Ad Widget

 25 மாணவர்களின் உயிரை காப்பாற்றிய சாரதி மரணம்

முல்லைத்தீவு, மல்லாவியைச் சேர்ந்த சாரதியொருவர் சமயோசிதமாகச் செயற்பட்டதால் சுற்றுலாச் சென்ற மாணவர்கள் 25 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்ட சம்பவம், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தெரியவருவது, மல்லாவியிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு அரச சார்பற்ற பொது அமைப்பு ஒன்றினால் இசைக்கருவிகளை மீட்டும் பயிற்சி நடைபெறுகிறது. இம்மாணவர்களில் 25 பேர் கொண்ட அணியொன்று, கடந்த...

நல்லூரில் யுவதிக்கு தொலைபேசி இலக்கம் கொடுத்து மாட்டிய பொலிஸ்!!

நல்லூர் ஆலய சூழலில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஆலயத்துக்கு வந்த யுவதி ஒருவருக்கு தனது அலைபேசி இலக்கத்தைக் கொடுத்து உயர் பொலிஸ் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்ட சம்பவம், புதன்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. நல்லூர் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது. இதற்காக ஆலயசூழலில் 750 பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக...
Ad Widget

பரிசோதனைக்காக வடக்கு மாகாணசபையில் காத்திருந்து வீடு திரும்பிய முன்னாள் போராளிகள்!

புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளை இன்று மருத்துவப் பரிசோதனைக்காக கலந்துகொள்ளுமாறு வடக்கு மாகாணசபையிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை கட்டட அலுவலகத்துக்கு வருகை தந்த முன்னாள் போராளிகள் நீண்டநேரமாகக் காத்திருந்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அண்மையில் வடக்கு மாகாணசபையில் புனர்வாழ்பின் விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என தீர்மானம்...

இலங்கையர்களில் 80 சதவீதமானவர்களுக்கு நேரமில்லையாம்!!

இலங்கையர்களில் 80 சதவீதமானோர் 'நேரமில்லை" என்ற போலியான காரணத்தை சுட்டிக்காட்டி தங்களது இலக்குகளை தட்டிக்கழிப்பதாக புள்ளிவிபரமொன்று குறிப்பிடுகின்றது. மேலும் இதில் 45 வீதமானோர் அச்சம் காரணமாகவே தங்களது இலக்குகளிலிருந்து பின்வாங்குவதாகவும் புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை சந்தை ஆராய்ச்சி பணியகத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டிலேயே இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்க் ஹில்டன் ஹொட்டலில் நேற்று நற்குண முன்னேற்ற அமைப்பு...

காத­லியை கழற்­றி­விட காதலன் போட்ட நாடகம்

காத­லித்து வந்த யுவ­தியை கழற்றி விட, அவ­ருக்கு குறுஞ்­செய்தி ஊடாக மரண அச்­சு­றுத்தல் விடுத்த காத­ல­னையும் அதற்கு உடந்­தை­யாக இருந்த அழ­குக்­கலை நிலையம் ஒன்றில் வேலை பார்க்கும் யுவதி ஒரு­வ­ரையும் பிலி­யந்­தலை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். காதலி செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக சூட்­சு­ம­மான விசா­ரணை ஒன்­றினை முன்­னெ­டுத்த பிலி­யந்­தலை பொலிஸார் இவர்­களை நேற்று கைது செய்­துள்­ளனர்....

8 வருடங்களாக மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் குளிரூட்டியிலில் பாதுகாக்கப்பட்ட மீன்கள்!!

மூன்று தொன் நிறையுடைய மீன் தொகையொன்று, கடந்த 8 வருடங்களாக, மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் குளிரூட்டியிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை (12) கண்டுபிடிக்கப்பட்டதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு, கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகக் கூறிய அமைச்சர், நட்டத்தில் இயங்கிவரும் மேற்படி கூட்டுத்தாபனத்தின் கடன் மற்றும் சம்பள நிலுவைகளைச்...

