Ad Widget

வடக்கில் ஜனாதிபதி தலைமையிலேயே பிரசாரம்!

வட மாகாணசபை தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலேயே பிரதான பிரசாரக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது (more…)

யாழ்.கல்வி அதிகாரிகளை கட்டாயப்படுத்தும் ஆளுநர்; இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

வீரசிங்கம் மண்டபத்தில் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றுக்குப் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோரை வருகை தருமாறு வடமாகாண ஆளுநர் கட்டாயப்படுத்தியுள்ளார் என்று (more…)
Ad Widget

கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் அரசுடன் இணைவு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினரான சிவகுமார் அரசாங்கத்துடன் இணைத்து செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார். (more…)

பலாலி ஆசிரியர் கலாசாலையின் செயற்பாடுகள் இந்த வருடத்துடன் நிறுத்தப்படுகின்றது!

ஆசிரியர்களின் தொழில்சார் கல்விக்கும் வாண்மை விருத்திக்கும் தனித்துவமான முறையில் கடந்த 55 வருடங்களாகச் செயற்பட்டு வந்த பலாலி ஆசிரியர் கலாசாலையின் செயற்பாடுகள் இந்த வருடத்துடன் நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

மூன்றாம் கட்டப் போராட்டம் ஆரம்பம் சி.வி.விக்கினேஸவரன்

'தமிழ் மக்களாகிய நாம், கடந்த 1956ஆம் ஆண்டு தொடக்கம் ஜனநாயக முறைப்படி எமது உரிமைகளுக்காக போராடி வந்தோம். அது தோற்றுப்போனதை அடுத்து ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதிலும் தோற்றுப்போன நிலையில், இப்போது எமது மூன்றாம் கட்டப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்' (more…)

நாவற்குழி புத்த விகாரை மீது கைக்குண்டு வீச்சு

நாவற்குழி பகுதியில் குடியிருந்த சிங்களக் கிராமத்திலுள்ள புத்த விகாரை மீது இனம் தெரியாதவர்கள் கைக்குண்டு ஒன்றைவீசி வெடிக்க வைத்துள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். (more…)

காணி ஆக்கிரமிப்பை பேசித் தீர்க்கத் தயார்; சபையில் இரா.சம்பந்தன்

வடக்கு, கிழக்கில் காணி ஆக்கிரமிப்புகள், சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் அரசு உனடியாகத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், (more…)

அங்கர், மெலிபன், டயமன்ட் பால்மாக்களில் நச்சு இரசாயனம்: விற்பனைக்கு தடை

டீ.சீ.டீ என்றழைக்கப்படும் டய்சைனைட் டயமைட் எனும் நச்சு இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பால்மா மாதிரிகளை இரசாயன தொழில்நுட்ப நிறுவனத்தில் பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் மஹிபால ஹேரத் தீர்மானித்துள்ளார். (more…)

வெலிவேரியவில் இடம்பெற்ற சம்வம் விரைவில் எமக்கும் :: எம்.ஏ.சுமத்திரன் தெரிவிப்பு

அரசிற்கு ஏதிராக நடவடிக்கையில் ஈடுபட்டால் வெலிவேரியவில் இடம்பெற்றது போன்றே எமக்கும் இடம்பெறும்.இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமத்திரன் (more…)

யாழில் அடிப்படை வசதிகளை பெற்றுத் தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

தமக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரி யாழ். குப்பிளான் வடக்கு J / 211 கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். (more…)

மீற்றர் வட்டியால் போகிறது உயிர்; எஸ்.எஸ்.பி தெரிவிப்பு

யாழ்ப்பாணத்தில் காசோலை மோசடி அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். (more…)

வடமாகாண சபைத் தேர்தலை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

வடமாகாண சபைத் தேர்தலை ரத்து செய்ய இலங்கையின் மேல்முறையீட்டு நீதிமன்றம் மறுத்துவிட்டது. (more…)

வடமராட்சிக் கடல் பரப்பில் சீன மீனவர்கள்!

வடமராட்சிக் கடல் பரப்பில் கடந்த சில வாரங்களாகச் சீன மீனவர்களின் ஆக்கிரமிப்பால் தாம் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று தமிழ் மீனவர்கள் குமுறுகின்றனர். (more…)

கூட்டமைப்பு வேட்பாளர்கள் – பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர்கள் சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கும் பொதுநலவாய நாடுகளின் செயலகத்தைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. (more…)

த.தே.கூ.வின் பிரசாரம்; கறையான் புற்றில் கருநாகம் குடிபுகுந்த கதையாகும்: ஈ.பி.டி.பி

கோழி கூவி பொழுது விடிந்ததாக சொல்வது போல் தாம் கூறியே வடக்கில் அபிவிருத்திகள் மற்றும் மீள்குடியேற்றங்கள் நடப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுவது வெறும் தேர்தல் பிரசாரமே. இவர்களின் இந்த பிரசாரமானது, (more…)

அவுஸ்திரேலிய கடல் பயணத்தை தவிருங்கள்: த.தே.கூ.

சட்டவிரோதமாக ஆபத்து நிறைந்த அவுஸ்திரேலியா கடல் பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். (more…)

யாழ்.குடாவில் 13,100 இராணுவ வீரர்களே கடமையில் ; முதுமையில் உளறுகிறார் சம்பந்தன் எம்.பி

தேர்தலில் வங்குரோத்து அடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இராணுவத்தை அரசியலுக்குள் இழுத்து சுயலாபம் தேடும் முயற்சியை தவிர்க்க வேண்டும் என்று யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார். (more…)

தேர்தலை நோக்காகக்கொண்டே காணிகள் விடுவிப்பு : த.தே.கூ

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலை நோக்காக் கொண்டும் நவநீதம் பிள்ளையின் வருகையினைக் கருத்தில்கொண்டுமே இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படுகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். (more…)

சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் சடலமாக மீட்பு

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவர் சுன்னாகத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)

தனியார் காணிகள், வீடுகளிலிருந்தும் இராணுவத்தினர் வெளியேறுவர்: கட்டளைத் தளபதி

தனியார் காணிகள் மற்றும் வீடுகளிலிருந்தும் இராணுவத்தினர் விரைவில் வெளியேறுவார்கள் என்று யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts