மிருக பலிக்கு எதிரான நீதிமன்றத் தடை நீடிப்பு!

உயிர் காப்பது தர்மம். உயிர் எடுப்பது கர்மம். தர்மம் தலைகாக்கும் என்பார்கள் நீதிமன்ற தர்மம் ஆடுகளின் தலைகளைக் காக்கட்டும் என தெரிவித்துள்ள யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், ஆலயங்களின் வேள்விகளில் மிருகபலி கொடுப்பதைத் தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வரை நீடித்துள்ளார். ஆலயங்ளில் மிருகபலி கொடுப்பதைத் நிறுத்துவதற்குத்...

கனகாம்பிகைக்கு 600லட்சத்தில் 99 அடி உயர இராஜகோபுரம்

வடக்கு மாகாணத்தின் நுழைவாயிலாக உள்ள கிளிநொச்சி மண்ணின் அடையாளங்களுள் ஒன்றாக இரணைமடு குளத்தின் கரையில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய இராஜ கோபுர அடிக்கல் நாட்டு விழா நேற்று வியாழ்கிழமை 14-07-2016 நடைபெற்றது. காலை விசேட வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இவ் அடிக்கல் நாட்டு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர்...
Ad Widget

மக்கள் பார்வைக்காக பிரதிஷ்டை செய்யப்படவுள்ள சிவலிங்கம்

இணுவிலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நாளை செந்தமிழால் திருக்குடமுழுக்கு நடைபெற்று பிரதிஷ்டை செய்யப்படவுள்ள சிவலிங்கத்தை படத்தில் காணலாம். இராவணேஸ்வரன் தாங்கியுள்ள இச்சிவலிங்கத்தை அடியவர்கள் நேரில் தரிசித்து மலர் தூவி வழிபட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்தி யாழில் இராவணனுக்கு ஆலயம்!! செந்தமிழில் பூஜை வழிபாடுகள்!!

யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில், பெருநாள் தொழுகை (படங்கள்)

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நாடெங்கும் முஸ்லிம் பெருமக்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவ் வேளையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒஸ்மானியாக் கல்லூரி அருகே உள்ள ஜின்னா மைதானத்தில் இன்று காலை 7 மணியளவில் சிறப்பு தொழுகை ஒன்று இடம்பெற்றது. இதன் போது பொம்மைவெளி அபூபக்கர் பிரதான இமாம் எம்.பரூஸ் தொழுகையை மேற்கொண்டார். இதன்போது பெருந்திரளான...

யாழில் இராவணனுக்கு ஆலயம்!! செந்தமிழில் பூஜை வழிபாடுகள்!!

சிவபூமியான ஈழமணித் திருநாட்டின் யாழ்ப்பாண இராசதானியின் இணுவையம்பதியில் சிவஞான சித்தர் பீடத்தின் அருளாசியுடன், சைவ மகா சபையின் ஆதரவுடன் சைவநெறிக் கூடத்தினரால் ஞானலிங்கேசுவரர் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஐந்து தளக் கோபுரத்துடன் இராவணேசுவரன் தாங்குகின்ற உள்ளங்கவர் ஞான லிங்கத்தைக் கொண்ட வகையில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாலயத்தின் கருவறையில் இலங்கையிலேயே விசேடமாக செந்தமிழால் தினமும் வழிபாடு ஆற்றப்படவுள்ளது. சிவ விரதங்களில்...

கதிர்காமம் உற்சவ கொடியேற்றம் இன்று

மூவின மக்களும் பக்தியுடன் தரிசிக்கும் புனித பூமியான கதிர்காமக் கந்தனின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் இன்று 05 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 21 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது. கதிர்காமம் உற்சவத்தினை ஒட்டியதாக யால காட்டினூடாக சராசரி 50 ஆயிரம் முதல் 90 ஆயிரம் அடியார்கள் வரை பக்தி பூர்வமாக கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்கின்றனர்....

திருநெல்வேலி அருள்மிகு தலங்காவற் பிள்ளையார் கோவில் பரிசளிப்பு விழா

திருநெல்வேலி அருள்மிகு தலங்காவற் பிள்ளையார் கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சமய அறிவுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா தீர்த்தத் திருவிழாவின்போது நடைபெற்றது. விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேகன் தலைமையில் நடைபெற்ற இப்பரிசளிப்பு நிகழ்ச்சியில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் உப அதிபர் ச.லலீசன், யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் தி.வேல்நம்பி, ஆனைப்பந்தி மெதடிஸ்ற் மிஷன் வித்தியாலய அதிபர்...

யாழ் பாசையூர் புனித அந்தோனியார் திருவிழா

யாழ் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று(13) வெகு சிறப்பாக நடைபெற்றது. கோடி அற்புதராம் பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் திருப்பலிகள் இடம்பெற்று நேற்று திருவிழா சிறப்பாக இடம்பெற்றது. நேற்று(13) காலை 6.30 மணியளவில் யாழ் மறைமாட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட்...

புனித ரமழான் நோன்பு இன்று ஆரம்பம்

ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று(06) மாலை தென்பட்டதனால் இன்று(07) ரமழான் புனித நோன்பு ஆரம்பமாவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று மாலை கூடிய தலைப்பிறையை தீர்மானிக்கும் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு உட்பட கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள், முஸ்லிம் அமைப்புகளின்...

நயினை நாகபூஷணி அம்மன் மகோற்சவம் எதிர்வரும் 06 திகதி ஆரம்பம்

சரித்திர பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத்தினது வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து பதினாறு தினங்கள் உற்சவங்கள் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது. 14 ஆம் திகதி செய்வாய்க்கிழமை 108 சங்குகளால் அம்பாளுக்கு பால் அபிஷேகமும் 15 ஆம் திகதி...

