- Friday
- February 27th, 2026
வலி.தெற்கு பிரதேச சபை தவிசாளரின் வாகனம் சுன்னாகம் பகுதியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்காது சுன்னாக காவற்துறையினர் செயற்பட்டதாக அப்பகுதியில் நின்றவர்கள் தெரிவித்தனர். சுன்னாகம் சந்தியில் நேற்று வியாழக்கிழமை (30.08.18) குறித்த விபத்து சம்பவம் ஏற்பட்டு உள்ளது. அது குறித்து விபத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கையில் , தவிசாளரின்...
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், மதுபோதையில் பொது இடத்தில் வைத்து குழப்பம் விளைவித்த மூவருக்கு தலா 5 ரூபா மாத்திரம் தண்டப்பணம் விதித்து யாழ். நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மதுபோதையில் பொது இடத்தில் குழப்பம் விளைவித்தவர்களுக்கு மதுவரிச் சட்டத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டால் 2 ஆயிரம் ரூபா வரை தண்டம் அறவிடப்படும். எனினும், யாழ்ப்பாண பொலிஸாரால் 1866ஆம்...
வாகன விபத்தில் உயிரிழந்த தமிழ் - சிங்கள நண்பர்கள் இருவர் ஒரே புதைகுழியில் புதைக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அம்பாந்தோட்டையில் இடம்பெற்றுள்ளது. இருவரது உடலும் அங்குணுகொலபெலெஸ்ஸ பொது மயானத்தில் ஒரே குழியில் புதைக்கப்பட்டுள்ளது. அசாரிகம பிரதேசத்தை சேர்ந்த நாலக இரோஷன்( (Nalaka Roshan) (31 வயது) மற்றும் காலி நெழுவ பிரதேசத்தை சேர்ந்த இராஜேந்திர சிவகுமார் (Rajendra...
மாவட்ட செயலகங்களில் கடந்த பட்டதாரி பயிலுனர் நேர்முகத்தேர்வில் தகவலறியும் சட்டமூலத்தின் ஊடாக தாம் பெற்ற புள்ளி பட்டியலை தத்தமது மாவட்ட செயலகத்தில் பாதிக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் பெற்று வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் குறித்த சட்டமூலத்தின் ஊடாக தத்தமது பெறுபேறுகளை அறிய முடியாது இருப்பதாகவும் அதற்கான பொறுப்பு வாய்ந்த அதிகாரி தமது விண்ணப்பத்தை ஏற்கமறுப்பதாகவும்...
உடையார் கட்டில் பாடசாலை மாணவியை கடத்தி சென்று விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிளிநொச்சி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு உடையார் கட்டு மகா வித்தியாலத்தில் உயர்தர பரீட்சை எழுதி வரும் லூத்மாத...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆபத்தான கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக குடாக்கடலுக்குள் கொட்டப்படும் விவகாரம் யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் வெளிச்சத்துக்கு வந்தது. அதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி நேற்று நேரில் ஆராய்ந்தார். ஆபத்தான கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக குடாக்கடலுக்குள் கொட்டப்படுவதை அவர் உறுதி செய்தார். யாழ் மாநகரசபையின் அமர்வு நேற்றுமுன்தினம் மாநகர...
மன்னார் கீரி கடற்கரையில் கரையொதுங்கிய கழிவுப்பொருட்களை, யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவர் சேமித்து அப்புறப்படுத்தியுள்ளார். குறித்த கடற்கரையில் பிளாஸ்ரிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் கரையொதுங்குவதால் மீனவர்களும் சுற்றுலாப் பிரயாணிகளும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். அத்தோடு, கடற்கரையில் துர்நாற்றம் வீசி, சூழல் பாதிப்பும் ஏற்பட்டது. இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக புவியியல் துறையின் 4ஆம் ஆண்டு மாணவனான ஆர்.றொக்சன் என்பவர்...
ஆவா குழுவினருடன் இணைந்து செயற்படும் தனது மகனை காப்பாற்றித்தருமாறு இளைஞன் ஒருவரின் தாயார் வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுள்ளார். இந்தத் தகவலை வடக்கு மாகாண மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். வாள்வெட்டு வன்முறை உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில்...
இராணுவத்தினரின் அச்சுறுத்தலை தொடர்ந்து யாழ். நல்லூரில் முன்னெடுக்கப்பட்டு வந்த தியாகி திலீபனின் நினைவிடத்தை புனரமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் அங்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) சிவில் உடையில் வந்த இராணுவத்தினர், ‘வெளியில் சந்தோஷமாக வாழ ஆசையில்லையா?’ என கேட்டு அச்சுறுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த மாநகர...
புத்தளம் கடற்பரப்பில் ஒதுங்கியுள்ள இந்திய மருத்துவ கழிவுபொருட்கள் தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை கூறியுள்ளது. புத்தளம் கரையோர பகுதிகளான கண்டத்தீவு, சின்னப்பாடு, பெரியபாடு மற்றும் பள்ளிவத்தபாடு ஆகிய பிரதேசங்கள் உள்ளிட்ட இன்னும் பல பிரதேசங்களில் அண்மைய நாட்களாக மருத்துவ கழிவுப்பொருட்கள் கரையொதுங்கி வருகின்றன. இவை தொடர்பாக மக்கள் சந்தேகம்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் மாநாகர சபை உறுப்பினர் ஒருவர் சபையின் ஐ.தே.கட்சியின் உறுப்பினரிடம் நம்பிக்கை அடிப்படையில் பின்திகதியிடப்பட்டு பெற்றுக் கொண்ட காசோலையை பயன்படுத்தி 2 லட்சம் ரூபாவினை கையாடல் செய்ய முற்பட்டதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த உறுப்பினர் பணத்தினை மீளச் செலுத்திய நிலையில் முறைப்பாடு மீளப் பெறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர...
இலங்கை நகர் பகுதி ஒன்றில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் வார்த்தைகளினால் மோதிக்கொள்ளும் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வாகனங்கள் நிறுத்த தடைசெய்யப்பட்டுள்ள பகுதியில் வாகனத்தை நிறுத்தியதால், அங்கு கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் சாரதிக்கு எதிராக அபராதம் விதித்துள்ளனர். இதன்காரணமாக இரண்டு தரப்பிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாகனத்தில்...
வவுனியா நகரின் சந்தை பகுதியில் அமைந்துள்ள சதோச விற்பனை நிலையத்தில் நேற்றய தினம் (02.08.2018) காலை 9.00 மணி முதல் மதியம் 3.30 மணி வரை சீனி கொள்ளவனவு செய்த பொதுமக்களை அவற்றை பாவிக்க வேண்டாமேனவும் உடனடியாக திருப்பி வழங்குமாறு வவுனியா பொலிஸார் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வவுனியா சதோச விற்பனை நிலையத்தில்...
வவுனியா தட்டாங்குளம் பகுதியில் விசம் கலந்த நீரை பருகியதால் நான்கு பசுமாடுகள் நேற்றுமுன்தினம் இறந்திருந்த நிலையில் நேற்றும் இரு மாடுகள் இறந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மாடுகள் நேற்று வீடு திரும்பாத நிலையில் உரிமையாளர்கள் தேடியுள்ளனர். அவை காட்டுப் பகுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. வாழ்வாதாரத்துக்கு வழங்கப்பட்ட பசுமாடுகள் விசம் வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளன...
அராலி பகுதியில் குள்ள மனிதர்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இங்குள்ள மனிதர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதுடன், வீடுகள் மீதும் கல் வீச்சிலும் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் இவர்கள் வீட்டு கூரைகள் மீது தாவி திரியும்போது மக்கள் அவல குரல் எழுப்பியதும், கூரையில்...
வீதி ஒழுங்கு விதிமுறைகளுக்கு மீறியதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பாதசாரிக் கடவையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை, வாகனம் ஒன்றில் போக்குவரத்துப் பொலிஸார் ஏற்றிச் சென்ற சம்பவம் ஒன்று இன்றையதினம் நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பாதசாரிக் கடவைகளில் வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்வையிடவும் வர்த்தக நிலையங்களுக்கு செல்வோரும் தமது மோட்டார் சைக்கிள்களை...
அச்சுவேலி - பத்தமேனி வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கவிருந்த வருடாந்த மகோற்சவம் ஆலய தர்மகத்தாவின் எதேட்சாதிகாரமான செயற்பாட்டால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமது ஊரில் துன்பியல் சம்பவங்கள் நடைபெறக்கூடும் என பிரதேச மக்களும் திருவிழா உபயகாரர்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர். மேற்படி ஆலயத்தில் வருடா வருடம் ஒளியமைப்புச் செய்யும் ஒருவரை இவ்வருடம் அதைச்...
சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு விழிப்பூட்டல் செயலமர்வுகளை நடத்தும் சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகர்களுக்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோரால் நெருக்குதல்கள் வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு விழிப்பூட்டல் செயலமர்வு நடத்துவதனால் ஆசிரியர்கள் சிலருக்கு எதிராக தேவையற்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் குறிப்பிடும் அந்தப் பாடசாலையின் அதிபர், இவ்வாறான...
முல்லைத்தீவில் அனுமதி பத்திரமின்றி இயங்கிவரும் மருந்தகத்தில் பெற்றுக் கொண்ட மருந்தினால் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் அவற்றை மூடுவதற்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் உத்தரவிட்டிருக்கும் நிலையில், மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் அதற்கு எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர். இதன் காரணமாக அமைச்சர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 126 வது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை)...
மது போதையில் பொது இடத்தில் அநாகரியமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட அந்தணர் ஒருவருக்கு 200 மணித்தியாலயங்கள் சமூக சேவை செய்யுமாறு தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மது போதையில் பொது இடத்தில் அநாகரியமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸாரால் 45 வயதுடைய அந்தணர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர்...
Loading posts...
All posts loaded
No more posts
