- Monday
- January 12th, 2026
2015 ஆம் ஆண்டு கோவிட் உயிரி ஆயுதத்தை உருவாக்கம் செய்ய சீனா திட்டமிட்டிருந்தமை தொடர்பான சீன ராணுவ ஆவணங்கள் அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரிலிருந்து கோவிட் வைரஸ் முதல்முறையாக பரவி உலக நாடுகளுக்கும் பரவியது. இந்த வைரஸ் வுகானில் உள்ள பரிசோதனை கூடத்திலிருந்து தெரியாமல் வெளியேறியிருக்கலாம் என்றும் இவை...
யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த நபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் , உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து , மரணச்சடங்கில் கலந்து கொண்ட 30 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின் கவலையீனமான செயற்பாட்டினால் தாம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோம் என பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்தனர். யாழ்ப்பாணம் சிறாம்பியடியை...
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் முகக்கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் யாழ். நகர பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்ற விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது முகக்கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினை பின்பற்றாதோர் 30 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக பதில் பணிப்பாளர், மருத்துவர் ச.சிறிபவானந்தராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம்...
கரவெட்டி பிரதேசசபையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப் போவதாக பெண்ணொருவர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லியடியில் தமது பழக்கடையை கரவெட்டி தவிசாளர் அகற்றியதாக குறிப்பிட்ட அந்த பெண், அதை மீள அமைக்க அனுமதிக்கப்படா விட்டால் தீக்குளிக்கப் போவதாக தெரிவித்தார். நெல்லியடி சந்தைக்கு அண்மையாக கடையொன்றை வாடகைக்கு பெற்றுள்ள முஸ்லிம் குடும்பமொன்று, அதில் பழைய இரும்பு பொருட்களை...
பேருந்தில் தவறவிடப்பட்ட பணம் மற்றும் அலைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த பருத்தித்துறை சாலையின் காப்பாளர் பாலமயூரனுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். கொழும்பு – பருத்தித்துறை சேவையில் ஈடுபட்ட பேருந்தில் தவறவிடப்பட்ட 2 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் பணத்தையும் சுமார் 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலைபேசியையும் அவர் மீட்டிருந்தார். அதனை உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தார்....
யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கொள்ளை கும்பல் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்தே கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது. இது குறித்து தெரிய வருவதாவது , யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளான காக்கை தீவு , பொம்மைவெளி , ஓட்டுமடம் பகுதிகளில் வீதியில் நிற்கும் பெண்...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவர் தனது 7 மாதக் குழந்தையை தடியால் அடித்துத்தும் ஒரு கையைப் பிடித்துத் தூக்கிச் சென்றும் இரக்கமின்றித் துன்புறுத்தும் காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. அனைவரின் மனதையும் பதறவைக்கும் அந்த காணொலி தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்கவேண்டும் என்பதே அனைவரது கருத்தாக உள்ளது. தாயார்...
யாழ்.மாநகரில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கி வர்த்தக நிலையங்களுக்கு பெயர் பலகை வைத்தால் 50 வீதம் வியாபார கழிவு வழங்கப்படும். என யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தொிவித்திருக்கின்றார். குறித்த விடயம் சபையில் பிரேரணையாக முன்வைக்கப்பட்டு ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இதன்படி புதிதாக தொடங்கும் வியாபார நிலையம் மற்றும் ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கும் வியாபார நிலையங்களில் தாமாகவே விரும்பி...
வலிகாமம் கல்வி வலயத்துக்கு உள்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11இல் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் சிலரால் துன்புறுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யபட்டுள்ளது. குறித்த பாடசாலையில் தரம் 11இல் பயிலும் மாணவன் ஒருவன் உடலில் பச்சை குத்தியுள்ளதாக ஆசிரியர்கள் சிலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தரம் 11இல் பயிலும்...
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் அமைந்துள்ள கேப்பாபுலவு இராணுவ முகாமுக்குள் கால்நடைகள் உள்நுழைந்தமைக்காக கேப்பாபுலவு மாதிரி கிராமத்தை சேர்ந்த மாட்டின் உரிமையாளர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (25) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கால்நடைகளின் உரிமையாளர், வழமைபோன்று நேற்றைய தினம் (25)...
