பெப்ரவரி 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் உத்தரவு

சில பொலிஸ் அதிகாரிகளின் கவனயீனக்குறைவினால், முழு பொலிஸ் சேவைக்கும் அவப்பெயர் உண்டாகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிராண்பாஸ் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பொரளையிலிருந்து தனது முச்சக்கரவண்டியை செலுத்தியுள்ளார். இதன் போது குறித்த சாரதி வீதி விதிமுறைகளை மீறியதால் நீதிமன்றத்தில் பெப்ரவரி 30 ஆம் திகதி ஆஜராகுமாறு போக்­கு­வ­ரத்து பொலி­ஸார் உத்­த­ரவு பத்­திரம்...

உயிரை பறித்த கார்ட்டூன் படம்!

சிறுவன் ஒருவன் தனது சகோதரனுடன் கார்ட்டூன் படத்தில் வரும் காட்சி போன்று, துப்பட்டாவை எடுத்து சுழற்றி விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக கழுத்து இறுதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த பரிதாப சம்பவம் சாய்ந்தமருதில் இடம்பெற்றுள்ளது. எட்டு வயதுடைய ஹ_ஸைப் ரஷா என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, பெற்றோர் தொழிலுக்கு...
Ad Widget

சங்கானை பிரதேச செயலகத்தில் முறைகேடு! உண்மையை கூறிய பெண் உத்தியோகத்தர் வைத்தியசாலையில்!!

சங்கானை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளரின் கடுமையான நடமுறை காரணமாக அலுவலகத்தில் மயங்கி வீழ்ந்த பெண் உத்தியோகஸ்தர் ஒருவர் சிசிக்சைக்காக சங்காணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பிரதேச செயலகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக குறித்த பெண் உத்தியோகஸ்தர் அரசாங்க அதிபரிடம் உண்மைகளை சொன்னதன் பிரதிபலனாகவே அவருக்கு பிரதேச செயலகத்தில் அவ்வாறான நெருக்கடியான நிலமை ஏற்பட்டுள்ளது....

கேப்பாபிலவு போராட்டம் : வீதியில் பிறந்த நாள் கொண்டாடிய சிறுமி!

கேப்பாபிலவு புலக்குடியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 4வயதுக் குழுந்தையான சதீஸ் கதிசனா தனது பிறந்தநாளை வீதியோரத்தில் கேக்வெட்டிக் கொண்டாடிய சம்பவம் அனைவரது மனங்களையும் உருகச்செய்துள்ளது. கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் மக்கள் விமானப்படையினர் கையகப்படுத்தியு்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்க வேண்டுமெனக்கோரி கடந்த 17 நாட்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர். தமது சொந்த நிலத்தில் வாழ்ந்திருந்தால் இவ்வாறு...

தாயின் தவறால் சிசு மரணம்! வைத்தியர்களின் செயற்பாடு தொடர்பில் கவலை!

இளம் தாயின் சிறு தவறினால், 14 நாட்களேயான ஆண்சிசுவொன்று, பரிதாபகரமாக மரணமடைந்த சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் (15) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தினால், யாழ்ப்பாணம், நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த கபில்ராஜ் வயசன் என்ற 14 நாட்களேயான சிசு மரணமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதிதாக திருமணம் முடித்த இளம் பெண்ணுக்கு, யாழ்.போதனா வைத்தியசாலையில்...

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட விதவைகள் அதிகாரிகள், இராணுவத்தினரால் துஸ்பிரயோகத்துக்குள்ளாக்கப்படுகின்றனர் : சந்திரிக்கா

யுத்தத்தில் உயிர்தப்பிய பெண்கள் இன்னமும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சந்திரிக்கா, யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் விதவைகள், தமது ஊரிலேயே உள்ள சில அதிகாரிகள் மற்றும் சில இராணுவத்தினரால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். குறிப்பாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட விதவைகள் ஒரு விடயத்தை செய்து...

