யாழ் தேவி பரீட்சார்த்த ரயில் விபத்தில் ஒருவர் கிளிநொச்சியில் மரணம்!

கிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை காலை ரயில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். கிளிநொச்சி நகருக்கு அண்மையில் உள்ள தொண்டமான் நகர் 55 ஆம் கட்டையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தொண்டமான் நகரை சேர்ந்த வைரமுத்து திருநாவுகரசு(வயது 78) என்பவரே மரணமடைந்துள்ளார். சைக்கிளில் பயணித்த அவர் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்றபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது....

இனவாதம் போக இனிமேல் பிரதேசவாதம் கிளப்பாதீர்கள் – சரவணபவன்

வடமாகாணத்தில் வாக்குரிமை அற்றவர் விக்னேஸ்வரன். அவர் கொழும்பில் வாழ்பவர். வடக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறுகிறார் அமைச்சர் பஸில் ராஜபக்க்ஷ. (more…)
Ad Widget

கணவன்- மனைவிக்கு இடையிலான சண்டையில் அயல்வீட்டுக்காரர் தலையிட முடியாது – விக்னேஸ்வரன்

இலங்கையில் இடம்பெறுவது கணவன்- மனைவிக்கு இடையிலான சண்டையாகும். இதில் தமிழக அரசியல் தலைவர்கள் வந்து விவாகரத்து பெறுமாறு கோரமுடியாது (more…)

பிரபாகரன் கேட்டதையே கூட்டமைப்பு கேட்கிறது என மகிந்த கூறியது வெட்கத்திற்குரியது! – சீ.வி.விக்கினேஸ்வரன்

தம்பி பிரபாகரன் கேட்டதையே தமிழ்தேசிய கூட்டமைப்பும் கேட்பதாக சிறீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருக்கும் கருத்து மிகவும் வெட்கத்திற்குரியது (more…)

தேர்தல் விஞ்ஞாபனத்தை அமுல்படுத்தும் சட்ட அதிகாரம் கூட்டமைப்பிற்கு கிடையாது – கெஹலிய ரம்புக்வெல்ல

எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டினாலும், தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை அமுல்படுத்தும் சட்ட அதிகாரம் கிடையாது என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். (more…)

தமிழ் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை! – தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். (more…)

வீடுகள் காணிகள் கையளிப்பை இடை நிறுத்தியது தமிழ் தேசிய கூட்டமைப்பே!- தி.துவரகேஸ்வரன்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் வந்திருந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறி இருந்தார் “தேர்தல் ஆணையாளரின் வேண்டுகோளுக்கு இணங்க வீடுகள் காணிகள் கையளிப்பை இடை நிறுத்தி உள்ளதாக” தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்து இந்த வைபவத்தை இடை நிறுத்தியது தமிழ் தேசிய கூட்டமைப்பே! இதனால் சுமார் 400 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன என ஐக்கிய தேசிய...

அடிமைகளாக தமிழர்களை வைத்திருப்பதே மகிந்த அரசின் திட்டம்! முறியடிக்க ஆணை தாருங்கள்: சுரேஷ்

தமிழ் மக்கள் சிங்களவர்களுக்கு அடிமைகளாகவே இருக்க வேண்டும். அவர்களுக்கு அரசியல் அதிகாரம் உட்பட எந்த அதிகாரமும் கிடைத்துவிடக் கூடாது என்பதில் மகிந்த அரசு உறுதியாக உள்ளது. (more…)

கூட்டமைப்பு பொய் வாக்குறுதிகளை வழங்குகின்றது; தவராஜா

13 ஆவது திருத்தத்தில் உள்ளடங்காத, மாகாண சபையினால் செய்ய முடியாத விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் வாக்குறுதிகளாக் கூறி மக்களை ஏமாற்றுகின்றது (more…)

தீர்வு கண்டால் கூட்டமைப்பின் அரசியல் செத்துவிடும்: பசில்

'தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் பட்சத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் அவர்களால் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் போய்விடும' (more…)

கூட்டமைப்பு வேட்பாளர்கள் மீது தாக்குதல்!

வட மாகாண சபைத்தேர்தலில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கும் சுயேட்சைக்குழுவாக பூட்டு சின்னத்தில் போட்டிடும் வேட்பாளருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. (more…)

அரசின் தேர்தல் பிரசாரங்களில் ஆளுநர் ஈடுபடுவதை நிறுத்த கோரிக்கை

அரசாங்கத்தின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் வட மாகாண ஆளுநர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஈடுபடுவதை நிறுத்துமாறு கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கில் காணி சுவீகரிப்பை தடுக்க முன்வருமாறு வேட்பாளர்களிடம் கோரிக்கை

வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் காணி சுவீகரிப்புக்கு எதிராக குரல் கொடுத்து பொதுமக்களின் காணிகளை மீளப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் (more…)

அனந்தி எழிலன் பயணித்த வாகனத்தின் மீது தாக்குதல்

வடக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான எழிலனின் மனைவியுமான அனந்தி பயணித்த வாகனத்தின் மீது இராணுவ காடைக் கும்பல் கற்தாக்குதல் நடத்தியுள்ளது. (more…)

சரவணபவன் எம்.பி புலம்புகின்றார்; ஈ.பி.டி.பி

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் புத்தி தடுமாற்றட்டத்தினால் புலம்புகின்றார் என்று ஈழமக்கள் ஜனநாயக் கட்சி தெரிவித்துள்ளது. (more…)

“பட்டதாரிகளது சம்பளத்தில் வடக்கில் தேர்தல் பரப்புரை, பாதிக்கப்பட்டவர்கள் தட்டிக்கேட்க வேண்டும்” – சரவணபவன்

பயிலுநர்களாக உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கவும் ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கில் வீடு, காணி கையளிப்பு இடைநிறுத்தம்

தேர்தல் காலத்தில் வடக்கில் பொதுமக்களுக்கு வீடுகள், காணிகள் கையளிப்பதை தவிர்க்குமாறு அரசாங்கத்துக்கு தேர்தல் ஆணையாளர் பணித்துள்ளார். (more…)

இந்தியாவின் பொதுமன்னிப்புக்காக ஏங்கித் தவிக்கிறார் டக்ளஸ் – சரவணபவன் எம்.பி

கொலைக் குற்றவாளியாக இந்திய அரசால் தேடப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்களுக்காகக் குரல்கொடுத்தால் தனக்குப் பொது மன்னிப்புக்கிடைக்கும் என்ற நப்பாசையில் நாடகமாடுகிறார். (more…)

த.தே.கூட்டமைப்பின் தீவகப் பிரதேச இணைப்பாளர் ஈ.பி.டி.பியுடன் இணைவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவகப் பிரதேச இணைப்பாளரும், தீவிர செயற்பாட்டாளருமான K.S. பேணாட் மாஸ்ரர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார். (more…)

நீதியான தேர்தலை உறுதிப்படுத்துவதற்காக இராணுவத்தை முகாமுக்குள் முடக்குங்கள், ஜனாதிபதிக்கு கூட்டமைப்பு அவசரக் கடிதம்

ஜனநாயக முறையில் நீதியான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக உடனடியாக வடக்கில் உள்ள இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்குங்கள் என்று கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடிதம் ஒன்றை இன்று அனுப்பவுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts