- Thursday
- September 24th, 2026
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா நாளை வெள்ளிக்கிழமை(28) முற்பகல்- 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் 25 தினங்கள் காலை மாலை உற்சவங்களாக இடம்பெறவுள்ள இவ்வாலயப்பெருந்திருவிழாவில் பத்தாம் திருவிழாவான அடுத்த மாதம் 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 12 ஆம் திகதி...
கிளிநொச்சியில் மழை வேண்டி இரணைமடு கனகாம்பிகை ஆலயத்தில் யாக பூஜை ஒன்றும் ஆயிரத்து எட்டு இளநீர் கொண்டு கனகாம்பிகை அம்மனுக்கு அபிசேகமும் செய்யப்பட்டது. கிளிநொச்சியில் இரணைமடுக் குளத்தை நம்பி மேற்கொள்ளப்பட்ட குறைந்தளவு ஏக்கர் சிறுபோக நெற்செய்கையில் கூட, மழை இன்மையால் குளத்தில் இருந்த மிகக்குறைந்த அளவு நீர் மட்டமும் குறைந்து செல்வதனால் நெற்பயிர்கள் அழிவடைந்து கொண்டுள்ளது....
மடு திருத்தலத்தில் தங்கியிருந்த யாத்திரிகர்களுக்கிடையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் மற்றும் கலாவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சில யாத்திரிகர்களுக்கிடையிலேயே மேற்படி மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதுடன், மோதல் காரணமாக சிலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரிடம் கலாவத்தை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தொலைபேசி இலக்கத்தை பலவந்தமாக...
மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா திருப்பலி நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 அளவில் தமிழ், சிங்கள மொழிகளில் ஒப்புக் கொடுக்கப்படவுள்ளது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் யோசப் கிங்சிலி சுவாம் பிள்ளை ஆண்டகை தலைமையில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோர் இணைந்து திருவிழா...
நயினாதீவு ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு, பயணிகள் பாதுகாப்பு சேவை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்களவாடி ஞானவைரவர் சனசமூக நிலையத்தினரால், இந்தக் கடற்பயணிகள் பாதுகாப்பு சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் எஸ்.தியாகராஜா தெரிவித்தார். இதற்காக 60க்கும் அதிகமான தொண்டர்களும் நீச்சல்வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 5 படகுகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டார். உயிரை பணயம் வைத்து...
வரலாற்றுச்சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம், இன்றுத் திங்கட்கிழமை (12) நடைபெறவுள்ளது. வருடாந்த பொங்கல் உற்சவம் வழமைபோன்று இம்முறையும் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நாட்டின் பல பாகங்களிலிருந்தும், வருகைதரும் பக்தர்களுக்குரிய போக்குவரத்துச்சேவைகள் உரிய முறையில் ஒழுங்குபடுத்த ப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன....
நாவற்குழியில் புதிய பௌத்த விகாரை ஒன்றுக்காக தாதுகோபத்தை அமைப்பதற்கு சிறிலங்கா இராணுவத்தினர் அடிக்கல் நாட்டியுள்ளனர். தென்மராட்சி நாவற்குழியில் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் தெற்கில் இருந்து கொண்டு வந்து இறக்கப்பட்ட சிங்களமக்கள் அரசகாணிகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களின் வழிபாட்டுக்காக பௌத்த ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், அங்கு விகாரைக்கான தாதுகோபத்தை அமைப்பதற்கு கடந்தவாரம் அடிக்கல்...
உலகில் முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரப் பந்தல் கொழும்பு காலிமுகதிடலில் மக்கள் பார்வைக்காக புதன்கிழமை(10) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. குறித்த நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரப் பந்தலானது 60 அடி உயரத்தையும், 40 அடி அகலத்தையும் கொண்டுள்ளது. இதனை பேராசிரியர் பிரபாத் சந்திம உக்வத்த வடிவமைத்துள்ளார்....
கவுனவத்தை வயிரவர் கோவில், வேள்வி உற்சவத்தில் மிருக பலியிடலுக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தடையை நீடித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்றய தினம் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது மேல் நீதிபதி கவுனவத்தை ஆலய நிர்வாகத்தினருக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்திருந்தார். நீதிபதி அத தொடர்பில் குறிப்பிடுகையில் , ஆலயத்தில்...