வீதிகளில் சிதறிக்கிடக்கும் மின்சார சிட்டைகள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் பல கிராமங்களில் மின் இணைப்பு வழங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை மின் கட்டணத்திற்கான சிட்டைகள் வழங்கப்பட்டவில்லை. ஆனால் பல கிராமங்களுக்குரிய நூற்றுக்கணக்கான மின் கட்டண சிட்டைகள் வீதிகளில் சிதறிக்கிடக்கின்றன. கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் பொறிக்கடவை சந்தி தொடக்கம் குடமுறுட்டி பாலம் வரையான பகுதிகளில் இவ்வாறு கிளிநொச்சி மின்சார சபையின்...

வயிற்றில் பஞ்சுப் பொதியை வைத்து தைத்த டாக்டருக்கு எதிராக நஷ்டஈட்டு மனு

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கும், அதன் வைத்தியர்கள் சிலருக்கும் எதிரான 100 மில்லியன் ரூபா அபராதம் கேட்டு களனிப் பிரதேச இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்று (14) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தனது இரண்டாவது பிள்ளையின் பிரசவத்தின் பின்னர் தனது வயிற்றில் பஞ்சுப் பொதியொன்றை தவறுதலாக வைத்து தையல் போட்டுள்ளதாக...

எட்டி உதைத்த பிள்ளையை செருப்பால் அடித்த வைத்தியர்!

தனது தாயின் மடியிலிருந்த பிள்ளையொன்று, வைத்தியரை, இரண்டு முறை உதைத்ததால் ஆத்திரமடைந்த வைத்தியர், அக்குழந்தையை எட்டி உதைத்ததுடன், செருப்பில் அடித்த சம்பவமொன்று மொறட்டுவை பகுதியில் இடம்பெற்றுள்ளது. மொறட்டுவை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்திய நிலையமொன்றை நடத்திச் செல்கின்ற வைத்தியரே இவ்வாறு மிகமோசமான முறையில் நடந்துகொண்டுள்ளார் என்று, மொறட்டுவை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்...

தீர்வையற்ற வாகனங்களை வேறு நபர்களுக்கு விற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவர்கள் தான்!!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரிச்சலுகையைப் பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வேறு நபர்களுக்கு கைமாற்றம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. சிறீலங்காவில் கடந்த 3ஆம் நாள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திடமிருந்து, தாம் இத்தகவலைப் பெற்றுள்ளதாக சட்டவாளர் நாகானந்த கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். இதன்படி...

மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்!

குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி மீது கணவன் கத்தி வெட்டு தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் சாவகச்சேரியில் பதிவாகியுள்ளது. உதயசூரியன், கச்சாய் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், இராகுலன் சுகந்தி (வயது 30) என்ற பெண்ணே, தலையில் வெட்டுக்காயங்களுக்கு இலக்கான நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய கணவனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு...

நன்னீர் கிணறு கழிவுநீர் தொட்டியாக மாற்றம்! பொலிஸார் மீது குற்றச்சாட்டு!

வல்வெட்டித்துறை காவல் நிலையதிற்கு பின்னால் உள்ள தனியார் காணியில் உள்ள நன் நீர் கிணறினை காவல் நிலைய கழிவு நீர் தேக்கி வைக்கும் குழியாக மாற்றி வைத்திருப்பதால் கிணறு மாசடைந்து காணப்படுவதாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். நேற்றய தினம் யாழ் மாவட்ட டெங்கு தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்றது....

யாசகத்திற்கும் 5000 ரூபா அபராதம்?

நாட்டில் தற்போது யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்தே செல்கின்றது எனலாம், அத்துடன் இவர்கள் தற்போது வீடுகளுக்கு சென்றும் பேருந்துகளிளும் ஏறி யாசகம் செய்து வருகின்றனர். இவ்வாறு பேருந்துகளில் ஏறி யாசகம் செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் 10 ஆயிரம் பேர் ஆக இருக்கக்கூடும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இவ்வாறு பேருந்துகளில் ஏறி...