மிருகபலிக்கான தடை நீடிக்கும்

மிருகபலிக்கு தடை விதித்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவை இரத்துச் செய்ய முடியாது என மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன், நேற்று செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயங்களில் இடம்பெறும் மிருகபலியை தடுத்து நிறுத்துமாறு கோரி, இலங்கை சைவ மகா சபை, யாழ். மேல் நீதிமன்றத்தில் இவ்வருட ஆரம்பத்தில் மனுவொன்றை தாக்கல்...

இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் பாமாலை வெளியீட்டு நிகழ்வு

தென்னிந்திய கலைஞர்கள் பாடிய யாழ்ப்பாணத்தின் இணுவிலில் அமைந்துள்ள சரித்திரப் பிரசித்தி பெற்ற ஶ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் திருவருளை எடுத்துரைக்கும் ஶ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் பாமாலை - 2 இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா தொடங்கும் நாளான எதிர்வரும் சனிக்கிழமை (28.05.2016) இரவு 7:00 மணிக்கு ஆலயத்தின்...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம்!

கடல் நீரில் விளக்கெரியும் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் நேற்று சிறப்பாக இடம்பெற்றது. நேற்றையதினம் அதிகாலை 4 மணிக்கு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மடைப்பண்டம் எடுத்துவரப்பட்டு, விஷேட பூஜைகளுடன் பொங்கல் உற்சவம் ஆரம்பமாகியது. ஈழத்தில் கண்ணகி அம்மன் வழிபாட்டுக்கு சிறப்பு மிக்க தலமாக காணப்படும் முல்லைத்தீவு வற்றாப்பளை...

கடற்படையினர் உதவியுடன் அந்தோனியார் ஆலயம் புனரமைப்பு

யாழ்பாணத்தில் உத்தர கடற்படை முகாமின் வளாகத்திற்குள் அமைந்துள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தை புனரமைப்பதற்கு இலங்கை கடற்படையினர் உதவி வழங்கியுள்ளனர். முற்றிலும் புனர்நிர்மாணம் செய்ததுடன் திருப்பலியும் அண்மையில் திருப்பலி பூஜை நடைபெற்றதுடன் இதில் கத்தோலிக்க பக்தர்கள் மற்றும் தென் கடற்படையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் ஆகியோர் பங்குகொண்டனர். திருப்பலியை அருட்தந்தை சுனில் குமார் பீரிஸ் ஒப்புக்கொடுத்தார்....

யாழ். குடாநாட்டு கோவில்களில் விலங்குகள் வெட்டி வேள்வி நடத்த இடைக்காலத் தடை!

யாழ். குடாநாட்டு கோவில்கள் சிலவற்றில் விலங்குகள் வெட்டி வேள்வி நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளது. ஆலயங்களில் விலங்குகளைப் பலிகொடுத்து நடத்தப்படும் வேள்விகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அகில இலங்கை சைவ மகாசபை தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின்போதே இந்த உத்தரவை...

இன்று பெரிய வௌ்ளி!

புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். அவ்வகையில் இன்று (25) உலகளாவிய ரீதியில் அனைத்து கிறிஸ்தவர்களாலும் பெரிய வௌ்ளி தினம் அல்லது புனித வௌ்ளி தினம்...

கிளிநொச்சியில் புத்தர்சிலையுடன் கூடிய வழிபாட்டிடம் திறந்துவைப்பு!

கிளிநொச்சியில் புத்தர்சிலையுடன் கூடிய புதிய வழிபாட்டிடம் ஒன்று புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை கிளிநொச்சிப் படைகளுக்கான தலைமையகத் படைத்தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேன திறந்துவைத்துள்ளார். அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகாபோதி விகாரையிலிருந்து கடந்த ஜனவரிமாதம் வெள்ளரசு மரக்கிளையொன்று கொண்டுவரப்பட்டு கிளிநொச்சி படைத் தலைமையத்தில் நடப்பட்டது. அதனையடுத்து அந்த வெள்ளரசு மரத்துக்கான சுற்றுச்சுவருடன் கூடிய சமாதி நிலையில்...

இன்று மகா சிவராத்திரி

மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். அவ்வகையில் இன்று (07) திங்கட்கிழமை உலகளாவிய ரீதியிலுள்ள அனைத்து இந்து மக்களாலும் பக்தி பூர்வமாக சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும்...

மஹா சிவராத்திரி தினத்தில் புனிதம் பேணப்பட வேண்டும்!

சைவ சமய விரதங்களில் சிவனைக் குறித்து அனுஷ்டிக்கப்படும் மஹா சிவராத்திரி விரதம் தலையாயது. இந்த விரதம் விளையாட்டாகவோ அன்றி வேடிக்கையாகவோ அனுஷ்டிக்கப்படக் கூடாது. இந்த விரதம் மஹா சிவராத்திரி தினத்தின் முன் தினமாகிய திரயோதசி தினத்தன்று ஒரு வேளை பகல் உணவுண்டு சிவராத்திரி தினத்தன்று இரவு நித்திரை செய்யாமல் எல்லாம் வல்ல பரம் பொருளான சிவனைப்...

திருக்கேதீஸ்வரத்தில் மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறும்: வதந்திகளில் உண்மை இல்லை

மன்னார் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 7ம் திகதி மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறும் என அதன் செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய தெரிவித்தார். மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் அதன் செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது. தீருக்கேதீஸ்வரம் திருத்தலத்தில் இந்திய அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் புனரமைப்பு வேலைகள் காரணமாக இம்முறை மகா...
Loading posts...

All posts loaded

No more posts