- Thursday
- December 25th, 2025
படுகொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர்களுடன் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா வட்டுவாகல் பாலத்தில் வைத்து கைகுலுக்கிக் கொண்டதற்கு கண்ணால் கண்ட சாட்சியங்கள் உள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். வட.மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனது அலுவலகத்தில் நேற்று...
வீடுகளுக்குள் புகுந்து மக்களை மிகக் கொடூரமாகக் கொன்று குவித்த ஜே.வி.பி.-யினர் நினைவுதினம் அனுஷ்டிக்கும்போது, பிரபாகரன் உயிரிழந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதில் தவறில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் உயிரிழந்த...
கிளிநொச்சி, கரடிப்போக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபான விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று நேற்று (புதன்கிழமை) முன்னெடு்கப்பட்டது. குறித்த போராட்டம் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கூடிய பிரதேச மக்கள் கிளிநொச்சி பொலிசாருக்கு மகஜர் ஒன்றையும் கையளித்தனர். அதனைத் தொடர்ந்து கரைச்சி பிரதேச சபைக்கு சென்று அங்கு...
மே -18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை உந்துருளி (மோட்டார் சைக்கிள்) பேரணியை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நடத்துகின்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும் மோட்டார் சைக்கிள் பேரணி ஏ9 கண்டி வீதியூடாக பரந்தன் சந்தியை அடைந்து அங்கிருந்து...
எதிர்காலத்தில் தமிழ் இனத்தை ஒன்றிணைக்கும் ஒரு நாளாக மே 18ஆம் திகதி விளங்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவ்வறிக்கையில், “முள்ளிவாய்க்கால் நிகழ்வினை அனுஷ்டிப்பதில் முரண்பட்ட சில தரப்பினர், அந்நிகழ்வின்...
காணாமல்போனோர் விடயத்தை இலங்கை தொடர்ந்தும் அலட்சியம் செய்தால் இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்வதன் மூலம் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனது அலுவலகத்தில் காணாமற்போனவர்களின் உறவினர்களுடன் ஸ்கைப் மூலம் ஜஸ்மின் சூக்கா மேற்கொண்ட...
கிளிநொச்சி – இரணைதீவில் தங்கியிருந்து தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள 190 குடும்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சின் தீர்மானத்தின் பிரகாரம், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இம்மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், படிப்படியாக சகல பிரச்சினைகளையும் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார்.
சொந்த காணிகளில் மக்கள் குடியமர்த்தப்படுவார்கள் என அரசாங்கம் அன்று ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதியை முறையாக கடைப்பிடிக்கவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி காணி அதிகாரங்களும் முழுமையாக மத்திய அரசிடம் காணப்படுவதால் எம்மால் ஒரு காணிகளைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். கிளிநொச்சி இரணைதீவு மக்களை நேற்று(திங்கட்கிழமை) சந்தித்த...
இரணைதீவில் தமது பூர்வீகக் காணிகளில் மீள்குடியமர்த்த வலியுறுத்தி போராட்டம் நடத்திவரும் மக்களை வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இன்று நேரில் சென்று சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டு வருகிறார். வடக்கு மாகாண அமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பொ.ஐங்கரநேசன், பா.கஜதீபன் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் ஆகியோரும் முதலமைச்சருடன் இரணைதீவுக்குச்...
அரசையும் தமிழ்க் கூட்டமைப்பையும் குறை கூறுவதில்தான் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் காலத்தைக் கழித்துள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம் சுமத்தியுள்ளார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக என்னை முன்னிலைப்படுத்தினால் அது குறித்து நல்ல முடிவெடுப்பேன். கடந்த முறை விட்ட தவறை இந்தத் தடவையும் விடமாட்டேன் போரால் பாதிக்கப்பட்ட...