தரம் 6 மாணவியின் பாடசாலை அனுமதிவிடயத்துக்கு சுமூகமான தீர்வு

கிளிநொச்சி - உதயபுரத்தை சேர்ந்த தரம் 06 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் நீண்ட நாட்களாக பாடசாலை அனுமதியின்றி அலைந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. குறித்த குடும்பத்தாருடன் இது தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் அம்மாணவியை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் (கனிஸ்ர) சேர்த்துக்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு...

அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா? மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்

கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்தவர் நாகராஜன் கனுசியா. இவர் தரம் ஜந்து வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஜந்து வரைக்குமே வகுப்புகள் உள்ளன. அதுவொரு ஆரம்ப பாடசாலை. 2016 இல் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் இருந்து வெளியேறிய கனுசியா டிசம்பர் பாடசாலை விடுமுறை...

சிரேஸ்ட வைத்திய அதிகாரிகளின் அடாவடி! பெண் வைத்தியர் தற்கொலை முயற்சி!!

வவுனியா வைத்தியசாலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் புதிதாக நியமனம் கிடைக்கப்பெற்று பணிபுரியும் பெண் வைத்தியர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வெளிநாட்டில் படித்துவிட்டு பெண் நோயியல் பிரிவில் புதிதாக நியமனம் கிடைக்கப்பெற்று வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் வைத்தியசாலை விடுதி 7 க்கு...

வவுனியாவில் புதிதாக திறக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையத்தில் எழுத்துப்பிழை

வவுனியாவில் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் மத்திய போக்குவரத்து அமைச்சரினால் உத்தியோக பூர்வமாகத்திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் தமிழ் எழுத்துப்பிழை காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பெருமளவில் தமிழர்கள் வாழ்ந்துவரும் வவுனியா மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தினால் இவ்வாறான தமிழ் பிழைகள் இடம்பெற்றுள்ளமையானது வருந்தத்தக்கதென நிகழ்விற்கு வருகைதந்திருந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பேருந்து நிலையத்தில்...

வவுனியாவில் காணாமல்போன கிணறு கண்டுபிடிப்பு

வவுனியா நகரின் பிரதான வீதியிலிருந்த குளாய்க்கிணறு இன்று வவுனியா நகரசபையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபையின் செயலாளர் ஆர். தயாபரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, கடந்த வாரம் வவுனியா நகரின் பிரதான வீதியின் அருகே காணப்பட்ட பொதுக் கிணறு ஒன்று காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று சம்பவ இடத்திற்குச் சென்று நகர சபையின்...

யாழ் வந்த புகையிரதத்தில் கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டகாசம்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதமொன்றில் மிதி பாலகையில் பயணித்த இளைஞர்கள் சிலர் பகிரங்கமாக சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளார்கள்.புகையிரதத்தில் பயணிக்கும் இவர்கள் கஞ்சாவினை பயன்படுத்தியுள்ளனர்.மேலும் புகையிரதம் நிறுத்தப்படும் இடங்களில் வெளியில் செல்லும் பெண்களிடம் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளனர்.இதன்போது இவர்களது இந்த செயலை தனியார் தொலைக்காட்சி செய்திப் பிரிவு ஒன்று...

கிணற்றை காணவில்லை என முறைப்பாடு

வவுனியா நகரின் மத்தியிலுள்ள இராணுவத் தளபதி கொப்பாகடுவவின் சிலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த குழாய்கிணறு ஒன்றை சில வருடங்களாக காணவில்லையென வவுனியா நகரசபை செயலாளரான ஆர்.தயாபரனிடம் சமூக நலன்விரும்பி ஒருவரால் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பாக தெரியவருவதாவது, கடந்த பல வருடங்களுக்கு முன்பு வவுனியா நகரசபையினால் பொதுமக்கள் பாவனைக்காக வவுனியா நகரின் மத்தியிலுள்ள இராணுவ தளபதி...
Loading posts...

All posts loaded

No more posts