- Monday
- August 18th, 2025

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் அரசியல் தீர்வை வழங்குவதில் தற்போதைய அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமல்லாது தமிழ் மக்களும் கூட ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் தீர்விற்கு விருப்பத்துடன் உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய முக்கிய இரு குற்றவாளிகளைக் கைதுசெய்ய சட்டமா அதிபர் அனுமதி மறுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது. சுவிற்சர்லாந்துக்குத் தப்பிச் சென்ற இந்தப் படுகொலையின் இரண்டு முக்கிய சந்தேக நபர்களையும் கைது செய்து,...

சமஸ்டி முறைமை மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட விடயங்களைத் தவிர வேறு தீர்வுகளை அரசாங்கம் முன்வைத்தால் அதனை நிராகரிக்கும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள், கூட்டமைப்பின் தலைவரிடம் கூட்டாக இணைந்து வலியுறுத்தியுள்ளன. அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக அரசாங்கத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா....

நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் காரணம் கண்டறியமுடியாத சிறுநீரக நோய் பரவி வருவதாக ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது. நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் குறித்த சில இடங்களில் இந்நோய்க்கான காரணம் கண்டறியப்படவில்லையெனவும் அச்செயலணி தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் சிறுநீரக...

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது கல்லறை அமைத்தமை தொடர்பாக நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்ட நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு முரணான வகையில் கல்லறை அமைக்க முற்பட்டர்கள் என்ற குற்றச்சாட்டில் மாவீரர்களது உறவினர்கள், முன்னாள் போராளிகள் ஆகியோருடன் கரைச்சி பிரதேச சபை செயலாளர் ஆகியோருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டது. இவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட...

போர்க்குற்ற விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டுள்ளது என்ற கருத்தை ஐ.நா. முற்றாக நிராகரித்துள்ளது. யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட மனித குலத்திற்கு எதிரான விடயங்களுக்கு சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை பொறிமுறை ஏற்படுத்தப்பட்டு நீதி வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளிட்ட பலர் அரசை வலியுறுத்தி...

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பூர்வீக நிலங்களைத் துண்டாடுவதற்கு துணைபோகக்கூடாது எனவும், அவ்வாறு துணைபோனால் மீண்டும் போர்ச்சூழல் உருவாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தலைப்பிடப்பட்ட குறித்த துண்டுப்பிரசுரங்கள் நேற்றைய தினம் கிளிநொச்சியின் பல பிரதேசங்களில் வீசப்பட்டுள்ளதால் அங்கு ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. இதேவேளை, கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறையொன்றை அமைப்பதற்கான...

கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி நேற்று வியாழக்கிழமை 05-01-2017 ஆரம்பிக்கப்பட்டிருந்தது. முற்பகல் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒன்று கூடிய மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில் பிற்பகல் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்ற கரைச்சி பிரதேச சபையின் செயலலாளர்...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கு தீர்ப்பு தொடர்பில் தனக்கும் பிரச்சினை உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டமா அதிபருக்கு தனது அதிருப்தியை தெரிவித்ததை அடுத்து மேன்முறையீட்டிற்கான நடவடிக்கையை அவர் ஆரம்பித்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம்...

யாழில் பல பெண்களிடம் தகாத முறையில் நடப்பதற்கு முயற்சித்த பொலிஸ் புலனாய்வாளர் ஒருவருக்கு எதிராக யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ். நகர் முனியப்பர் வீதியிலுள்ள விற்பனை நிலையமொன்றில் பணியாற்றும் இளைஞன் ஒருவரை நேற்று கைதுசெய்து அழைத்துச் சென்ற 45 வயது மதிக்கத்தக்க குறித்த பொலிஸ் புலனாய்வாளர், அவரை யாழ்.பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின்...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறையில் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவது அவசியமானதென்றும் அதன் ஒவ்வொரு அமர்விலும் பெரும்பான்மை தேசிய நீதிபதிகளுடன் குறைந்தபட்சம் ஒரு சர்வதேச நீதிபதி நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமென்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. நீதிபதிகளின் தெரிவு தொடர்பில் சிவில் சமூக அமைப்புகளின் ஆலோசனையை பெற்று, அரசியலமைப்பு...

யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவிருந்த “ஜனாதிபதியிடம் தெரிவிக்க” பிராந்திய அலுவலக திறப்பு நிகழ்வு, தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இறுதி யுத்தம் முடிவடைந்த போது ராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் தெரியும் என முன்பு சாட்சியம் அளித்த ராணுவ அதிகாரி ஒருவர், நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் அதுபற்றி எதுவும் தெரியாது எனத் தெரிவித்திருக்கிறார். அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒருவராகிய நடேசு முரளிதரன், அவருடைய மனைவி ஜெயக்குமாரி, அவர்களுடைய...

வடக்கு மாகாண முதலமைச்சரை சில தவறான வழிநடத்தல் காரர்களே கனடா நாட்டிற்கு அழைப்பதாகவும் அவரை அங்கு செல்லவேண்டாமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கனடா நாட்டின் மார்க்கம் நகரில் நிகழ்வுகளை நடாத்துபவர்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கனடாவிற்குச் செல்லவுள்ள நிலையில், அந்நிகழ்வுகளை நடாத்துபவர்கள்...

நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண் கடனை திருப்பிச் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவா் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் நேற்று மாலை முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் மூன்றாம் திட்டம் தேராவில் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்கொலை செய்யும் முன் அவா் எழுதியதாக சந்தேகிப்படும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் கணவன்...

போக்குவர்த்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு விதிக்கப்படவுள்ளதாக உத்தேசி்க்கப்பட்ட 25,000 ரூபா அபராதம் விரைவில் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அறிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வௌியிட்டார். மோட்டார் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்ட...

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி இரணைமடு சந்தியில் ஒன்று திரண்டு வேலை வாய்ப்பு வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளாகிய தம்மை விடுதலை செய்யும்போது வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும் என உறுதியளித்த போதிலும், இன்றுவரை தாம் சொல்ல முடியாத துன்பங்களை அனுபவித்து வருவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தமக்கு வேலை...

தமிழ் சமூகத்தை பேரதிர்ச்சிக்கு உட்படுத்தும் விதமாக நடாத்தப்பட்ட திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை இடம்பெற்று இன்றுடன் பத்து வருடங்கள் கடந்து ஒரு தசாப்தம் ஆகியுள்ளது. இந்தப் படுகொலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையிலும் சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையின் போர்க்குற்றம் குறித்த குற்றச்சாட்டுக்கு இப்படுகொலையும் ஆதாரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. 2006 ஜனவரி 2 ஆம் நாள் திருகோணமலை,...

சாவகச்சேரியைச் சேர்ந்த இனியவன் என்று அழைக்கப்படும் முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தர்மசேனா ரிசீகரன் என்ற 34 வயதான 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் உறுப்பினராக செயற்படும் இவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் என்கின்ற சொற் பிரயோகங்களை சர்வதேசஅளவில் மாத்திரமன்றி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் தமது சுயலாபங்களுக்கு பயன்படுத்தி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை பொறுத்தவரையில் அது ஒரு ஆரோக்கியமான விடயமல்ல. இன்றுவரைக்கும் அது ஒரு பிரச்சினையாக இருந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். வடமாகாண சபையின் புதிய...

All posts loaded
No more posts