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்றிரவு திடீரென மெழுகுவர்த்தி ஏற்றும் இடத்தில் தீப் பற்றியதில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. நேற்று சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மெழுகுதிரி ஏற்றும் இடத்தில் திடீரென தீப்பற்றியது. இதனால் சிறிது நேரம் அப்பகுதி புகைமூட்டமாக காணப்பட்டது. எனினும் தெய்வாதீனமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தமிழக மீனவர்கள் கச்ச தீவு திருவிழாவைப்...
கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழாவிற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும், இம்முறை 10 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பெருவிழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழாவிற்கான ஏற்பாட்டு கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றுவெள்ளிக்கிழமை நடைபெற்றது. அக்கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து பக்தர்கள் வருகைதரவுள்ள நிலையில்,...
எதிர்வரும் மாதம் 11, 12 ஆம் நாட்களில் நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் பூர்வாங்க எற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகப்பட்டுள்ளதென மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உறையாற்றும்போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டுகளில் 4,000 ஆயிரம் பக்தர்கள்...
கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான நத்தார் மரம் இன்று(24) இரவு 10 மணிக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த கிறிஸ்மஸ் மரமானது 325 அடி (100M) உயரமுடையதாக அமைக்கப்பட்டு, உலகிலேயே மிக உயரமான நத்தார் மரம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னர் 1950 ஆம் ஆண்டு வொஷிங்டன் நகரில் அமைக்கப்பட்ட 221 அடி உயரம் கொண்ட...
யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளாரின் தலைமையில் கூட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, ஆலயம் ஆயரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய ஆலயத்திற்கான நினைவுக்கல்லை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் கடற்படை தளபதி ஆகியோர் இணைந்து திரைநீக்கம் செய்து வைத்தனர். திறப்பு விழாவில், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அருத்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கடற்படையினர், பொதுமக்கள் என...
கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலயம் புனரமைக்கப்பட்டு நடைபெறவுள்ள திருவிழாவில், தமிழர்கள் பங்கேற்க வழி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயகுமார் உறுதியளித்துள்ளார். தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமாரை மீனவ பிரதிநிதிகள், சென்னை தலைமைச்...
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 1ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை காலை 9.00 மணியிலிருந்து மாலை 3.00 மணிவரை மக்கள் வழிபாடுகளில் ஈடுபடலாம் என இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நவராத்திரி பூஜைகளை மேற்கொள்வதற்காக இராணுவத்தினரிடம்...
நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவ காலத்தில் பக்தர்களால் தவறவிடப்பட்டு மீட்கப்பட்ட பொருட்களை மாநகர சபையில் பெற்றுக்கொள்ள முடியும் என, யாழ். மாநகர சபையின் ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார். நல்லைக் கந்தனின் வருடாந்த மஹோற்சவத்திற்கு வருகைதந்திருந்த பக்தர்களால் தவறவிடப்பட்ட பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், உடமைகளை தவறவிட்ட பக்தர்கள் மாநகர சபையின் மக்கள் தொடர்பு அதிகாரியிடம்...
வரவாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் தேர்த் திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக இடம்பெற்றது. ஆலங்காரக் கந்தன் தேரில் பவனிவர இலட்சோப இலட்சம் பக்தர்கள் புடைசூழ்ந்து வடமிளுத்தனர். இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கிய தேர்த் திருவிழாவில் பக்தர் வெள்ளம் எழுப்பிய “அரோகார” சத்தம் வானைப் பிளந்தது. இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்த பக்தர்கள்...
ஊரில் ஒரு பிரச்சனை எனில் அக் காலத்தில் கோயிலில் ஊரவர் கூடி அந்த பிரச்சனையை தீர்ப்பார்கள். ஆனால் தற்காலத்தில் கோயிலை மையப்படுத்தி ஊரில் பிரச்சினையை ஏற்படுத்து கின்றார்கள் என ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் தெரிவித்துள்ளார். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்றய தினம் கோயில் வழக்கொன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போதே நீதவான்...
பலாலியில் மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆயல வருடாந்த பெருநாளைக் கொண்டாட பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளது. பலாலி வடக்கு ஜே. 254 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 1500 குடும்பங்கள் புனித ஆரோக்கிய மாதா ஆலய வருடாந்த திருநாள் திருப்பலி ஆவணி மாதம் 29 ஆம் திகதி கொடியேற்றத்துடன்...
Loading posts...
All posts loaded
No more posts