எனது பிள்ளைகள் இருவர் வீழ்ந்து இறந்த குழியை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதும், அதனை மூடுவதற்குரிய நடவடிக்கையினை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்காதுள்ளதாக யாழ்ப்பாணம் மண்டைதீவைச் சேர்ந்த தந்தையொருவர் கவலை வெளியிட்டுள்ளார். அத்தோடு தனது குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பான நஷ்டஈடும் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்விடயம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்...
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆறு வீடுகளில் நேற்று முன்தினம் இரவு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி கல்வயல் பகுதியில் உள்ள பெருங்குளம் வேதனப் பிள்ளையார் கோவில் மற்றும் நுணாவில் வேலங்கேணி கந்தசுவாமி கோவில் ஆகிய பகுதிகளிலேயே இக் குழு திருட்டில் ஈடுபட்டுள்ளது. இந் நிலையில் நுணாவில் வேலங்கேணி கந்தசுவாமி கோவில் பகுதியில் உள்ள வீட்டொன்றில்...
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், நீதிமன்றினால் தண்டம் அறவிடப்பட்டு விடுவிக்கப்பட்ட முதியவரை பொலிஸார் மீள கைது செய்து பொலிஸ் நிலையத்தில் ஒரு நாள் தடுத்து வைத்து நீதிமன்றில் மீள முற்படுத்தியுள்ளனர். இதன்போது முதியவரின் குடும்பத்தினரால், அவர் ஏற்கனவே நீதிமன்றில் குறித்த குற்றத்திற்காக தண்டப்பணம் செலுத்தியமைக்கான ஆவணங்களை சமர்ப்பித்த போது, பொலிஸார் தாம் தவறுதலாக கைது செய்து...
வல்வெட்டித்துறையில் மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் அது தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவர், நாக பாம்பைப் பிடித்து விளையாடியுள்ளார். சில நிமிடங்கள் கழித்து அதனை அயலிலுள்ள வளவில் வீசிவிட்டு தூக்கத்துக்குச் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து தூக்கத்தால் திடீரென எழுந்த அந்த நபர், நெஞ்சு வலிப்பதால் குடிதண்ணீர் கேட்டுள்ளார்....
காரைநகரில் 100 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாள்களுக்கு மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ரன் கல்லூரியில் 20 சதவீத மாணவர் வருகையே காணப்படுகிறது. கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கடந்த வெள்ளிக்கிழமை (நவ.27) உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்களில்...
சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலை மீறி செயற்பட்ட யுவதியினால் மூன்று குடும்பங்களை சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதியை சேர்ந்த யுவதியொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதுளைக்கு சென்று திரும்பியுள்ளார். அதனால் அவரை அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு சுகாதார பிரிவினர் அறிவுறுத்தி இருந்தனர். அந்நிலையில் யுவதி அறிவுறுத்தல்களை மீறி நேற்று முன்தினம்...
கொரோனா தொற்று அச்சத்தால் மீனை வாங்குவதற்கு மக்கள் அச்சம் கொண்டுள்ள நிலையில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் திலிப் வெதஆரச்சி, மக்கள் மீன் சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவர், மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டதுடன் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் உடன் மீனை உட்கொண்டு காண்பித்தார். அத்தோடு...
கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மற்றும் கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் பாதுகாப்புக் கடமைக்கு அனுப்பப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர், மதுபோதையில் இருந்தமை மற்றும் கடமையைச் செய்யத் தவறிய குற்றச்சாட்டில் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவச் சிப்பாய்களுடன் முரண்பட்டு கைகலப்பில் ஈடுபட்டனர்...
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ‘மந்திரவாதி மருத்துவரின்’ ஆலோசனைக்கு அமைவாக செயற்படும் சுகாதார அமைச்சரின் செயற்பாட்டினால் சர்வதேசத்தின் மத்தியில் எமது நாடு நகைப்பிற்குரியதாக மாறியுள்ளதென முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் மேலும் சிலரும் மதரீதியான சடங்கில் ஈடுபடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி...
Loading posts...
All posts loaded
No more posts
