- Monday
- December 22nd, 2025
கொரோனா வைரசின் தாக்கம் பாரதூரமாக அமையலாம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் யாரும் சமூக இடைவெளியை பேணுவதாக இல்லை. உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவில் பெப்ரவரி 27 இல் 60 நோயாளிகள். 3 வாரங்களுக்கு முன்னர், மார்ச் 3 இல் எம்மைப் போல் அவர்களும் 100 நோயாளிகள் தானே என்று...
புதிய கோரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் இடர் நிலைமைக்குள்ளான குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு மேலும் பல பண மற்றும் பொருள் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஒரே தடவையில் வழங்கப்படும் கொடுப்பனவாக 5000...
நாட்டில் நேற்றையதினம் கோரோனா வைரஸால் உயிரிழந்த நீர்கொழும்பு வாசி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன. நீர்கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த 64 வயதுடையவர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோரோனா தொற்றுக்குள்ளாகியதால் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு நேற்று மாற்றப்பட்டார். அவர் இருதய நோயாளி என்பதுடன் சுவாசக் கோளாறு காரணமாக...
கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் மேலும் இருவர் இன்று (மார்ச் 30) திங்கட்கிழமை பிற்பகல் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 122ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது. அவர்களில் 11 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர்....
யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, புத்தளம், கண்டி மற்றும் களுத்துறை ஆகிய 6 மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. ஏனைய 19 மாவட்டங்களிலும் நாளை திங்கட்கிழமை காலை 6 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் அன்றய தினம் பிற்பகல் 2 மணிக்கு மீளவும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பில் ஜனாதிபதி...
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச சமுர்த்தி அலுவலக ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (சனிக்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் கிராம சேவகர் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் ஊடாக குறித்த பெண் ஊழியர் யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா சிகிச்சை பிரிவில்...
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி ஐ டி எச் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தஒருவரே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாரவில பகுதியை சேர்ந்த 60 வயதுடைய குறித்த நபர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மேலும்...
வட மாகாணத்தின் வவுனியா, யாழ்ப்பாண மாவட்டத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது. மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை, 27காலை 06.00மணிக்கு நீக்கப்படவிருந்தது. எனினும் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மட்டும் மறு அறிவித்தல் வரை அதனை...
மிருசுவில் படுகொலை சம்பவம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி யாழ். மிருசுவில் இராணுவ முகாமுக்கு அருகில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, 8 அப்பாவி தமிழர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில்...
சுதந்திரமாக நடமாடும் ஒருவரால் 30 நாட்களில் குறைந்தபட்சம் 500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் டொக்டர் ஹரித அளுத்கே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் கடைப்பிடிக்காவிட்டால் மார்ச் 25 தொடக்கம் ஏப்ரல் 7ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...
சமூக வலைத்தளங்களில் மற்றும் உடனடி தகவல் சேவைகளாக வைபர், வட்ஸ்அப் செயலிகளில் வெளியிடப்படும் போலிச் செய்திகள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார். “சமூக வலைத்தளங்களான முகநூல், இணையத்தளங்கள் மற்றும் உடனடி தகவல் சேவைகளாக வைபர், வட்ஸ்அப், மெசெஞ்ஜர் உள்ளிட்ட செயலிகளில் கோரானா வைரஸ்...
இலங்கையில் 500 இற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) காலை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத் தலைவர் வைத்தியர் அனுரத்த பாதனிய இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் ஒருவரிடமிருந்து ஏனையவர்களுக்கு கொரோனா பரவுகின்ற விகிதத்தினை...
காய்ச்சல், இருமல் ,தொண்டை வலி, இசுவாசிப்பதில் சிரமம் முதலான அறிகுறிகள் உங்களிடம் காணப்பட்டால் நீங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் எனக் கூற முடியாவிட்டாலும், இவை கொரோனா வைரஸ் தொற்றின் போது ஏற்படும் அறிகுறிகள் என்பதால் உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க கீழே குறிப்பிட்டுள்ள படிகளைப் பின்பற்றவும். இலங்கை நாட்டின் குடிமகனாக இது உங்கள் தேசிய பொறுப்ப்பாகும். மருத்துவ...
வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட குடும்பம் ஒன்றுக்கு தனிநபர் கடன் தவணைக் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தைக் காண்பித்து வைப்பிலிட்ட பணத்தை மீளப்பெறுவதற்கு வங்கி முகாமையாளர் மறுத்துள்ளார். இந்தச் சம்பவம் இலங்கை வங்கியின் வட்டுக்கோட்டை கிளையில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட தாயார் தெரிவித்தார். ஒரு மில்லியன் ரூபாவுக்கு உள்பட்ட வங்கிக் கடன் நிலுவைகள் அறவீட்டை 3 மாதங்களுக்கு இடைநிறுத்தி...
சுவிட்ஸர்லாந்தில் இருந்து வந்த மதபோதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் யாழ்ப்பாணத்தில் பொலிஸாரே காப்பாற்றினார்கள் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியுள்ளார். யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களை சந்தித்து கருத்துக் கூறியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் கூறுகையில், “சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் யாழ்ப்பாணத்தில் பாதுகாத்தது பொலிஸாரே. மேலும் பொலிஸார் வடமாகாண சுகாதார...
யாழ்ப்பணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான சுவிஸ் மதபோதகருடன் நேரடித் தொடர்பிலிருந்ததாக அடையாளம் காணப்பட்ட 18 பேர் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். பலாலியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு இரண்டு கட்டங்களாக இவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பான மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத்...
வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்கள் மற்றும் கொழும்பு, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. முன்னர் நண்பகல் 12 மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும் என தீர்மானிக்கப்பட்ட போதும் பிற்பகல் 2 மணிக்கே நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி...
யாழ். மாவட்டத்தில் 1729 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன் 192 பேர் அரியாலை தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் என யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இதனிடையே, 80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தாவடி கிராமத்தில் சுமார் 300 குடும்பங்களை உள்ளடக்கியதான ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் தற்போது...
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளதுடன் 227 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பிலுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மருத்துவ கண்காணிப்பில் மேலும் 05 பேர் உள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், நாடு முழுவதிலும் உள்ள 45 தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் 3,506 பேர்...
யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இங்கு பலருக்கு கொரோனா தொற்றுக்கான வாய்ப்புக்கள் அதிகம் உண்டு என யாழ்ப்பாண போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கையிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணத்திலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள...
Loading posts...
All posts loaded
No more posts