தென்னையையும் வீட்டையும் காப்பாற்றிய ஆசிரியர்

கோப்பாயைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தன் வீட்டில் இருந்த தென்னையை தறிக்காமல் வீட்டின் கூரையும் பாதுகாக்கும் செயற்பாடொன்றையும் மேற்கொண்டுள்ளார். வீட்டின் கூரையில் தேங்காய் விழுந்தால், தென்னை மரத்தை தறிப்பவர்கள் அதிகம் உள்ள நிலையில் இந்த ஆசிரியர் மாற்றுவழியில் சிறப்பாக சிந்தித்துள்ளார். முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் கற்பித்து வரும் இராஜேந்திரம் இரகுமார் என்ற இந்த ஆசிரியர், வீட்டில்...

யாழில் மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் மரணம்!

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் மரணமடைந்த சோக சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது.இச் சம்பவம் யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மனைவி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பயனளிக்காத நிலையில் கடந்த 3 ஆம் திகதி மரணமடைந்தார். இச் சம்பவத்தால் கடுமையான சோகத்தில் இருந்த கணவர், மனைவியின் உடலைப் பார்த்தவுடன் மயங்கி வீழ்ந்து அதே இடத்தில்...

‘நீதிபதி இளஞ்செழியன் கூறியதற்கமைய முகத்திலேயே குத்தினேன்’

சுன்னாகம் பகுதியில், பெண்ணொருவரைத் தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படும் குடும்பஸ்தரை, அப்பெண்ணின் சகோதரன், முகத்திலேயே குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த, உடுவில் பகுதியைச் சேர்ந்த கே. அதிஷ்டராஜா (வயது 45) என்ற குடும்பஸ்தர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம், கடந்த திங்கட்கிழமை (01) இடம்பெற்றுள்ளது. மேற்படி குடும்பஸ்தர், நீண்டகாலமாக தனது தங்கைக்குத் தொந்தரவு...

கடத்தப்பட்டவர்களை மீட்டு தருவதாக கூறியவர் பொலிஸ் காவலில் மர்ம சாவு!!

கடத்தப்பட்டவர்கள் , மற்றும் காணாமல் போனோர்களை மீட்டு தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பாதிக்கப்பட்டவர் பிடித்து யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்த நிலையில் பொலிஸ் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கண்டியை சேர்ந்தவரும் தற்போது சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வசித்து வந்தவருமான கிருஷ்ணன் (வயது...

பிள்ளைகளை பௌத்த மதத்துறவிகளாக்கிய தமிழ் தந்தை!

தமது நான்கு பிள்ளைகளையும் பௌத்த மதத் துறவிகளாக, தமிழ் தந்தையொருவர் மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வசித்து வந்த வீட்டை அடகு வைத்து மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த குறித்த நபர், மனைவி பற்றிய எவ்வித தகவல்களும் இல்லாத காரணத்தினால் இவ்வாறு பிள்ளைகளை பௌத்த மதத் துறவிகளாக மாற்றியுள்ளார். 56 வயதான சித்திரவேல் சுந்தரலிங்கம் என்ற நபரே இவ்வாறு...

இராணுவ வீரரை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பௌத்த பிக்கு!!

இராணுவ சிப்பாய் ஒருவரை மூன்று நாட்களாக கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பௌத்த பிக்கு ஒருவர், மாதம்பை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டவர் மாதம்பை – சேத்சிரிகம பகுதியைச் சேர்ந்த விஹாரையில் பணிபுரியும் 25 வயதான பிக்கு எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை, பாதிக்கப்பட்டவர் வவுனியா – கனகராயன்குளம் இராணுவ முகாமில் பணியாற்றும் 25 வயதான...

பாதயாத்திரையில் தமிழை படுகொலை செய்த மகிந்தராஜபக்ஷ அணியினர்!

மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்கெதிராக சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டு இன்று 3ஆம் நாள் பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ள நிலையில் மகிந்த அணியினரால் பாதயாத்திரைக்கு முன்னால் தாங்கிவரும் பதாகையில் தமிழ் பிழையாக அச்சிடப்பட்டுள்ளது. இன்றுடன் மூன்றாவது நாள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பிழையைத் திருத்துவதற்கு அவர்களால் எந்தவொரு நடவக்கையும் எடுக்காதது தமிழ் மக்கள் மத்தியில்...

மாமியார் கடித்ததில் மருமகனின் கீழ் உதட்டை காணவில்லை

மாமியரை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற போது தனது கீழ் உதட்டின் ஒருபகுதியை இழந்த மருமகனை, கிரிந்திவெலப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 44 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தனது மனைவி வெளிநாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையில், தனது மகளைப் பாதுகாப்புக்காக, மாமியாரின் வீட்டில் தங்க வைத்துள்ள நபர், மகள் பிரத்தியோக வகுப்புகளுக்காகச்...

தவறு செய்த தந்தை : நண்பிகளின் கேலியால் தற்கொலை செய்த மகள்!!!

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர் ஒருவரின் மகளை, மாணவிகள் கேலி செய்தமையால் மனமுடைந்த மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த பரிதாப சம்பவம் சிலாபத்தில் இடம்பெற்றுள்ளது. சுருக்கிட்டுக் கொண்டு ஆபத்தான நிலையில் சிலாபம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 16 வயதுடைய மாணவி ஒருவர் பத்து தினங்களின்...

விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு!! மரணத்திற்கு காரணம் வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயல்!!

காங்கேசன்துறை வீதி, இணுவில் பகுதியில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர், சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இணுவில், திரையரங்கு வீதியைச் சேர்ந்த இளையதம்பி செல்வராசா (வயது 60) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார். இணுவில் பகுதியில்...

நோயாளியின் மோதிரம் வைத்தியசாலை சிற்றூழியரால் அபகரிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வயோதிப் பெண்ணின் 1 பவுண் எடையுள்ள இரண்டு மோதிரங்கள், வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியரால் சனிக்கிழமை (16) மாலை அபகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏழாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த முதிய பெண்மணி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு...

வகுப்பறைக்குள் நுழைந்த அதிபரைத் தாக்கிய ஆசிரியர்

வகுப்பறையில் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம்பெறும் போது, வகுப்பறைக்குள் வந்த அதிபரை, ஆசிரியர் தாக்கிய சம்பவம், மாங்குளம் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (12), குறித்த பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை வகுப்பு ரீதியாக பார்வையிட்டுக் கொண்டுச் சென்ற அதிபர், கற்றல் நடவடிக்கைகள் நடைப்பெற்றுக்கொண்டிருந்த வகுப்பறையொன்றுக்குள் சென்றுள்ளார். இதன்போது அங்கு மாணவர்களுக்கு பாடம் கற்பித்துக்கொண்டிருந்த ஆசிரியரே,...

ஜனாதிபதியின் பெயர் பொறித்த நினைவுக்கல்லை அடித்து நொருக்கினார் விகாராதிபதி!

மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வரமறுத்த இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொறித்த நினைவுக்கல்லை, அவர் மீது கொண்ட ஆத்திரத்தினால் அடித்து நொக்கினார் விகாராதிபதி. ஜனாதிபதி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்புக்கு பயணம் செய்து மட்டக்களப்பு விமானநிலையத்தைத் திறந்துவைத்தார். மட்டக்களப்புக்கு வருகை தந்த மைத்திரிபால சிறிசேனவை மட்டக்களப்பு விகாரைக்கு வருமாறு மங்களராமய விகாரையின் விகாராதிபதி வண.அம்பிட்டியே சுமணரத்ன தேரர்...

சொன்ன இடத்தில் பஸ்சை நிறுத்தாத நடத்துநர் கழுத்தை அறுத்த பயணி

விரும்பிய இடத்தில் பஸ்சை நிறுத்தாத நடத்துநரை பயணி ஒருவர் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், புத்தூரிலிருந்து, சென்னை கோயம்பேட்டுக்கு வந்த அரசு பஸ்சில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த பஸ்சின் நடத்துனராக, திருத்தணி அருகே உள்ள செறுக்கலூர் கிராமத்தை சேர்ந்த செல்வம் ( 46) பணியில் இருந்துள்ளார். நடத்துநரின்...
Loading posts...

All posts loaded

No more posts