- Saturday
- August 23rd, 2025

பலாலி விமானநிலைய ஓடுபாதையை விரிவாக்கும் எந்தவொரு ஒப்பந்தத்திலும் தான் கையெழுத்திடப்போவதில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற 84ஆவது மாகாண சபை அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த அமர்வின்போது வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், பலாலி விமானநிலையத்தை விரிவாக்குவதற்காக 1600 ஏக்கர் நிலத்தை நிரந்தரமாக அபகரிக்கும் முயற்சிகள் நடைபெற்று...

சாவகச்சேரி - சங்கத்தானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் எரி காயங்களுக்கு உள்ளான நிலையில் மரணித்த, பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 57 வயதுடைய சிறிகலா எனும் பெண்னே இவ்வாாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அயலவர்கள் மூலம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். குறித்த பெண் அவ்...

சொந்த காணிகளில் குடியமர்த்தப்படும்வரை தமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்து முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு- பிலக்குடியிருப்பு மக்கள் இன்று (சனிக்கிழமை) 12ஆவது நாளாகவும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். கேப்பாப்பிலவு மக்களின் இம் மண்மீட்பு போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்ற நிலையில், நேற்றைய தினம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அங்கு சென்று தமது...

கிழக்கு மாகாண எழுக தமிழ் பேரணியில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கலந்துகொண்டுள்ளார். காலையில் ஆரம்பமான எழுக தமிழ் பேரணியில் காணாமல் போன உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளில் உறவினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர். அங்கீகரி அங்கீகரி எங்கள் தாயகத்தை அங்கீகரி, சுயநிர்ணயத்தை அங்கீகரி, அரசியல் கைதிகளை...

விடுதலைப்புலிகளின் ஓடுபாதையை புனரமைத்து அதற்கான பாதையொன்றை உருவாக்குவதற்காகவே தாம் மக்களின் காணிகளை அபகரித்து வைத்திருப்பதாக விமானப்படையினர் தன்னிடம் தெரிவித்ததாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 84ஆவது அமர்வு நேற்று நடைபெறுகையில், மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த இடத்தில் மீளக்குடியேற்றும் பிரேரணையை முன்மொழிந்தார். இதன்போது...

அரச காணிகளை இராணுவத்தினரின் தேவைக்குப் பெற்றுக்கொண்டு மக்களின் காணிகளை விரைவில் விடுவிப்பதாக சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்களிடம் உறுதியளித்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் பிரதிநிதிகள் சிலர் நேற்றையதினம் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்திருந்தனர். இந்தச் சந்திப்பின்போது விரைவில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சிறீலங்காப்...

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிப்பதற்காக தொடர்ந்து போராடிவரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தெற்கில் தவறாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாக தென்னிலங்கை சிவில் சமூகப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் இன்றுடன் 11ஆவது நாளாகவும் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில் நேற்றைய தினம் இம்மக்களை தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த தேசிய மீனவர் இயக்கம், பங்குத் தந்தையர்கள், அருட்சகோதரிகள்...

“தென்னிந்த திரைப்படங்களின் தூண்டுதலால், கத்தி மற்றும் வாள்களால் வெட்டிக்கொள்ளும் சம்பிரதாயம் யாழ்ப்பாணத்திலும் நடைமுறையில் உள்ளது. இந்த வாள் கலாசாரத்தை முற்றாக ஒழிக்கவேண்டுமாயின், சட்டத்தின் ஊடாக ஆகக்கூடிய அதியுச்ச தண்டனையை வழங்கவேண்டும்” என்று, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் நீதிபதி எம். இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். அதேபோல, இந்தச் சமூக விரோத செயற்பாடுகள், நீதிமன்றத் தண்டனைகளை சவாலுக்கு உட்படுத்தும் வகையிலேயே...

யாழ்.மாவட்டத்தில் மறைமுகமாக 1600 ஏக்கர் காணியை அபகரிப்பதற்கு சதி திட்டம் தீட்டப்படுகின்றதாக வடமாகாணசபையின் 84 ம் அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாகாணசபையின் 84ம் அமர்வு நேற்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,
முதலமைச்சர் இந்த விடயத்தைக் கவனத்தில் எடுக்க...

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கமாறு கேப்பாப்புலவு மக்கள் இன்று பத்தாவது நாளாக போராட்டம் நடாத்திவரும் நிலையிலும், அவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும், தமது காணிகளை மீட்பதற்காகவும் புதுக்குடியிருப்பில் இன்று ஆறாவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் இம்மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு மட்டங்களிலிருந்தும் ஆதரவு பெருகி வரும் நிலையில், இன்று திடீரென முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த...

யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவத்தில் சந்தேகநபர்களான ஐந்து பொலிஸாரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற யாழ். பல்கலைகழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவத்தில் யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த ஜந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள்...

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில், விமானப்படையினர் பயணிக்கும் வீதியை மறித்து மக்கள் தமது போராட்டத்தை நடத்திவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பிரதேசத்திற்கு இன்று காலை திடீர் விஜயம் மேற்கொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், கரைத்துரைப்பற்று...

ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் 7 மாதக் கர்ப்பிணி, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும், இன்று (08) அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர். ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்ற கர்ப்பிணி, கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்டார். இவருக்கு நான்கு வயதில் மகனொருவனும்...

வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வண்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தில் மாணவியின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களுக்குமான பிணை வழங்க...

வடக்கிலுள்ள ராணுவத்தை வெளியேற்றும் நோக்குடன் அரசியல் பின்புலத்துடன் நடத்தப்படும் போராட்டமே கேப்பாப்பிலவு போராட்டம் எனத் தெரிவித்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியராரச்சி, குறித்த போராட்டங்களுக்கு அஞ்சி காணிகளை விடுவிக்க முடியாதென குறிப்பிட்டுள்ளார். ராணுவம் மற்றும் விமானப்படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் இன்றுடன்...

மாலபே சயிடம் தனியார் மருத்துவக் கல்லூரியை தடைசெய்யக் கோரி அனைத்துப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மருத்துவபீட மாணவர் ஒன்றிய குழு ஆகியன இணைந்து யாழ். நகரில் நேற்று போராட்டம் ஒன்றை நடத்தினர். இதன்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உருவபொம்மையும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

கோப்பாபுலவு பிலக்குடியிருப்பிலுள்ள காணிகளை மீளப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமது பெற்றோர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை ஸ்ரீலங்கா அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லாது, பெற்றோர்களுடன் இணைந்து தாமும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். ஸ்ரீலங்கா விமானப்...

படையினர் வசமுள்ள தமது காணிகளை நாளை காலை 8 மணிக்கு முன்னதாக விடுவிக்காவிட்டால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பிலக்குடியிருப்பு மக்கள் உறுதியாக தெரிவித்துள்ளார். தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி அம் மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 8ஆவது நாளை எட்டியுள்ளபோதும் அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு சாதமான...

விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரன் உள்ளிட்ட குழுவினரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், நெடியவனை சர்வதேச பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நோர்வே அரசாங்கம் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நோர்வேயில் விடுதலைப் புலிகளின் தலைவராக நெடியவன் செயற்பட்டு வருவதாக குறிப்பிடப்படுவதோடு, புலிகள்...

என்னை அசிங்கப்படுத்தி, என்மீது தாக்குதல் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாலேயே தான் கேப்பாப்புலவு மக்களைச் சந்திக்கச் செல்லவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தாம் கடந்த மாதம் 31ஆம் நாளிலிருந்து தமது காணியை மீட்க இரவு, பகலாகப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் தமது போராட்டம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனோ, சுமந்திரனோ...

All posts loaded
No more posts