...
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ஒருவருக்கு தாக்கிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், சிவில் உடையில் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு வந்து முச்சக்கரவண்டி வாடகைக்கு கேட்டபோது, அதிகமான காசு சொல்லியிருக்கின்றார்கள். இதன்போது, காசு அதிகம்...
யாழ்ப்பாணம் நீர்வேலி வடக்கு பகுதியில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்படும் யுவதி கோப்பாய் பொலிஸாரால் நேற்று மாலை மல்லாகத்தில் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் 4 பேர் கொண்ட கும்பல் 20 வயது மதிக்கதக்க யுவதி ஒருவரை கடத்திச் சென்றதாக அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இறுதி இரு வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்ணிக்கை தொடர்பில் நள்ளிரவு தாண்டியும் பாரிய குழப்பம் நீடித்து பதற்ற நிலை ஏற்பட்டத்தை அடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் மீது அதிரடி படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். யாழில் கூட்டமைப்புக்கு கிடைத்த ஆசனங்கள் மூன்றில் முதல் ஆசனத்தை சிறிதரன் வென்றிருந்தார். இந்நிலையில் ஏனைய இருவர் சசிகலாவா, சித்தார்த்தனா என்ற...
இராணுவ வாகனத்துடன் விபத்திற்கு உள்ளாகி காலில் காயமேற்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் சுமார் இரண்டு மணி நேரம் தடுத்து வைத்துவிட்டு கோப்பாய் பொலிஸார் விடுவித்துள்ளனர். யாழ்ப்பாணம், கல்வியங்காடு, இராமசாமி பரியாரியார் சந்தியில் (பழம் சந்தி ) கடந்த சனிக்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றது. திருநெல்வேலி சந்தியில் பக்கம் இருந்து கல்வியங்காடு சந்தியை நோக்கி மோட்டார்...
யாழ்.பிரதான தபால் நிலையத்தில் பற்று சீட்டை தமிழில் எழுதி தர கூறி இளைஞர் ஒருவர் சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்து , தமிழ் எழுதி வாங்கி சென்று இருந்தார். யாழ்.பிரதான தபாலகத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, போக்குவரத்து குற்றம் ஒன்றுக்காக காவல்துறையினரினால் தண்டம் விதிக்கப்பட்ட நிலையில் அதற்கான குற்ற பணத்தினை...
யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்படும் சந்தேக நபர்களின் மேலங்கிகளை (சேர்ட் , ரி.சேர்ட்) கழட்டிய பின்னரே அவர்களை தடுப்பு காவலில் பொலிஸார் தடுத்து வைப்பதாக குற்றசாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களில் சந்தேக நபர்களை தடுத்து வைக்க முதல் அவர்களின் மேலாடைகளை பொலிஸார் கழட்டிய பின்னரே...
காரைநகர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தல்களை மீறி கசூரினா கடற்கரை பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது. நாட்டில் கொரோனோ அச்சம் முழுமையாக நீங்காத நிலையில், காரைநகர் பிரதேச சபையினரால் கசூரினா கடற்கரை மக்கள் பாவனைக்காக திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கு காரைநகர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, கடற்படையினருக்கு கொரோனோ தொற்று...
யாழில் குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டார் எனக் கூறப்பட்ட பெண், நான்கு நாட்கள் கடந்த நிலையில் தன்னை மூன்று இளைஞர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார்கள் என பருத்தித்துறைத் பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார். யாழ். சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த இரு பெண்களுக்கும் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களுக்கும் இடையில் தொலைபேசியின் தவறிய அழைப்பு (மிஸ்ட்...
வடமாகாணத்தில் மருத்துவ நிர்வாக சேவையை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மலினப்படுத்துவதாக சமுதாய மருத்துவ நிபுணர் வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விடயம் வருமாறு, மருத்துவ சேவை வைத்தியர்களின் நியமனம் ஏனைய அரச சேவை நியமனங்களைப்போல் சேவை...
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வளர்ப்பு நாயை கடத்தி சென்ற இருவர் 25 ஆயிரம் ரூபாய் கப்பம் பெற்ற பின்னர் நாயை உரிமையாளர்களிடம் கையளித்துள்ளனர். [caption id="attachment_101888" align="aligncenter" width="1254"] crime scene tape focus on word 'crime' in cenematic dark tone with copy space[/caption] இந்தச் சம்பவம் தொடர்பில்...
மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி சிவில் உடையில் சென்ற காங்கேசன்துறை பொலிஸார், அவர் மீது கட்டை ஒன்றினால் கடுமையாக தாக்கியதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில்நேற்று (திங்கட்கிழமை) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் கடந்த வாரம் இரு குடும்பங்களுக்கு இடையில் மோதல்...
Loading posts...
All posts loaded
No more posts