முள்ளிவாய்க்கால் என்பது இறுதிப் போரில் பெருந்தொகையான தமிழ் உறவுகள் அரச படைகளின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்ட மண். தமிழ் உறவுகள் பலர் காணாமல் ஆக்கப்பட்ட மண். தமிழினத்தின் விடுதலைக்காக எமது உறவுகள் தீக்குளித்த மண். விடுதலைக் கனவுடன் ஆயிரமாயிரம் வேங்கைகளும் தமிழ் மக்களும் தங்களின் உயிர்களை ஆகுதியாக்கிய மண். மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில்...
கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பறிமுதல் செய்யப்பட்ட, பல நூறு ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வலிகாமம் தெற்கு, பலாலி விமான தளத்தை அண்டிய காணிகளும் அதில் உள்ளடங்குவதாகவும், இராணு முகாம்கள் மற்றும் விமான தளத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட காணிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து காணிகளும் விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
நாடாளுமன்றத்தில் தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்குவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்த போதும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதனை நிராகரித்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்றே குறித்த செய்தியினை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், வடக்கு மாகாண மக்களுக்குப் பணியாற்றவே தாம் விரும்புவதாகவும், தமிழ்த் தேசியக்...
தமிழினப் படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் நினைவேந்தல் செம்மணிப் படுகொலை புதைகுழி இடத்தில் இன்று காலை கடைப்பிடிக்கப்பட்டது. மே12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை தமிழினப் படுகொலை வாரம் கடைப்பிடுக்கப்படுகிறது. இதற்கமைய தமிழினப் படுகொலை வாரத்தின் முதலாவது நாளான இன்று காலை செம்மணியில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது....
பலாலி விமான நிலையத்திற்கான காணி சுவீகரிப்பு தொடர்பான அறிவிப்பு தொடர்பில் வலி.வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் ச.சிவஸ்ரீ அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுவரொட்டி கட்டுவன் சந்தியில் ஒட்டப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்திற்கான காணி சுவீகரிப்பு சட்டத்தின் பிரிவு 38(A) யின் கீழ் 07.08.1987 ஆம் திகதி பிரிசுரிக்கப்பட்ட 465/14 ஆம் இலக்க வர்த்தமான அறிவித்தலுக்கு...
தமிழினப் படுகொலையான உணர்வுமிக்க முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைக் குழப்பாதீர்கள். எங்களை நிம்மதியாக அழ விடுங்கள் எனத் தமிழ் அரசியல்வாதிகளிடம் மாவீரர் அறவிழியின் தந்தை மு. மனோகர் (காக்கா அண்ணா) கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். யாழில் நேற்று வியாழக்கிழமை(10) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே தமிழீழ விடுதலைப் புலிகள்...
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தொடர்ச்சியாக அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் அதுதொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றினையும் அனுப்பியுள்ளது. இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கை வருமாறு, இலங்கை ஆசிரியர் சங்கம், ஊடக அறிக்கை 11.05.2018 வடமாகாண கல்வியமைச்சரின் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பானது தொடர்ச்சியாக...
கூடிய விரைவில் இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படுவதற்கான தோற்றப்பாடுகள் காணப்படுவதாக வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) எமது தனியார் செய்திப்பிரிவிற்கு வழங்கிய விசேட பேட்டியொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘இனப்படுகொலையைப் புரிந்த இராணுவத்தினது தளபதிக்கு வட.மாகாணசபை தொடர்பாகக் கருத்துக் கூறுவதற்கு எந்தவிதமான தகுதியும் இல்லை....
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18ஆம் திகதியை இன அழிப்பு நாளாகவும், தமிழ் தேசியத்தின் துக்க நாளாகவும் வடக்கு மாகாணசபை பிரகடனப்படுத்தியுள்ளது. வடக்கு மாகாண சபையின் 122வது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மேற்படி பிரகடனத்திற்கான பிரேரணையை முன்வைத்தார். குறித்த பிரேரணையை மாகாணசபை உறுப்பினர் இ.ஜெயசேகரம்...
மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகிய மூவருக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாணத்தில் மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படுகின்றது. இதனடிப்படையில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற...
Loading posts...
All posts loaded
No more posts
